அரசின் வரி..!

 


நாடு பொளுளாதாரத்தில் வீழ்ந்து இருக்கும் சூழலில் அரச உத்தியோகத்தர்கள் நிலை, மிகவும் கேள்விக்கூறியாகவே உள்ளது.

சாதாரண வாழ்விற்கே தற்போது அதிக பணம் தேவைப்படும்போது, சமூக அந்தஸ்தைப்பேணும் நோக்கில் செயற்பட்டால் மனவருத்தமே மிச்சமாகும்.

தனியார் நிறுவனங்களிலும் இந்நிலைப்பாடு இருந்தாலும், ஓரளவிற்கு தாம் நினைத்ததை அடைய முகாமை செய்யமுடியும். வருமானம் வரும் என்றால் இலாபத்தை ஊழியர்களிடம் ஒரு சரியான விகிதத்தில் பங்கிட முடியும். அரச நிறுவனங்களில், அதுவும் எம்மைப் போன்ற அரச பணத்தில் தொழில்நுட்பவியல் கல்விச்சேவைகளைச் செய்யும் நிறுவனங்கள், அரசின் திறைசேரிப்பணத்தையே நம்பியிருக்க வேண்டிய சூழலில்,  நாட்டின் வந்குரோத்து நிலை, நிறுவனங்களின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது..!  அரசு அதிக வரிகளை விதிக்கின்றது..! அரச ஊழியர்களின் சம்பளமும் குறைவு..! இந்த நிலையில் அதிக வரி  செலுத்தவேண்டிய நிலைவரும் போது,  ஊழியர்களின் நிலை கவலைக்கிடம் இது தான்..!

நான் 50 வயதைத் தாண்டியதால் ஆரோக்கியத்தையும் ஒரு பணவருவாயாகக்கருதி,  எனது உழைப்பிற்கு ஒரு வரையறையை வைத்துள்ளேன். வரவுக்கு ஏற்ற செலவு. தேவைகளை இயன்றவரை குறைத்தல்..! வீடுகளில் இருந்து, வெளிச்செல்லும் பணத்தேவைகளை குறைத்தல் அல்லது தவிர்த்தல்.

இந்த மாதிரி ஒவ்வொருவரும், அவருக்கு ஏற்ற வாழ்க்கை முறையில் பயணிக்க, எமது நிறுவன ஊழியர்கள் சிலர் அதிக வரி அறவிடப்பட்டதற்காக வருந்தி, என்னிடம் நியாயம் கோரினார்கள். நான், நிறுவனத் தலைவராக இருப்பதால், எதற்கும் பதில்சொல்லவேண்டியது எனது கடமை.

அந்தவகையில் கடந்தவருட கொடுப்பனவு நிலுவை, இந்தவருடத்தில் இணைந்ததால், வந்த சூழ்நிலை இது. உண்மையில் கடந்த வருடக்கொடுப்பனவுகளுக்கு வரி செலுத்தவேண்டிய அவசியமில்லை. ஆனால் எமது நிறுவனச் சூழலில் பல கற்கை நெறிகள் இருப்பதாலும், அவை அனைத்திற்கும் பணம் தேவைப்படுவதாலும், அதற்கேற்ற பணத்தை தலைமையகம் தராமையாலும் ஏற்பட்ட இந்த நிலையைத் தீர்க்க, தலைமையகத்திடம் கோரிக்கை செய்ய வேண்டும். அதற்கு முதல் எமது நிறுவனத்திற்கு, வரும் செல்லும் பணத்தைப்பற்றிய ஒரு உள்ளகக்கணக்காய்வு செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது..! அதனடிப்படையிலே இதற்கான தீர்வை எட்டமுடியும்.

போனவருட இறுதியிலும், வருட ஆரம்பத்திலும் எனக்கு அதிக வரி அறவிடப்பட்டாலும், சில அரசின் விதிமுறைகளைக்கூறி அடுத்து வரும் மாதங்களில் வரிகளைக் குறைத்து அனுப்பி, இழப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.

வரியேற்பு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், சரியான வரியைச் செலுத்துவது நமது கடமை.

அரசில் உள்ளவர்கள் தவறுசெய்வதைச் சுட்டிக்காட்டி நாமும் தவறுசெய்வது ஆரோக்கியமானது அல்ல.

சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் இருந்து தவறினால் வரும் பாதிப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம், நமது பண உழைப்பைப்போல்  சேவையையும், அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.  தலைமையும், அரசும்   நம்மைக் கவனிக்க தவறினாலும், ஒன்று நம்மைக் கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றது..! அதற்குத் தெரியும் எமக்கு என்ன தரவேண்டும் என்பது..?

இறைவனா..? இயற்கையா..? எதுவாகவும் இருக்கட்டும். உண்மையாக இருப்போம்..!

நியாயமாக உழைப்போம்..!

உயர்வை அடைவோம்..! இறுதியாக,

உயிரை நிறைவுடன்  விடுவோம்..!

 

ஆ.கெ.கோகிலன்

24-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!