தோல்வியின் பின் வெற்றி..!
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், எமக்கு
இருக்கும் அளவுக்கு அதிகமான தன்நம்பிக்கையும் தோல்வியைக் கொண்டுவரலாம் என்பதை அண்மையில்
வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாது சென்ற நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின்
தோல்வியில் இருந்து அறிய முடிகின்றது..! வெற்றி தோல்வி என்பது எல்லாத் துறையிலும் ஏற்படுவது
தான். நாம் நினைத்த மாதிரி எதுவும் தொடர்ந்து நடக்கும் என்று நினைப்பது உண்மையில் தவறு
தான். ஆனால், சிலருக்கு வரும் தொடர்வெற்றிகளால் வரும் அளவுக்கு அதிகமான தன்நம்பிக்கை,
அவர்களின் செயல்களில் பெரும் நம்பிக்கையைக்கொண்டுவரும்..! அப்படி இருக்கின்ற சந்தர்ப்பத்தில்,
அவர்களுக்கு ஏற்படும் தோல்வி பெரும் பாடத்தையே கற்றுத்தரும்..!
இணைய ஊடகங்களில் ஒவ்வொரு நடிகர்களின் படங்கள் வரும்போது,
அவர்களைப் பிடிக்காத மற்ற நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் செயல்கள், பெரிய வெறுப்பையும், அந்த அதீத ஆசைகொண்ட நடிகர்களின் உண்மை முகத்தை அறியாமல்,
ஏதோவோர் குருட்டு விசுவாசத்தில் செயற்படுகின்றார்கள்.
IMDb rate (Internet Movie Database) என்பது ஒரு திரைப்படத்தைப்பற்றிய
ரசிகர்களின் தனிப்பட்ட கருத்துக்களின் சராசரி. இது குறைவாக இருந்தால் படம் பிடிக்கவில்லை
என்று அர்த்தம். 10இற்கு 7 மேல் இருந்தால் படம் பலருக்குப் பிடித்துள்ளது என்று அர்த்தம்.
இதனைக்கூட இணையக்கூலிகளை வைத்து மாற்ற முடியும் என்பதும் ஏற்றுக்கொள்ளகூடிய ஒன்றே..!
உண்மையான படத்தின் வெற்றி என்பது மக்களை ஏமாற்றாமல் படம்
வரவேண்டும். அது தான் காலத்திற்கும் நிலைக்கும். பணம், பதவி, பலத்தை வைத்துக்கொண்டு
காட்டும் பந்தா நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது.
தீபாவளி அன்று பல திரைப்படங்கள் வந்தாலும் S.R.பிரபு தயாரிக்கும்,
கார்த்தி நடிக்கும் குறித்த படத்தில் மக்களுக்கு நல்ல ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால்
படம் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத படியால், கார்த்தியின் ரசிகர்களே கத்திக் கதறிப்
போட்ட வெறுப்பால், படத்தைப்பார்க்கவே தூண்டவில்லை.
குக்கூ, ஜோக்கர் போன்ற நேர்த்தியான படங்களை இயக்கிய ராஜூ
முருகன் என்ற சிறந்த இலக்கியவாளர் இயக்கிய படமா இது..? என ரசிகர்கள் விசனப்பட்டார்கள்..!
இவர் நீண்டகாலமாக ஆனந்த விகடனில் எழுத்தாளராக
இருந்தவர்..!
இவரின் படைப்பு, பகிடியாக மாறியது அதிசயம் தான்..!
ஆரம்பத்தில் சொன்னது போல் வெற்றிகளை நிலைநிறுத்திக்கொள்ள,
எமக்கான கடமைகளைச் மிகச்சரியாகச் செய்ய வேண்டும்.
அதேபோல், தோல்விகளை மறைக்கத் தேவையில்லை..! ஆனால், அவற்றை
மறந்து, மீள ஏழ தொடர்ந்து முயலவேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
16-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக