டயரி (டைரி)

 


திரீல் படமாகவும், அதே நேரம் Time Traveler concept இல் வரும் Creation Recapture என்ற ஒரு புதிய வடிவத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் உண்மையில் ஒரு வித்தியசமான அனுபவமாக இருந்தது.

பொலிஸ் ரெயினிங்கில் கொடுக்கப்பட்ட ஒரு அசைன்மென்ட்டிற்காக துப்புத்துலக்க வெளிக்கிட்டு, இவை எல்லாவற்றிற்கும் ஒரு பிரபஞ்ச சம்பந்தம் இருப்பதாகக் காட்சிகளை நகர்த்தி, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள் வருவதும், அதனூடாக உண்மைகளைக் கண்டறிவதும் கனவும், நிஜமும் கலந்தது போன்ற ஒரு உணர்வைப் படம் தந்தது. அது மாத்திரமன்றி, படம் சில இடங்களில் திகில் படங்களைப்போல் மிரட்டியும், சில இடங்களில் துப்புத் துலக்கும் பொலிஸ் படங்கள் போல் குற்றவாளிகளை விரட்டுவதாகவும் இருந்தது.

பார்க்கும் போது, சில இடங்களில் அமாண்யசக்தி இருப்பதாகவும், பஸ்ஸே ஒரு “பேய் பஸ்” போல காட்சி அமைக்கப்பட்டிருப்பதும் வித்தியாசமாக இருந்தது.

துப்பே இல்லாத கேஸை வைத்து, அந்தகேஸோடு சம்பந்தப்பட்ட அனைத்து துப்புக்களும் அழிக்கப்பட்டதை, ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கதையை அமைத்துள்ளார் இயக்குனர்  இன்னாசி பாண்டியன் (Innasi Pandiyan)

பொதுவாக இப்படியான கதைகளில் யார் நடித்தாலும் ரசிக்கலாம். ஏனெனில் கதையில் ஒரு புதுமையுண்டு. இங்கு அருள்நிதி நாயகனாகவும், பவித்திரா மாரிமுத்து நாயகியாகவும் நடித்திருந்தாலும் படத்தில் பல பாத்திரங்கள் கண்ணுக்குள் நிற்கின்றன..!

இரவு நேரம் மென்மையான பாடலுடன் உதகை செல்லும் மலைப்பாதையில் 13ஆவது ஊசி வளைவில்  (Hairpin Curve) ஒரு விபத்தோடு படம் தொடங்கும்போதே  ஏதோ வைத்துள்ளார்கள் என்பது புரிந்தது. கொள்ளையர்களின் சில காட்சிகள் தீரனில் பார்த்தது போல் இருந்தது..! பின்னர் பஸ்ஸில் வரும் காட்சிகள், இதுவரை பார்க்காத விதத்தில் ஒவ்வொரு பிரச்சனைகளுடன் ஒவ்வொருவரும் ஏறுவதும், அதற்குள் இருக்கும் பிரச்சனைகளுடன் ஒன்றிப்பதும், இடையில் நடக்கப்போவதை முன்னுக்கு உணர்த்தும் காட்சிகளும், இதனூடாக நடந்தவை எல்லாம் மாயை போன்றும் உண்மையான சம்பவம் நடந்தது 16 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதும், இரவு மலையுச்சியில் இருந்து, விழுந்த பஸ்ஸூம் அதற்குள் இருந்தவர்களையும் தேடும்போது 16 வருடங்களுக்கு முன்னர் விழுந்த பஸ்ஸைத்  திரும்ப எடுப்பதும், அந்த இடத்தைக்காண்பிக்கவே ஹீரோவின் தாய் தந்தையர் இறந்ததும், இரண்டும் ஒரே சமயத்தில் நடந்ததால்,  சிறுவனாக இருந்த ஹீரோ வளர்ந்தபின் எல்லாவற்றிற்கும் விடையளிப்பதுடன், இதனுடன் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தண்டனையையும் வாங்கிக்கொடுக்கின்றார்..!

பெப்ரவரி 29,  லீப் வருடத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வு திரும்பத் திரும்ப வரும் என்பது போலவும், அதனைத் திரும்பப் பார்க்கச் செல்ல அதே பஸ் திரும்ப வருவதாகவும் காட்டி, அதற்குள் சில சென்டிமென்டுகளையும் வைத்து, வலுவூட்டியுள்ளார்கள்..!

தொழில்நுட்பம், இசை, காட்சியமைப்புக்கள், ஒளிப்பதிவு என எல்லாம் தரமாக இருந்தது. டயரி நிச்சயம் வித்தியாசமான ஒரு படம்.



 

ஆ.கெ.கோகிலன்

06-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!