உறவுகளுடன் சில மணிகள்..!

 



இந்த இரு வாரத்தில்  மேற்கொண்ட கொழும்புப் பயணங்களால் உறவுகளின் இரு முக்கிய நிகழ்வுகளில் பங்குபற்ற முடியவில்லை.

நான் இந்த வேலையில் இருப்பதற்கு ஒருவர் மிகமுக்கியமான காரணமாக இருந்தார். எனக்கு இந்த நிறுவனத்தைப்பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சமயத்தில், இதில் இணைய தூண்டியவர் அவரே..!

எனது தாத்தாவினுடைய நெருங்கிய உறவினரின் மகன் அவர். சிறுவயதில் மிகவும் கஷ்டங்களை முகம் கொடுத்தவர். தற்போது நன்றாக என்னைப்போன்ற பதவியில் இருப்பவர். அவரிடம் எனது நிலைமையைத் தெரியப்படுத்தினேன். அவரும் புரிந்துகொண்டார். எனது கடமைகளை என்னால் இயன்றவரை செய்து முடித்த நிலையில், இன்று அவருடன் கதைத்து, மாலை வருகின்றேன் என சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஆனால், மாலை அவருக்கு உடல் கொஞ்சம் சரியில்லாமல் வந்துவிட்டது..! பின்னர் நானும், எனது மனைவியும் எனது வீட்டிற்கு முன்னாலுள்ள பெரிய மாடிவீட்டிற்கு சென்றோம்.  அதுவும் எனது தாத்தாவின் அண்ணருடைய பேரப்பிள்ளைகளின் வீடு தான்..! சுருக்கமாகச் சொன்னால், எனது ஒன்றைவிட்ட அண்ணன் தம்பிகள் தான் அவர்கள்..! இரு குடும்பங்களுக்கிடையேயான வாழ்வியலும் முற்றாக வேறுபட்டது..! நாம் படிப்பினூடாக இந்த நிலைக்கு வர, அவர்கள், படிப்பதைக்காட்டிலும் விவசாயத்திலும், வியாபாரத்திலும், உழைப்பிலும் காட்டிய ஆர்வத்தால் என்னை விட நன்றாக வாழும் நிலைக்கு வந்துள்ளார்கள்..!

எல்லோரும் முன்னேறியுள்ளார்கள்..! சின்ன வயதில் நாமும் கஷ்டப்பட்டோம்..! எம்மைவிட அவர்கள் இன்னும் கஷ்டப்பட்டார்கள்..! எனது தாய், தந்தையர் படித்தவர்கள். அரச நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருந்தவர்கள். இருந்தாலும் கஷ்டத்திற்கு காரணம், கர்மா..! அவர்கள், கடும் உழைப்பாளிகள்..! அப்பவே வயல்களிலும், ஆடு மாடுகள் வளர்ப்பதிலும், மில்கள் வைத்திருப்பதையும் பார்த்திருக்கின்றேன்..!

இரண்டு பாதைகளில் சென்றாலும் சேர்ந்த புள்ளிகள் ஒன்று தான்..! அது தான் வளர்ச்சி..! மரியாதை..! சந்தோசம்..!

படிக்கக்கூடியவர்கள் நன்றாகப் படித்தும் உயர்வை அடையலாம். வேறுவழிகளிலும் உயர்வை அடையலாம்.

அந்த உறவுகளுடன், எனது வீட்டையும், எனது வீட்டிற்கான பாதையையும் பார்த்துக்கொண்டு, மிக உயர்ந்த இடத்தில் இருந்து, சூடான பானத்தைப்பருகியபடி எமது வாழ்வையும், அதில் கடைப்பிடித்த நல்ல இயல்புகளையும் மீளநினைவில் நிறுத்தி, விடைபெற இரவு மணி 10ஐத் தாண்டிவிட்டது. பின்னர் உண்டு, உறங்க 12 ஐ தாண்டிவிட்டது..!

 

ஆ.கெ.கோகிலன்

30-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!