தோல் வியாதி..!

 



பொதுவாகத் தற்கால வைத்தியர்கள் என்றாலே பணம் கறப்பவர்கள் என்ற எண்ணமே மனதில் முதலில் வருகின்றது..! வைத்திய சேவையைக் காட்டிலும் பணத்தையும், பகட்டையும் வைத்தே அவர்களின் கடமைகள் இருப்பது  கவலையளிக்கின்றன..!

மருத்துவ வியாபாரம் என்பது மிகவும் இலாபம் கொழிக்கும் ஒரு துறையாக உலகில் மாறியிருப்பது என்னைப்பொறுத்தவரை அழிவுகளுக்கான அறைகூவலாகவே என்சிறிய அறிவுக்குப் புரிகின்றது.

வைத்தியர்கள் மேலுள்ள பயத்தால் வைத்தியசாலைகளை நினைப்பதே இல்லை. இறைவனும், இயற்கையும் அதனைப் புரிந்துகொண்டு இயன்றவரை மருத்துவமனைகளை நாடாமலே என்னை வைத்திருக்கின்றன..!

ஏதாவது வருத்தம் வந்தால் அம்மாவிடம் அல்லது மனைவியிடம் அல்லது பிள்ளைகளிடம் சொல்லுவேன். அவர்கள் சொல்லும் வழி முறைகளைப் பின்பற்றுவேன். பெரும்பாண்மையான வருத்தங்கள் மாறிவிடும்..!

இந்த மாதிரியான சூழலில் அண்மையில் கொழும்பிற்கு இருமுறை அடிக்கடி போகவேண்டிய சூழல் வந்தது. வெளியே சாப்பிடவும், தங்கவும் நேரிட்டது. இதனால் ஏதாவது அலர்ஜி வந்ததா என்று தெரியவில்லை. உடலில் பருக்கள் சில வந்தன..! குறிப்பாக முகத்தில் வந்தது, சில நாட்களில் காய்ந்து, காணாமல் போனது..!

அதேவேளை மார்புப் பகுதியில் பல பருக்கள் வந்து, ஒரு வித புண்கள் போன்று வலித்தன. கைபட்டாலே நோவைக்கொடுத்தன. ஸ்பிரீட், விளக்கெண்ணை மற்றும் சித்தாலேப்ப போன்ற மருந்துகளைத் தடவிவந்தேன். குறைவதாகத் தெரியவில்லை. அம்மாவிடம் கேட்க, எலுமிச்சைப் பழத்தை வெட்டி அந்த இடத்தில் பூசச்சொன்னார். அவர் சொன்னது போல் சில நாட்கள் தொடர்ந்து செய்தேன். இப்போது வலி குறைந்து, பருக்கள் வற்றி, மாறத் தொடங்கியது. இப்போது, அந்த இடத்தில் கறுப்புப் புள்ளிகள் போல் பல தழும்புகள் இருக்கின்றன.

என்ன காரணத்தால் வந்தது என்பது தெரியாது. மகள் சொன்னார் ஏதோ ஒரு வைரஸால் பரவும் சொறியாஸிஸ் (psoriasis) என்று..!

நான் நினைக்கின்றேன் இது வெப்பச்சூழலால் வந்த பருக்கள் (Heat Rash) என்று..!

என்னவோ மாறிவிட்டது..! வருத்தங்கள் வராமல் உடலைப் பாதுகாப்பதே சிறந்தது. ஆரோக்கியமும் ஒரு வித முதலீடே..!

 

ஆ.கெ.கோகிலன்

14-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!