உல்டா..!

 



இன்று காலை வழமைபோல் எழுந்து எனது கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் போது மூத்த மகள் அப்பா என்னை உடனே தனது ரியூட்டறிக்கு கொண்டு சென்றுவிடும்படி..!

வழமையாக அப்படிக் கேட்காதவள் இன்று கேட்கும் போது எப்படி மறுப்பது..?

இன்று காலை கடும் மழை பெய்துகொண்டிருந்தது. நேற்றிரவு தொடங்கிய மழை விட்டபாடில்லாமல் தொடர்ந்தது.

உடனே நானும் சரி என்று வெளிக்கிட்டு, அவளையும் காரில் ஏற்றிக்கொண்டு செல்ல, சரியாகக் காலை 7.00 மணியாகிவிட்டது..!

அவளது வகுப்பும் தொடங்கியது..! நானும் அப்படியே அலுவலகம் சென்று அங்குள்ள காலை நடைமுறைகளை அவதானித்தேன். எனது மகளுக்கு மேக்கப்செய்த பெண் பிள்ளை அங்கே பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்ற வந்திருந்தார். பார்க்க கவலையாக இருந்தது. தந்தையின் கவனிப்பில்லாமல், தானும் தாயும் சேர்ந்து தமது வாழ்க்கையைத் தீர்மானிப்பதும், அதில் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு, தாண்டிச்செல்வதும் எவ்வளவு சவாலான காரியம்..! அந்தப் பெண் அதனைச் செய்தார். அவரைப் பாராட்டி, மேலும் ஊக்கத்தை வழங்கினேன்.

வாழ்க்கைக்கு முக்கியம் முயற்சியே..!

இந்தக்கருத்தை பல முறை அவருக்கு விளக்கி, கவலைப்படாமல் இறைவன் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு, உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். மற்றவை எல்லாம் தானாகவே நடக்கும். எனப்பல நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறி அவரை மேலும் உரப்படுத்தினேன்.

அதனைத்தொடர்ந்து, காலை உணவை எடுத்துக்கொண்டு அமர, நிறைய வேலைகள் வந்தன. அவற்றை முடித்துக்கொண்டு, வெளிக்கிட மாலை 1.00 மணி ஆகிவிட்டது. பின்னர், வங்கி சென்று, தங்கையனுப்பிய பணத்தை எடுக்க முயல, வங்கி ஊழியர் பணம் வரவில்லை என்றார். அதனுடன் மெனக்கிட நேரமில்லாமல்,

விரைவாக வீடு வந்தேன். உடனேயே உடையை மாற்றிக்கொண்டு, அண்மையில் இறந்த உறவினர் வீட்டிற்குச் செலவுச்சாப்பாடு உண்ணச் சென்றேன்.

உண்டபின்னர், சேமிக்கும் வரை அங்கிருந்து கதைத்துவிட்டு, வீடு திரும்பி, சில வளவு வேலைகளைச் செய்து, உடலை மேலும் களைக்க வைத்தேன். அதனைத்தொடர்ந்து, குளித்து, இறைவனை வணங்கி, மாலைத் தேநீர் அருந்தி, மனைவி மற்றும் இரண்டாவது மகளை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் சென்று சில துணிமணிகளைத் தீபாவளிக்காக வாங்கிவிட்டு, திரும்பும்போது, இரவுச்சாப்பாடாகக் கொத்துரொட்டியையும் வாங்கிவந்தேன்.

மூத்த மகள் போன கிழமையே கொத்து வாங்கிவரும்படி கேட்டாள். அப்போது, எனது மனம் யாழ்ப்பாணம் போகத் தயாராக இல்லை. இன்று தீபாவளி நெருங்குவதால் தவிர்க்காமல் வாங்க முடிந்தது.

நானும் பிள்ளைகளும் மச்சத்துடன் மகிழ்ந்தோம். மனைவியும், மாமியும் சைவத்துடன் இரவுணவைக் கடந்தார்கள்.

வழமையாகக் காலை குளித்து சுவாமி கும்பிட்டால் தான் ஒரு நிம்மதி வரும்..!

இன்று தலைகீழாக எல்லாம் உண்டதன் பிறகே குளித்து, சுவாமியைக் கும்பிட்டேன். இது நான் போட்ட திட்டம் கிடையாது..! எல்லாம் இறைவன் போட்டதிட்டம்..! என்கடமை பணிசெய்து கிடப்பதே..!

 

ஆ.கெ.கோகிலன்

10-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!