பிரதீப் அன்ரனி..!

 



பொதுவாக, தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளையே வரும்பிப் பார்ப்பது வழக்கம்..! அதில் சூப்பர் சிங்கர், சரிகமப மற்றும் பிக்போஸ்.

தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தொடர்ந்து கமலே தொகுத்து வழங்குவது பிடிக்கவில்லை என்றாலும், இன்னொரு விதத்தில் சினிமாத்துறையில் கமல் அளவிற்கு விசயம் தெரிந்த பிரபலம் இல்லை.

இருந்தாலும் படிக்காத மேதை கமலும் சில சமயங்களில் சறுக்கிய தருணங்கள் உண்டு.

அந்தவகையில் நேற்று நடந்த பிக்போஸ் ஷோவில், பெண்களில் பலர் சேர்ந்து, அங்கு விசித்திரமான நடத்தைகொண்ட பிரதீப் அன்ரனி என்ற நபரின் நடத்தை தமக்கு ஆபத்தானது என்றும், அவரது வார்த்தைகள் தம்மைக்  காயப்படுத்துகின்றன என்றும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

60இற்கு மேற்பட்ட கமேராக்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து மக்கள் பார்க்கக்கூடிய நிலையில், மக்களின் தீர்ப்பே இறுதியானது என்பது போன்ற கருத்துக்களைப் பரப்பிவிட்டு, எடுக்கும் முடிவுகள் விஜய் தொலைக்காட்சியையே வெறுக்க வைக்கின்றன.

இதனைச் சரிவர ஆராயாத கமல், தனது இந்தியன் 2 படப்படிப்புகளில் இருந்துவிட்டு, தன்னுடைய புகழைப் பரப்புவதற்காக இந்த மேடையை தவறாகப் பயன்படுத்துவதாக பல குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி கமலை நம்புவதை பலர் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் வருகின்றார்கள்.

நேற்று நடந்த நிகழ்வால், கமலை சமூகவலைத்தளங்களில் பலர் திட்டித்தீர்க்கின்றார்கள். சரியான நடத்தையை கொண்டிராவிட்டாலும், பிரதீப்பிற்காக பலர் குரல் கொடுக்கின்றார்கள்.

நானும் கமல் மாதிரியான, ஜனநாயகக்கடமை என்று நினைத்துப் பல தவறுகள் செய்துவிட்டதாக இப்போது உணர்கின்றேன்..! ஜனநாயக நாட்டில் எப்பவும் அதிக வாக்கிற்கே மதிப்பு அதிகம். அதேபோல் தான் மக்களின் நடத்தைகளும் இருக்கின்றன ..! சில சமயங்களில் சிறுபான்மைக்கருத்துக்களில் நியாயம் இருக்கும். ஆனால் ஜனநாயகக்கொள்கை அதனை ஏற்க மறுக்கும்.

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, பொதுவாழ்க்கையில் இருக்கும்  போது அதிகம் விமர்சிக்கப்பட வாய்ப்புள்ளது. கமலின் நடத்தை தற்போது கேளிவிக்குறி ஆக்கப்பட்டுள்ளது..? கமலை விட  மதிப்பு பிரதீப் அன்ரனிக்கு கூடியதாகத் தெரிகின்றது..!

கமலுக்கு இப்படியொரு நிலை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சரியாகப் பார்த்து நிகழ்ச்சியை நடத்தமுடியாது போனதற்கு, படம் நடிக்கும் ஆசையும்,  அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமும் காரணம்.

பிரதீப் அன்ரனி என்ற விசித்திர நடத்தை கொண்ட புத்திசாலி வீரன், தவறான முறையில் வெளியேற்றப்பட்டதும், எனக்கும் அந்நிகழ்ச்சியை பார்க்க பிடிக்கவில்லை.  எல்லோரும் பார்க்கும் படி வீட்டில் இருக்கும் நபர்களின் நடத்தைகளில் குறைகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் வெளியேற்றப்படுவதற்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவது நல்லது. வழமைபோல் நேரடியாக Elimination list இல் சேர்த்துக்கொள்ளலாம்.  கமல் அவரது அறிவைத்தாண்டி பல கலாசாரச் சீரழிவுகளை தமிழ் மக்களிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமை, அவருக்கே உரியது. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பாதை சரியானால் சேருமிடம் சுலபம். இல்லையாயின் அலைச்சல் தான்..! இது தான் எனது வாழ்க்கைத் தத்துவம்.

 

ஆ.கெ.கோகிலன்.

04-10-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!