நோகடிக்கும் சூழல்..!

 



நேற்றிரவு பயணக்களைப்பால் தெஹிவளையிலுள்ள எமது நிறுவன விடுதியில் வேளையில் படுத்ததால்,  வேளைக்கு எழும்பவேண்டி வந்துவிட்டது. மீண்டும் திரும்பப்படுக்க நித்திரை வரைவில்லை. ஒருவாறு மூன்றுமணிவரை கஷ்டப்பட்டுப்படுத்து, பின்னர் எழுந்து குளித்து காலை 3.30மணிக்கே பட்டமளிப்பு விழாவிற்கு போகக்கூடிய நிலையில் தயாராக இருந்தேன்.

ஏற்கனவே எனது நிறுவன வாகனம், சில நாட்கள் முன்பே, ஒரு ஊழியரை இந்நிகழ்வு தொடர்பான நிகழ்ச்சித் தொகுப்பு அறிவிப்புப் பயிற்சி வழங்க, சாரதியுடன் அனுப்பியிருந்தேன். ஆகவே காலை பட்டமளிப்பு விழாவிற்கு அந்த வாகனத்தில் போவதே திட்டம். அதே நேரத்தில் அறிவிப்புப்பயிற்சி மாணவர்களையும், மேக்கப் வேலைகளும் செய்யவேண்டிய நிலையிருந்ததால், முதலில்  அவர்களை ஏற்றி இறக்கிவிட்டு, இரண்டாவது முறை என்னையும், அங்கு தங்கியிருந்த ஏனைய அறிவிப்பு பயிற்சி மாணவர்களையும், ஒரு பெண் கணக்காளர் ஒருவரையும் ஏற்றியிறக்குவதாகத் திட்டம் போட்டிருந்தோம்.

காலை 6.30 மணிக்கு இடையில் வாகனம் இரண்டாவது சுற்றுக்கு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க, நேரம் பறந்தது..! 7.00 மணி நெருங்கிவிட்டது. 8.00 மணிக்குள் பட்டமளிப்பு விழாவில் நிற்க வேண்டும். பதட்டம் அதிகரித்தது.

காலை, வேளையில் எழுந்து, இவ்வாறு காத்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டதை எண்ணி வருத்தப்பட்டாலும்  ஒன்றும் செய்ய முடியாது. சில பணிப்பாளர்கள் தங்களுடன் வரச்சொன்னார்கள். காலை 5.30 மணிக்கே  எமது தெஹிவளை நிறுவன பஸ் அங்கிருந்து BMICH  இற்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. எம்மைப்போன்ற  பலர்  அதில் சென்றார்கள். நானும் சென்றிருக்கலாம். நேற்றிரவு போட்ட திட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது இருந்தது.

சரி நடப்பது நடக்கட்டும். நான் நேற்றுக்காலை 5.30மணிக்கே ரெயில்வே ஸ்ரேசனுக்கு வந்துவிட்டேன். இரவு பஸ்ஸில் வந்தால், தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் இருப்பது கடினம் என்பதற்காகவே அவ்வளவு ஆயத்தம் செய்தும், சில  எனது முடிவுகளால் கவலைப்படவும், சிலரைப் பேசவும் நேரிட்டுவிட்டது..!

 என்னைப்பொறுத்தவரை நேரம் பொன்போன்றது. அதனை கவனிக்காமல் தவறுகள் செய்தால் என்னால் மன்னிக்க முடிவதில்லை.

நான் அந்தத் தவறைச் செய்தாலும், மிகவும் கஷ்டப்படுவேன். இந்த இடத்தில் எமது திட்டமிடலைத் தாண்டி எல்லாம் நடந்துவிட்டது..! இருந்தாலும்,  காலை 8.00 மணிக்கு முதலே போய்சேர்ந்தது பெரிய விடயம். இறைவனுக்கும், இயற்கைக்கும், அதனையும் தாண்டி எம்மைப் பாதுகாப்பாகக் கூட்டிச்சென்ற சாரதிக்கும் நன்றி.

இறங்கியதும், ஓடி ஓடிக் காலை உணவை எடுத்துக்கொண்டு, ஓடியே போய் வரிசையில் நின்று, ஒருவாறு மண்டபத்திற்குள் நேரத்தில் நுழைந்தேன்.

இந்தப்பதட்டம், இனி இரண்டாவது சுற்றுப்பயணத்தை தவிர்த்து, சாரதிக்கான அழுத்தத்தையும் குறைத்தேன்..!

மேலும் அன்றைய நாளில் நடந்த 3 அமர்வுகளையும் நிறைவாக முடித்துக்கொண்டு, பணிப்பாள நண்பர்களின் காரில் தெஹிவளை வந்து, ஒரு குளிப்புடன் மீண்டு வந்தேன்..!

வந்ததும் ஒரு குண்டு மேலும் வந்தது..! நாளை என்னுடைய வேலையோடு, இன்னொருவருடைய வேலையையும் சேர்த்துச்செய்ய அந்தப்பணிப்பாளர் கேட்டிருந்தார்..! நான் முதலில் இயலாது என்று சொன்னாலும், என்ன செய்வது சோதனைகள் வந்தால், எப்படியாவது தாண்டிச்செல்ல வேண்டும் என்பதற்காக, அவரிடம், வட்சப் ஊடாக அவருடைய பெயர்பட்டியலைக் கேட்டுப்பார்த்தேன்..! தலை சுற்றியது..! எப்படி வாசிப்பது..? அந்நேரம்  இரவு 10.00ஐ தாண்டிவிட்டது. எழுதி வைக்க, ஒரு வன்பிரதி பெயர்பட்டியலும் இல்லை.  பெயர்களும் சிக்கலாக இருந்தன..!  அவரை, நீங்களும் தயாராக வரச்சொன்னேன். அத்துடன் முற்கூட்டியே வன்பிரதியையும் கொண்டுவரச்சொன்னேன். நாளை நான் சொதப்புவதை இயற்கை வேடிக்கை பார்க்க காத்துக்கொண்டிருக்கும் போது நான் என்ன செய்ய முடியும்..? முடிந்ததைச் செய்ய வேண்டியது தான் என்ற   சலிப்புடன் படுக்கச்சென்றேன். நித்திரை வரவில்லை..!  எல்லாம் ஏனோ என்னைச் சோதிக்க நடக்கின்றது போலிருந்தது..! நான் எனது கடமையைச் சரியாகவும் சிறப்பாகவும் செய்யத்திட்டமிட, மேலும் கடமைகளைக் கொடுத்தால் உள்ளதையும் கெடுக்க வேண்டிய சூழல் வருகின்றதே என இயற்கையை நொந்தேன். இருந்தாலும், என்னால் இயன்றதை அந்த இடத்தில் செய்த திருப்தி இருக்கின்றது.

 

ஆ.கெ.கோகிலன்

20-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!