நவம்பர் 1

 


 

பொதுவாக மாதப்பிறப்பை நன்றாகக் கடக்க முனைவார்கள்..! அன்றில், அந்த மாதமே நன்றாக அமையாது என்பார்கள்..!

இந்த நாள் இனிமையாக நடக்க வேண்டும் என்ற நினைப்பில், வழமைபோல் எழும்பிக்காலைக்கடன்களை முடித்து, விரைவாக அலுவலகம் சென்று, அமெரிக்க தூதரகம் நடாத்தும் ஆங்கில நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முக்கிய நபர்களை வரவேற்று, ஆங்கிலத்துறையுடன் இணைந்து அவர்களுடன் கலந்துரையாடினேன். அதன் பின்னர், வருகைதந்த முக்கிய நபர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடலை மேற்கொள்ளத்துறையினர்  திட்டமிட்டிருந்தார்கள்.

அதனை ஒருவாறு முடித்து, அவர்களை அனுப்பியதுடன் மேலும் பல காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது.   அவற்றையும் முடிந்தவரை செய்துகொண்டு, மதியச்சாப்பாட்டை கன்ரீனில் எடுத்துச் சாப்பிட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு நடந்த விடயம் அது..! 2020 கொரோனாவிற்குப் பின்னர் எமது  நிறுவனச்சிற்றூண்டிச்சாலையில் சாப்பிட்டது ஒரு முக்கிய நிகழ்வாக எனக்குப்பட்டது..! வீட்டிலுள்ளவர்கள் வருத்தத்தால் அவதிப்பட, அவர்களுக்கு ஓய்வைக்கொடுக்கவே இவ்வாறு செய்யவேண்டி வந்தது.

பின்னரும் பல முக்கிய வேலைகளைச் செய்து, எமது ஊழியர் ஒருவரை பஸ் ஸ்ரண்ட்டிற்கு அழைத்துக்கொண்டு வெளியேற,  இறால் “இருக்கு கொண்டுபோங்க..” என்ற குரல் திடுக்கிட வைத்தது.

மதிய வேளை ஒரு குரல் குளிர்சாதனப்பெட்டியில் “இறால் வைக்கின்றேன்..” எனச்சொல்ல சரி என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நான், அது எனக்குத் தான்  வந்தது என்பதை அறியவில்லை..! யாரோ அனுமதி கேட்கின்றார்கள்..! சும்மா இருக்கும் குளிர்சாதனப்பெட்டி பயன்படட்டும் என்ற நோக்கில் “ஓம்” என்று சொல்லிவிட்டேன்.

எனக்காக கொண்டுவந்து வைத்ததற்கு நன்றிசொல்லி, அதற்கான பணத்தையும் கொடுத்து, எமது ஊழியரையும் ஏற்றிக்கொண்டு பஸ்நிலையத்தில் விட்டுவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடுவந்தேன்.

பின்னர் சிறிதுநேரம் படுத்துவிட்டு, இரண்டு இணையவழிக் கூட்டங்களிலும் கலந்து, நாளைய நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் செய்ய நாளை பிறந்துவிட்டது..!

எனக்கு ஒரு கடமை தந்தால் என்னால் இயன்றவரை அதனை சரியாகச் செய்ய முனைவேன். இயற்கை ஒத்துழைத்தால், நினைத்தது போல் அது நடக்கும். இல்லை என்றால், நடந்ததை ஏற்றுக்கொண்டு, “அமைதி காப்பதே சிறந்தது..”  என அடங்கிவிடுவேன்.

 

ஆ.கெ.கோகிலன்

01-11-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!