வெறுக்க வைத்த திட்டம்..!

 


இன்று காலை 3.00 மணிக்கு முன்னரே எழும்பிக் குளித்து, பின்னர் சிறிது நேரம் படுத்து, பட்டமளிப்பு விழாவிற்கு நேரத்தோடு போவதாகத் திட்டமிட்டிருந்தேன்.

எனது  நிறுவன வாகனத்தை இந்நோக்கத்திற்காக ஒரு கிழமைக்கு முதலே அனுப்பி இருந்தேன். அவ்வாகனத்தைத் தயார்படுத்துவதற்காக பல வேலைகளை நானும், சாரதியும், கணக்காளரும் சேர்ந்து செய்திருந்தோம். அதற்கான காரணமே, “நேரத்திற்கு எம்மாலான சேவைகளை தலைமையகத்திற்கு வழங்குவதே..”

இந்த நிலையில் நேற்றிரவு, எமது உத்தியோகஸ்தர், நிகழ்ச்சித் தொகுப்புச் செய்யும் பிள்ளைகளை நேரத்திற்கு கொண்டு செல்ல இருப்பதால், தாங்கள் முதலில் செல்வதாகவும், பின்னர் என்னையும், ஏனைய இருபிள்ளைகளையும் வரச்சொல்ல, அதற்கு நானும் ஒத்துக்கொண்டேன். நான் எப்போதும் நேரத்தோடு செயற்படுவது வழக்கம். அதைப்போல் மற்றவர்களையும் நினைத்துவிட்டேன். பின்னர் நிலமை மிக தர்மசங்கடமாகப் போய்விட்டது.

அத்துடன் எமது வாகனத்தில் வர வேறு ஒருவரும் உதவி கேட்ட மறுக்கமுடியாமல் அனைவரையும் ஏற்றிக்கொண்டு போக நேரம் நெருங்கத் தொடங்க, இனிமேல் இவ்வாறு இரண்டாவது தடவைப் பயணத்திட்டத்தை நடாத்தக்கூடாது என்று முடிவெடுத்து, சாரதியிடமும், தலைமையகத்திற்கு உதவ வந்த உத்தியோகத்தருக்கும் சொல்லிவிட்டு, எனது நிலை பணிப்பாளர்களுடன், அவர்களது வாகனத்தில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இருந்தாலும், அன்று வாகனத்திற்குள் இருந்துகொண்டு, நேரத்திற்கு வந்து, பிந்திப்போவதை எண்ண மனம் கஷ்டப்பட்டது..! அன்று என்று பார்த்து, அதிக வாகன நெரிசல் இருந்தது. மற்றும் மாணவர்களை ஏற்றி இறக்குவதால், நேரம் தாமதமாவதை தவிர்க்கவும் முடியாது. அவர்கள், மேக்கப் போட்டு, ரெடியாகி வெளியே வர, அதற்கு எடுக்கும் நேரத்தை வரையறுக்க முடியாது. நான் முட்டாள் தனமாக இருந்துவிட்டேன். முதலே பலர் போனார்கள். அவர்களுடன் நேரத்திற்குப் போய் இருக்கலாம்.

இவ்வாறு மனதிற்குள் புலம்பிக்கொண்டு, மற்றவர்களுடன் கோபித்துப் பலனில்லை என்பதையும் உணர்ந்துகொண்டு, பொறுமையாக இருந்தேன்..!  அந்த நேரம் மழையும் தூறிக்கொண்டிருந்தது. நல்லவேளை 8.00 மணிக்கு சில நிமிடங்கள் முன்னர் போய் சேர்ந்துவிட்டேன். உடனேயே ஓடிச்சென்று அனைத்து காரியங்களையும் ஆற்றி, சரியாக  எனது இடத்தில்போய் நின்று, பீடாதிபதிகள் அணியுடன் மண்டபத்திற்குள் போகக்கூடியதாக இருந்தது. மிகப்பெரிய நிம்மதி..! நேரத்திற்கு வரமுடியும் என்ற நம்பிக்கை குறைந்தாலும், வந்து சேர்ந்தது ஆச்சரியமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. அத்துடன் இனிமேல் இவ்வாறான முட்டாள் தனமான விடயங்களில்  மாட்டக்கூடாது என்ற முடிவையும் எடுத்தேன்.

அதேபோல்  அனைத்து அமர்வுகளையும் முடித்துக்கொண்டு, எனது சிங்கள நண்பர்களுடன் நேரத்திற்கு தெஹிவளை சென்றுவிட்டேன். வழமைபோல் குளித்து, சற்று உறங்கிப், பின்னர் இரவு உணவை முடித்து, நாளை எனக்கான வேலைசெய்யத் தயாராக, அடுத்த தலையிடி இலகுவாக இறங்கியது..! நாளை இன்னொருவருக்கு வழங்கப்பட்ட வேலையையும் நான் செய்ய வேண்டும். என்னுடைய வேலைக்குத் தயார்படுத்தவே, ஒரு கிழமைக்கு மேல்  இருந்தேன். இரவு, சொல்லி நாளை செய்ய எப்படி முடியும்..? முயற்சி செய்கின்றேன் என்று சொல்லி, என்னால் இயன்றதை முயன்றேன்..!

எனக்குத் தரப்பட்ட வேலையை மாத்திரம், திருப்தியாகச் செய்துவிட்டு நிம்மதியாக இருக்க முயல, இன்னொருவருடைய வேலையைத் தந்து, என்னுடைய வேலையையும் சொதப்பக்கூடிய நிலை வந்ததையிட்டு, யாரை நோக..?

சரி என்னால் இயன்றதை முனைவோம் என்று, இரவு முயற்சிசெய்துவிட்டு, உறங்கினேன்.

 

ஆ.கெ.கோகிலன்

20-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!