இந்தியா தோல்வி..!

 


 


இலங்கை தோற்றபோது கூட நான் ஆட்டத்தைக் கவனிக்கவில்லை. ஆனால் இந்தியா தோற்கின்றபோது  இரு அணியினரின் ஆட்டத்தையும் கவனித்தேன்..!

இந்தியாவில், அதுவும் நாட்டின் பிரதமரே வேலைவெட்டி எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளால் உலகப்கோப்பை கிரிக்கெட்டை பார்க்க மைதானத்தில் இருக்க, அவரோடு சேர்ந்து, மைதானத்தில் இலட்சக்கணக்கில் மக்கள் நேரடியாகப் பார்க்க, இவர்கள் போக மிகுதிச்சனத்தொகை தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் வாயிலாக போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்க,  50 ஓவரில் 240 ஓட்டங்களுடன் அனைவரும் சுருள, அவுஸ்ரேலியா அணி ஆறு விக்கெட்டுகளால் ஆறாவது தடவையாக 241 ஓட்டங்கள் பெற்று வெற்றிபெற்றது ஆச்சரியமானது அல்ல..!

போட்டி என்றாலே வெற்றி அல்லது தோல்வி தான்..! இதுவரை இந்தியா 2 முறை உலகக்கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல் அவுஸ்ரேலியா 6 முறை கைப்பற்றியுள்ளது. 1இற்கு 3 என்ற விகிதத்தில் வெற்றிக்கான வாய்ப்பு அறியப்பட்டுள்ளது. இனிவரும் போட்டிகளில் மூன்று மடங்கு முயற்சி இந்திய அணிக்குத் தேவை. இங்கு குறிப்பாக ஆட்கள் தேர்வில் இருந்து, அவர்களுக்கான தயார்படுத்தல்கள் வரை அதிகூடிய கவனம் தேவை..!

முதல் முறை உலகக்கோப்பையை இந்தியாவிற்குப் பெற்றுத்தந்த முன்னாள் காப்டன் கபில்தேவ்வை சரியான முறையில் அழைக்காதது தவறு..!

கிரிக்கெட்டை வைத்துக்கொண்டு, அரசியலை நகர்த்துவது தவறு என்பதையும் இந்தத்தோல்வி, பாடம் புகட்டியுள்ளது..!

குறித்த ஒரு நேரத்தில் மைதானத்தில் 13பேர் விளையாடும் போது 1,30,000 மக்கள் அரங்கில் இருந்து ஆட்டத்தை ரசித்துள்ளார்கள்.

போட்டி பாதகமாகும்போது அவ்வளவு மக்களும் துன்பப்பட்டார்கள்.

சந்தோசத்தை வாங்கச் சென்ற மனிதர்கள், துக்கத்தை வாங்கி வந்தார்கள்..!

இது தான் வாழ்க்கை..!



ஆ.கெ.கோகிலன்

19-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!