பழைய மாணவர் ஒன்றுகூடல்..!

 

 



இது தொடர்பான அழைப்பிதழ் ஒரு கிழமைக்கு முதலே வந்துவிட்டது. ஆனால் என்னால் போகக்கூடிய மனநிலை இருக்கவில்லை. பல விதமான மனப்போக்குகள் அலுவலகத்தில் அவதானிப்பதால் அவற்றில் ஒரு தெளிவையும், விளக்கத்தையும் கொண்டுவர முனைந்தேன். ஆனால் பலன் வந்ததாகத் தெரியவில்லை. அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போனது. சில சமயம் சிலருக்கு நன்மையாக அமையக்கூடிய காலநிலை முன்பு இருந்தது. நான் வழமையாகச் சொல்வதுபோல்,  எனது மனதிற்கு பிடிக்காவிட்டாலும் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிடுவேன். ஒற்றுமையையும், அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் எடுக்கப்பட்ட முடிவுகளே அவை. ஆனால் அம்முடிவுகளால் சிலருக்கு பாதகமான நிகழ்வுகள் நடந்திருக்கலாம்.  பெரும்பாண்மை என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டில் சிறுபாண்மையினருக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கின்றதோ அதுபோலவே இதுவும் இருக்கின்றன. நான் பலருக்கு நண்மை என சில முடிவுகளை எடுக்க, அது சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.  ஆனால் போகப்போக அது பெரும்பாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபாண்மையினரின் நன்மைக்கான முடிவுகளாகத் தெரிந்தன..! பலருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது பிந்தியே புரிந்தது..! பிழை என்று தெரிந்தும் பொறுப்பதைவிட, எவ்வளவு சிக்கல் வந்தாலும் திருத்துவதே சரியெனப்பட்டது. எனது மனதிற்கு ஒரு திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைத்தது.

இந்தச் சாதனையுடன், இன்றைய எனது பழைய பாடசாலை பழைய மாணவர் ஒன்றுகூடலை மறந்து, வேறுபல வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். எனது நண்பர் ஒருவர் போன் எடுத்து, என்ன செய்துகொண்டிருக்கின்றீர்..? “நிகழ்வுக்கு வரவில்லையா..?” என்றார். அதன் பின்னரே அலுவலகவேலையில் முழ்கியிருந்தது புரிந்தது. இருந்தாலும் பரீட்சைகள் நடப்பதால், அவற்றை முடித்துக்கொண்டே, எனது பாடசாலைக்கு, இன்னொரு நண்பரையும் அழைத்துக்கொண்டு சென்றேன். அங்கே, நிதிக்காகவும், நியதிக்காகவும் ரீசேட்டுக்கள் கொடுத்தார்கள்..! நானும் எனக்கு அளவில்லாவிட்டாலும் 2 ரீசேட்டுக்கள் வாங்கி, கூட வந்த நண்பருக்கும் ஒன்றைக்கொடுத்தேன். நாட்டு நிலமையில் இது தேவையில்லை என்றாலும், வருடத்தில் ஒரு நாளாவது இப்படிக்கொண்டாடாமல் விட்டால், நாளை என்ன நடக்கும்..? என்று யாருக்கும் தெரியாது..? இன்றே கொண்டாடுவோம் என்ற முடிவில் உள்ளவர்களுக்கு நானும் உதவினேன்.

பாடசாலை நிகழ்வுக்குப் போன மகிழ்வு எம்மை மேலும் இளமையான மனநிலைக்கு கொண்டுவந்தது. பாடசாலை கீதம் படித்தபோது, உண்மையில் எங்கோ கேட்ட குரல் போல் நெஞ்சத்திற்குள் ஒலித்தது..!

மனம் நிறைந்தது. புகைப்படம் எடுத்து, அனைவரிடமும் அன்புடன் விடைபெற்றோம்.

ஆ.கெ.கோகிலன்

12-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!