திடீர் அழைப்பு..!

 



இன்று சனிக்கிழமை. நாளை தீபாவளி..! வீடும், வளவும் குப்பையாக இருந்தது. விடுமுறை வந்தால் வீட்டையும், வளவையும் பராமரிப்பதே பெரிய வேலையாக இருக்கும். இருமணிநேரம் கடுமையாக வேலைசெய்தால், அவ்வளவு தான். பின்னர் அன்று முழுவதும் ஓய்வெடுப்பதே தற்போதைய நிலை..! அதிகவேலை செய்தால் பின்னர் நாளை ஒன்றும் செய்யமுடியாது. மருத்துவரை நாடாமல், நானும் எனது உடலும் என்ற ரீதியில் உடலும் உளமும் சொல்வதைச் செய்வதே எனது அறிவின் வேலையாகக் கருதுகின்றேன்.

உடல் வேண்டாம் என்று சொல்லும்போது, அறிவு ஏற்றுக்கொள்ளாமல் அதிகவேலைகளைச் செய்வதால், எழுவதே கடினம் எனப்பல தடவைகள் உணர்ந்துள்ளேன்.  ஏதோவோர் சமநிலைக்கு அமைவாக எனது வேலைகளைச் செய்வதே தற்போது வழமை.

இந்த நிலையில் பாக்குமரங்களில் இருந்து விழுந்த பாக்குகளை கொசுக்களும், அட்டைகளும் பதம் பார்த்தன. பார்க்க அருவருப்பாக அவை இருந்தன. அவற்றைப்பொறுக்கி காய வைக்க முனைந்தேன்.  அதற்காக விழுந்த ஏறக்குறைய 100 பாக்குகளைப்பொறுக்கினேன். தொடர்ந்து பலமுறை குனிந்து எழுந்ததால் தலைசுத்தியது.  அத்துடன் வேலைக்கு ஒரு தற்காலிக ஓய்வைக்கொடுத்துவிட்டு, போய் சிறிதுநேரம் படுத்தேன். ஒரு போன் கோல் வந்தது..!  அதில் ”12.00மணிக்கு எனது நண்பர் வீட்டிற்கு வரும்படி..” இன்னோரு நண்பர் கூறினார். இன்று மாலை ஒரு விளையாட்டுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வருவதற்கு ஒத்துக்கொண்டுவிட்டேன். எனவே வருவது கஷ்டம் என்று சொல்ல, அவர் மிகவும் கவலைப்பட்டு, தூர இடத்தில் இருந்து தான் வர, நீ வராமல் இருப்பது சரியல்ல..! எப்படியாவது வரச்சொன்னார். மாலை 4. 00மணிக்கு முன்னர் திருப்பக்கூடியதாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து படுக்காமல், குறையாக இருந்த சில வேலைகளைச் செய்துவிட்டு, குளித்து, ரெடியாகி, அழைத்த நண்பருடன் மற்றைய நண்பர் வீட்டிற்குச் சென்றோம். போகும்போது, அம்மாவிற்கு கொடுக்கவேண்டிய பணத்தையும், வேறுசில சமையலுக்கு வேண்டிய பொருட்களையும் கொண்டுசென்றேன்.

கூட வந்த நண்பரை நேராக மற்றைய நண்பர் வீட்டிற்குச் செல்லும்படி கூறிவிட்டு, அந்த இடத்திற்கு கிட்டவாகவுள்ள அம்மாவீட்டிற்குச் சென்று, கொண்டுவந்ததைக் கொடுத்துவிட்டு, நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.

அங்கு நன்கு பேர் கூடியிருந்தார்கள். மரவள்ளி கிழங்குடன், கடல் உணவுகளைப்போட்டு, இயற்கை உணவு தயாராகிக்கொண்டிருந்தது..! நானும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இணைந்தேன். அந்நேரம் கடும் மழையடித்தது..! அண்மையில் நண்பர் தந்தையாரின் ஆண்டுத்திவசம் நடைபெற்றது.  பட்டமளிப்பு விழாவால் கலந்துகொள்ளமுடியவில்லை. நண்பரின் தாயாரும் நான் போகாமல் விட்டதையிட்டுக் கவலைப்பட்டார். நான் காரணத்தை விளக்கியதும், ஓரளவிற்குச் சமாதானமானார்.

மழைதொடர்ந்தது..! விட்டபாடு இல்லை..! மரவள்ளி சூப் தனிருசியாக இருந்தது..! நன்றாக சிறு சூடான பானத்துடன் உண்டோம். மாலை 2.30 மணிக்கே எனது அடுத்த கடமை நினைவிற்கு வர, உடனேயே வெளிக்கிட்டு, வீடுவந்து, பின்னர் மீண்டும் ஒரு முறை குளித்து,  மனைவியின் உணவை பிரிஜ்ஜூக்குள் தள்ளிவிட்டு, உடுத்துக்கொண்டு காரில் கிளம்பினேன்.  மாலை 4.00 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் சென்றேன். அந்த இடத்தைக் கண்டுபிடிக்க, சிறிது நேரமாகிவிட்டது.

அங்கே பரிசளிப்பு விழா தொடங்க சிறிது நேரம் காக்கவேண்டியும் இருந்தது. நான், நேரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்றவர்கள் கொடுக்காததையிட்டு, மனதிற்குள் கவலைப்பட்டாலும் என்ன செய்ய..? பொதுவான மக்களின் இயல்பு இவ்வாறு இருக்கும்போது, யாரையும் நோவதில் பயனில்லை.

ஒரு வழியாகப் பரிசளிப்பு விழாத்தொடங்கியது. வழமைபோல், எனது பேச்சை முடித்துக்கொண்டு, பரிசில்களை, அவர்களுடன் சேர்ந்து வழங்கினேன். எனக்கும் ஒரு பரிசு தந்தார்கள்..!

மதியம், நண்பர் வீட்டிலிருக்கும் போது,  இன்னோர் நிகழ்விற்கு அழைத்தார்கள்..!  பரிசளிப்பு விழாவிற்குப் போகும்போதும், 60ஆவது வயதைக்கொண்டாடும் தொழில்நுட்பக்கல்லூரி பணிப்பாளரின் அழைப்பும் வந்தது..! இருசாராரும்   அழைத்ததால்,

வேறுவழியின்றி,  பரிசளிப்பு விழாவை முடித்துக்கொண்டு, நண்பரின் வீட்டிற்குச் சென்று சில மணிகள் இருந்துவிட்டு பின்னர் அவருடன் மாலைநிகழ்வுக்கு, ராஜா ஹோலிற்குச் சென்றோம்.  அங்கு சிறு அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு, அவர்களுடன் படம் எடுத்துவிட்டு, இரவுணவையும் உண்டுவிட்டு வீடுவந்தேன்.

பல திட்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, வேறு சிலவும் நடந்து முடிந்தன..! அந்த அளவில் நிறைவடைந்து, நித்திரைக்குச் சென்றேன்.  அதேநேரம், மனைவியின் மதிய உணவு

பிரிஜூக்குள் மேலும் இறுகிக்கொண்டிருந்தது.

 

ஆ.கெ.கோகிலன்

11-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!