மார்க் அன்டனி..!

 



தமிழ் படங்கள் இப்போது கற்பனையான பல விடயங்களில் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.

கதையில் உண்மைத்தன்மை கேள்விக்கூறியாக இருந்தாலும், நடிப்பாலும், காட்சியமைப்பாலும், இசையாலும் படத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளார்கள்.

இந்தப்படத்தின் கதை தான் என்ன..?

Time Traveler Concept இல் ஒரு போன் கோல் மூலம் தற்காலத்தில் இருந்து கடந்த காலச்சூழலுக்கு போன் செய்து, இப்ப இருக்கும் தவறுகளைத் திருத்த முயற்சிக்கும் ஒரு நபரின் முயற்சியை ஆரம்பத்தில் சிறிது குழப்பமாக இருந்தாலும் பின்னர், மிகச்சிறப்பாகவும், நகைச்சுவையாகவும், சொல்லுகின்றது இந்தப்படம்..!

புரட்சித்தளபதி நடிகர் விஷால் ஹீரோவாக இருந்தாலும்  நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூரியாவின் மாறுபட்ட நடிப்பு படத்தில் ஒரு ஈர்ப்பைக் கொண்டுவந்துள்ளது. இருவரும் இரட்டை வேடம் என்பதால் படமே கொண்டாட்டம் தான். இது போதாது என்று ரித்து வர்மா நாயகியாகவும், சுனில் தொடங்கிப் பல நடிகர்கள் தமது சிறப்பான நடிப்பையும் வழங்கி படத்தின் தரத்தை உயர்த்திப் பிடித்துள்ளார்கள். இயக்குனர் செல்வராகவன் ஒரு விஞ்ஞானியாக  நடித்து, இரு கால கட்டங்களை இணைக்கும் ஒரு போனைக்கண்டுபிடித்து, இந்த விசித்திரக்கதைக்கு களம் அமைத்துள்ளார். நடிகர் கார்த்தி கூட படத்தின் கதைக்களத்தை தனது குரல் மூலம் சற்று  நகைச்சுவையாக விளக்கினார்.

ஆதிக் ரவிச்சந்திரனின் கதை, உண்மையில்லாவிட்டாலும், உண்மைபோல் காட்டப்பட்டதே படத்தின் வெற்றியாகக் கருதமுடியும்.

70 அல்லது 80 காலகட்ட மக்களின் இயல்பையும், உடைகளையும், குறிப்பாகப் பின்ணனியில் தவளவிடப்பட்ட  பாடல்களும் ரசிக்கும் வண்ணம் இருந்தன.

 நடிகை சிலுக்கு சுமிதா போல் ஒரு நடிகையை நடிக்க வைத்து, ஒரு வில்லனின் நோக்கத்தையே மாற்றியது, ஆண்கள் பெண்களால் பலவீனப்பட்டவர்கள் போல் காட்டியதைப் பார்த்தபோது, இயக்குனரின் முந்தைய படமான “திரிஷா இல்லையினா நயன்தாரா..” என்ற  கவர்ச்சிப்படமே ஞாபகத்திற்கு வந்தது.

ஜி.வி.பிரகாஷ்குமார்  அந்தப்படத்தில் நடித்து இசையமைத்தார். இந்தப்படத்தில் இசையமைப்புடன் நிறுத்தியுள்ளார்.

குழப்பமான பல காட்சிகள், வன்முறைகள் இருந்தாலும் படத்தை ரசிக்க முடிவதற்கு நடிகர்களின் நடிப்பு காரணம் என்றால் அது மிகையாகாது.

 


ஆ.கெ.கோகிலன்

19-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!