நுளம்பு ஆராய்ச்சி..!
என்ன மாயமோ மந்திரமோ தெரிவதில்லை..! எனது இரத்தம் நுளம்புகளுக்கெல்லாம் மிகவும் பிடிக்கின்றது..! எனது இரத்த வகை பி நேர்..! நானும் சிறுவயதில் இருந்தே பல இடங்களில் வாழவேண்டிய சூழல்களைச் சந்தித்துள்ளேன். எங்கும் என்னுடன் நுளம்பு வலையும் கொண்டுசெல்வதே வழமை..! வலையில்லாமல் என்னால் நித்திரை கொள்ள முடியாது. அங்கே மின்விசிறி இருந்தால் என்ன..? குளிர்சாதன வசதி இருந்தால் என்ன..? எனக்குத் தேவையானது ஒரு நுளம்பு வலை மட்டுமே..! கிறிஸ்மஷ் வாரம் என்பதால் யாழிலே நிற்கின்றேன். நேற்று கடலுணவு சாப்பிடப்பிரியப்பட்டு மகளையும் கூட்டிக்கொண்டு, காக்கை தீவுக்குச் சென்று, இறால், நண்டு, கணவாய் மற்றும் பொரியலுக்காக சில வகை மீன்களை வாங்கிக்கொண்டு வந்து சமைக்கச் சொன்னேன். மதியம், இரவு இரண்டு வேளையும் நல்ல ஒரு பிடி பிடித்தேன். போதாததற்கு, அம்மாவின் பிறந்த நாள் கேக் மற்றும் வீட்டில் இருந்த நொறுக்குத்தீனிகள், மற்றும் கொஞ்சம் சூடான பாணம்..! இதுமாத்திரமன்றி, மதியம் எலுமிச்சை ஜூஸ், பால் மற்றும் இரவு வாழைப்பழம்..! இவை எல்லாம் வயிற்றில் இருந்து ஒரு பெரிய வேலையைச் செய்தன..! அது இரவு முழுவதும் எனது நித்திரை...