கடந்த கடுமையான நேரம்..!

 



இன்றும் மூன்று மணிக்கே எழுந்து, தயாராகி, யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த எமது நிறுவன மற்றைய ஊழியர்களையும் நேரத்திற்கு வர சொல்லிவிட்டு நானும், சொன்னதைப்போல் நேரத்திற்கு வந்துவிட்டேன். மழையும் சாதுவாகப் பெய்துகொண்டுதான் இருந்தது.

பஸ்ஸில், என்னை விடப்பலர் இன்னும் நேரத்திற்கு வந்து, என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். சந்தோசமாக இருந்தது. இருந்தாலும் பெண்கள் வந்து சேரவில்லை. அவர்களை விரைவாக வரச்சொல்லிவிட்டு, அந்நேரத்தை மகிழ்ச்சியாகக்க, அனைவரையும் இணைத்துப் பல புகைப்படங்களை எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட்டோம்..! பின்னர் பெண்களும் ஒருவாறு நேரத்திற்கு வந்தார்கள்..!

அவர்களையும் சேர்த்துப்படங்கள் சில எடுத்துவிட்டு வெளிக்கிட்டோம். பஸ்ஸூம் BMICH இற்கு நேரத்திற்கு  வந்தது..! நாங்களும் எல்லாக்காரியங்களையும் நேரத்திற்கு முடித்து தயாராக இருந்தோம். தனது கடமையான பெயர் வாசிப்பை, தொண்டை கட்டியிருப்பதால், எனக்கு தந்தவரும் வந்திருந்தார்..! பெயர்கள் பட்டியலின் வன்பிரதியையும் கொண்டுவந்திருந்தார்..! தன்னால் இயலாது என்பதைச்சொல்லி, என்னையே அந்த அழைப்புப் பணியைச் செய்யச்சொன்னார்.

இறுதிநேர முடிவு என்பதால் சரியாகச் செய்யமுடியாது என்பது தெரிந்தாலும், இயன்றவரை சரியாகச் செய்ய அந்த இடத்திலே முயலுவோம் என்ற எண்ணத்தில் இருந்தேன். விடு விடுவென அந்த நேரமும் வந்தது..! எனது உறவினரும், யாழ் மாவட்ட அரச அதிபரும் அவரது மனைவியும் முன்வரிசையில் இருந்தார்கள்.  அவர்களின் மூத்த பிள்ளை கூட எமது நிறுவனத்தில் படித்து, இந்த முறை பட்டமளிப்பில் கலந்துகொள்கின்றார்..! இந்தச்சூழலில் பதட்டத்துடன் எனது கடமையையும், இறுதியாகத் தரப்பட்ட மேலதீக கடமையையும் என்னால் இயன்றவரை செய்துமுடித்தேன்..! தவறுகள் பல இருந்தாலும், எல்லோரும் ஏதோ என்னை மன்னித்துவிட்டார்கள்..! நானும் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

 

இன்று என்று பார்த்து, அவருக்கு தொண்டைகட்டியது  எனக்கு ஆச்சரியமாக இருந்தது..! இயற்கையின் சோதனை என்று அதனை எடுத்துக்கொண்டு, ஒருவாறு அந்த நேரத்தைக் கடந்து விட்டேன்.

எந்தக்கஷ்டம் வந்தாலும், ஒருவாறு சமாளித்து, அந்த நேரத்தை கடந்துவிட்டால் போதும்..! தந்ததும் இயற்கையே..! அதற்கு உதவியதும் இயற்கை..!  இவ்வாறாக இந்தச்சூழல், கடந்து போனது..!

 

என்னுடன் வந்தவர்கள், அந்த அமர்வு முடிந்ததும், மாணவர்களுடன் படங்களை எடுத்துவிட்டுப் பின்னர் மதிய உணவையும் எடுத்துக்கொண்டு, யாழ் திரும்பினார்கள். நான், அன்றும் மாலை வரை மண்டபத்திலே தவம் இருந்தேன். முடிந்ததும், எனது சிங்கள நண்பர்களுடன் தெஹிவளை விடுதிக்குச் சென்று வழமைபோல் செயற்பட்டேன்.

 

ஆ.கெ.கோகிலன்.

21-10-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!