நம்பிக்கையீனம்..!

 



இன்று எனது நிறுவனப் பெண் ஊழியர்கள் சிலர் என்னுடன் கதைத்தார்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள். பல சேவைகளை  நிறுவனத்திற்குச் செய்துள்ளார்கள். இருந்தாலும் எல்லாவற்றிற்கும் சத்தம் போட்டுக்கதைப்பதால் பலர் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை.

நான் இந்த நிறுவனத்திற்கு வந்த காலத்தில், அவர்கள் இருவரும் இரு துருவங்களில் நின்று, ஆளாளுக்கு குறைசொல்வார்கள். எதிரும் புதிருமாக, கீரியும் பாம்புமாக என எப்போதும் எதிர் திசைகளில் நின்றார்கள்.

அனைவரது செயற்பாடுகளையும் அவதானித்த நான், அவர்களிடம் நீங்கள் இப்படி ஆளுக்காள் அடிபடுவதை விட கொஞ்சம் அமைதியாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கதையுங்கள். பிரச்சனைகள் குறையும் என்றெல்லாம் சொன்னேன். கேட்டார்கள். பிரச்சனைகள் குறைந்தன. நான் கூடப் பணிப்பாளராக வர இவர்களும் காரணமாக இருந்திருக்கலாம்.

தற்போது, பல பிரச்சனைகள் வந்து போய்விட்டன. காலம் மாறிவிட்டது..! வயதுகள் கூடிவிட்டது..! பொருளாதாரப் பிரச்சனைகள் கூடக் குடும்பப் பிரச்சனைகளும் வந்துவிட்டன..!   எல்லாவிடயங்களையும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய மனநிலைகளில் யாரும் இல்லை.

இந்த நிலையில், இவர்கள் என்னிடம் நீங்கள் மிகவும் நல்லவராக இருப்பதே, இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்றார்கள்..!

நான் என்ன சொல்ல முடியும்..? சிரித்துக்கொண்டு, அவர்கள் சொல்வதை அவதானித்தேன்..? அது சரியாகவும் இருக்கலாம். தப்பாகவும் இருக்கலாம். நான் சிறுவயதில் பல தப்புக்கள் செய்ததால், பல பாடங்கள் படித்துள்ளேன். இனிமேல் அவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்காக என்னால் இயன்றவரை முயல்கின்றேன். இதனால் பலரை, தண்டிக்காமல் மன்னித்துவிடுகின்றேன். பல கோணங்களில் சிந்திக்க மனம் வருகின்றது..!  இறுதியில், நபர்கள் மேல் கோபப்படுதைவிட இயற்கையையும், இறைவனையும் கோபிக்கவே மனம் வருகின்றது.

அறியாமையாலும், போதிய நம்பிக்கையை என்மீது வைக்காமையாலும் ஏற்படும் நிலையிது..! இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னை மாற்றவும் முடியாது..! எனது இந்தக்குணத்தால் தான், என்னால் இந்த நிலைக்கு வரமுடிந்தது. இந்தக்குணம் இல்லை என்றால், நான் இந்நிறுவனத்தில் நிலைத்திருக்க வாய்ப்பே இல்லை.

இப்போது, இடமாற்றத்தை செய்ய பணிப்பாளர் நாயகத்திடமே கேட்டுள்ளேன். பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று..!

ஒன்று மட்டும் நிச்சயம் எது நடந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு, எனது முயற்சியையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டே இருப்பேன்.

மரணம் வரும் வரை அது தொடரும்.

 

ஆ.கெ.கோகிலன்

17-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

இயற்கை தந்த வலி..!