கப்டன்..!

 


 


ஒரு இராணுவத்தளத்தில் இருக்கும் ஒரு அணி, கட்டிற்குள் ஏதோ ஒரு விநோத விலங்கிடம் மாட்டுவதும், அந்த நிகழ்வில் சிலர் இறப்பதும், அந்த விலங்கின் தன்மை சாதாரண சென்ஸார்களில் படாத வகையிலான தோற்றத்தைக் கொண்டாக இருப்பதாகவும், அதனைப்பற்றிய ஆய்வுக்குக் கிளம்பும் போது, ஏற்படும் சிக்கல்களும், அதனை தீர்க்க ஹீரோ போடும் சண்டைகளுமாக படம் இருக்கின்றது.

ஆங்கில்படம் போல் எடுத்திருப்பது தமிழ் படங்களின் தரம் கூடியுள்ளது என்பதை உணர்த்தியது.

தொழில்நுட்பங்கள் ரசிக்கும் படி அமைந்திருந்தன. நடிகர்களும் தமது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு உயிர்கொடுத்துள்ளனர்.

அந்த விநோத விலங்கும், அதன் கூட்டங்களும், அவை இறக்கும் போது அல்லது மயங்கும்போது சிலந்தி மாதிரி ஒன்று வெளியேறித் தப்புவதும், அதிலிருந்து மேலும் அதே மாதிரியான விலங்குகள் தோன்றுவதும் ஆச்சரியமாகவும், காட்டூன் படங்கள் போன்றும் இருந்தன.

உண்மையில் ஒவ்வொரு உயிரின் இறப்பின் போது அல்லது ஆழ்ந்த உறக்கத்தின்போது இவ்வாறான ஒரு சக்தி வெளியேறுவதும், பின்னர் திரும்ப வருவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றது. அந்த சக்தி வரவில்லை என்றால் உயிர் இல்லை என்கின்றோம்.

இந்த அடிப்படை இந்துக்கோட்பாட்டை மையப்படுத்தி, அந்த விநோத விலங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல உயிரினங்களது இயல்புகளின் கலவையாக அந்த புதிய உயிரினம் படைக்கப்பட்டுள்ளது. அந்த உயிரினத்தின் படைப்பில் ஒரு உண்மைத்தன்மை இருப்பதாலே படத்தைக் கொஞ்சமாவது ரசிக்க முடிகின்றது.

இந்தப்படத்தில் நடித்த பலரின் நடிப்பும் நன்றாக இருந்தது. அதிலும்  குறிப்பாகக் கதாநாயகனாக நடித்த, ஆரியாவினது நடிப்பும், ஜஸ்வரியா லக்ஸ்மியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. நாயகி சிறு காட்சிகளில் மாத்திரம் வந்து சென்றார். படம் முழுக்க பொலீஸ் அணிதான் தடம் பதித்து இருந்தது.

 

இந்தப்படத்தை சக்தி சௌந்தராஜன் (Shakti Soundar Rajan) என்பவர் எழுதி இயக்கியிருந்தார்.  ஆங்கிலப்படம் போல் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அது அந்த அளவிற்கு சரியாக நடைபெறவில்லை. இருந்தாலும் படத்தைப் பாராட்டலாம்.

 


ஆ.கெ.கோகிலன்

14-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!