சோதித்த காத்திருப்பு..!

 



கண்ணைத்திறந்து பார்க்கும் போது நான் வந்த குளிர் சாதன பஸ் வண்டி புத்தளம் பகுதியிலுள்ள தேனிர்கடையில் நின்றிருந்தது..! உடனே நானும் இறங்கி, வழமைபோல்  நிரம்பிய உடல் நீரை வெளியேற்றி, வறண்ட நாவுக்கு சுவையூட்ட நெட்ஸ்கபே கோப்பியை வாங்கிக்குடித்தேன். சூடு அதிகமாக இருந்ததால் நக்கை அள்ளியிருந்தது..! கொஞ்ச நேரம் வெளியே நின்றுவிட்டு, பஸ் ரைவர் ஏறியதும் நானும் ஏறி உட்காந்தேன்.  அப்போது மணி ஏறக்குறை 3 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னும் அனுராதபுரம் தாண்டவில்லை..! நான்  வெள்ளவத்தை குளிர் சாதன வசதியுள்ள பஸ் நிலையத்திற்கு வரும்போது நேற்று இரவு 8.30 இருக்கும். எமது பணிப்பாளர் நாயகம், வெற்றிகரமாக பட்டமளிப்பு விழாவை முடித்ததற்காக, ஒரு சூடான விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்..! அந்த விருந்தால் மகிழ்ந்து, அவருக்கு நன்றி சொல்லி, மற்றவர்களுக்கு  “Bye” சொல்லி,  வந்து சேரவே அந்த நேரம் ஆகிவிட்டது.

பஸ்ஸை செயலமர்வு தொடங்கிய முதல் நாளே போன் மூலம் புக்பண்ணிவிட்டேன். உடனே பணம் செலுத்தாவிட்டால் சீற்றை உறுதிப்படுத்த மாட்டார்கள், எனச்சொன்னார்கள். நான் எனது நிலமையைச் சொல்லி, உடனே பணம் செலுத்த முடியாது. நிச்சயம் வரும் போது தருவேன். தற்செயலாக வரமுடியவில்லை என்றால் முற்கூட்டியே சொல்லிவிடுவேன், எனச்சொன்னேன்.  இருந்தாலும் அவர்கள் இடையில் “வருவீர்களா..?” எனக்கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.

வழமையாகப் பணம் கட்டாமல் உறுதிப்படுத்த மாட்டார்கள். நான் எனது நிலைமையை விளக்க, ஏதோ ஒத்துக்கொண்டார்கள்.

பஸ்ஸில் ஏறும் வரை நம்பிக்கையில்லை. இல்லை என்றால் என்ன..? அடுத்த திட்டம் கையில்  இருந்தது..!  அது ”அடுத்த நாள் புகைவண்டியில் போவது..!”

ஆனால் நினைத்தது போலன்றி, சீட் கிடைத்ததால் பஸ்ஸில் ஏறிவிட்டேன். அப்போது தான் கேட்டேன் ” பஸ் KKS  வீதியில் போகுமா என்று..? “இல்லை, பருத்தித்துறை போகும்..” என்றார்கள். அந்நேரம் யாழ்ப்பாணம் போனால் சரி என்று தோன்றியது.

பிறகு ஏதாவது வழியைப் பார்ப்போம் என்று ஏறினேன்.

பஸ்  காலை 6.00 மணிக்குக் கிட்டவாக   யாழ்வந்தது. வேறு பஸ் ஏற்பாடுசெய்து தருவதாகத் தெரியவில்லை.  ஏற்கனவே பிந்தியதாலும், வரும்போது பஸ்ஸில் அவர்களது கதைகள் எனக்கு வேறுப்பை ஏற்படுத்தியதாலும் அவர்களிடம் ஒன்றும் கேட்காமல், நேரடியாகத் தனியார் பஸ் நிலையத்திற்குச் சென்று, தனியார் வண்டி ஒன்றில் ஏறினேன். அதுவும் மிகத்தாமதமாக வெளிக்கிட்டு, என்னைச் சோதித்தார்கள்.

ஒருவாறு வீடுவந்து சேர காலை 7.00 மணியாகிவிட்டது. பின்னர் சாப்பிட்டு, சுப்பர் சிங்கர் பார்த்துவிட்டுப் படுத்து, 1.00 மணிக்கு கிட்டவாக எழும்பி, முடிவெட்டச் சென்றேன். அங்கேயும் நீண்ட நேரம் காத்திருந்து, முடிவெட்டி, வீடுவந்து குளித்துச் சாப்பிட 3.00மணியாகிவிட்டது..!

நேற்றிரவு தொடக்கம், இன்றைய நாள் முடியும் வரை காத்திருப்பையும், சோம்பலையும் இயற்கை தந்ததாக உணர்ந்தேன்.

 

ஆ.கெ.கோகிலன்

28-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!