இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நுளம்பு ஆராய்ச்சி..!

படம்
    என்ன மாயமோ மந்திரமோ தெரிவதில்லை..! எனது இரத்தம் நுளம்புகளுக்கெல்லாம் மிகவும் பிடிக்கின்றது..! எனது இரத்த வகை பி நேர்..! நானும் சிறுவயதில் இருந்தே பல இடங்களில் வாழவேண்டிய சூழல்களைச்  சந்தித்துள்ளேன். எங்கும் என்னுடன் நுளம்பு வலையும் கொண்டுசெல்வதே வழமை..! வலையில்லாமல் என்னால் நித்திரை கொள்ள முடியாது. அங்கே மின்விசிறி இருந்தால் என்ன..? குளிர்சாதன வசதி இருந்தால் என்ன..? எனக்குத் தேவையானது ஒரு நுளம்பு வலை மட்டுமே..! கிறிஸ்மஷ் வாரம் என்பதால் யாழிலே நிற்கின்றேன். நேற்று கடலுணவு சாப்பிடப்பிரியப்பட்டு மகளையும் கூட்டிக்கொண்டு, காக்கை தீவுக்குச் சென்று, இறால், நண்டு, கணவாய் மற்றும் பொரியலுக்காக சில வகை மீன்களை வாங்கிக்கொண்டு வந்து சமைக்கச் சொன்னேன். மதியம், இரவு இரண்டு வேளையும் நல்ல ஒரு பிடி பிடித்தேன். போதாததற்கு, அம்மாவின் பிறந்த நாள் கேக் மற்றும் வீட்டில் இருந்த நொறுக்குத்தீனிகள், மற்றும் கொஞ்சம் சூடான பாணம்..! இதுமாத்திரமன்றி, மதியம் எலுமிச்சை ஜூஸ், பால் மற்றும் இரவு வாழைப்பழம்..! இவை எல்லாம் வயிற்றில் இருந்து ஒரு பெரிய வேலையைச் செய்தன..! அது இரவு முழுவதும் எனது நித்திரை...

தர்ப்பை போடுதல்..!

படம்
  அம்மாவின் வயது மூப்புக்காரணமாக தனது கடமைகளை எமது கைகளில் தரத்தொடங்கியுள்ளார்..! அதில் ஒன்று, எமது ஊரிலுள்ள கோவில் பூஜைகளை எம்மைச் செய்ய தூண்டியுள்ளார்..! நான், கோவிலுக்கு   கொஞ்சம் தூரமாக இருப்பது வழக்கம். அதற்கு ஒரு காரணம் உண்டு. எனது தாயின் தந்தையார் மற்றும் தாயின் இரண்டாவது அண்ணன்..! இவர்கள் இருவரும் கோவில் பக்தி அதிகமானவர்கள். அதேபோல் பல ஆச்சாரங்களைக் கடைப்பிடித்தவர்கள். அதுமாத்திரமன்றி, பூலோகப்பார்வையில் எல்லாம் இருந்தும், அனைத்தையும் துறந்தவர்கள்..! அம்மாவின் தந்தையார் இறந்துவிட்டார். இப்பவும் எமது ஊரில், வயதான மனிதர்களிடம் கேட்டால், அவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்..! கோவில் என்றால் கொலையும் செய்யக்கூடியவர்..!  அதேபோல் எனது மாமா, தற்போதும் கொழும்பில் இருக்கின்றார்..! வயது மூப்புக்காரணமாக வெளியே செல்வது மிகக்குறைவு. ஒரு   ஐயரைவிட அதிக ஆச்சாரத்துடன் வீட்டில் இருந்தே, இறைவனைச் சிக்கெனப்பிடித்து வைத்துள்ளார்..! எந்த நேரமும் இந்தப்பூலோக வாழ்க்கையை திறக்கத் தயாராகவும், அதனை மாத்திரமே வேண்டியும் கொண்டிருக்கின்றார்..! இந்த இருவரது வாழ்வும் எனக்குப் ...

மத ஒழுங்குகள்..!

படம்
  பொதுவாக எல்லாப் பெரிய மதங்களைச் சேர்ந்தவர்களும் அந்த அந்த மதங்களைப் பின்பற்றுவதில் அதித பற்று காண்பிப்பதை நான் அவதானித்து இருக்கின்றேன். மதக்கடமைகள் செய்வது என்றால் அதற்கு அவ்வளவு முன்னுரிமை கொடுப்பார்கள்..! ஆனால் சில சமயங்களில் அவ்வாறான செயற்பாடுகளில் மக்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை..! சீனாவில் அதிக மக்கள் சமயங்களைப் பின்பற்றுவதில்லை என்ற ஒரு ஆச்சரிய உண்மையை அண்மையில் தெரிந்துகொண்டேன். அதற்கு காரணம் மதங்கள் மூலம், சில தவறான விடயங்களும் மக்களிடம் சென்றடைகின்றன. சில மதங்கள் தங்களுடைய மதம் தான் உலகின் தலைசிறந்த உண்மையான மதம் என்றும் மற்றவர்களின் மதங்கள் அவ்வாறு அல்ல என்றும், அவர்கள் போகின்ற பாதை என்பது தவறானது என்றும் தமது நிலைப்பாட்டை ஆணித்தரமாகப் பேசுகின்றார்கள். அதேபோல் சில சமயத்தைச் சேர்ந்தவர்கள், பிரச்சாரங்கள் மூலம் ஆட்களைத் திரட்டுவது உண்மையான மதங்களுக்கு அழகு அல்ல என்றும் சொல்கின்றார்கள். இன்னும் சிலர், இப்படி இருந்தால் தான், கடவுளுக்குப் பிடிக்கும். இந்த உணவை மாத்திரமே சாப்பிட வேண்டும். இந்த வகுப்பில் பிறந்தால் கடவுளுக்கு கிட்டவே போக முடியும். குறிப்பாக இந்த மொழி தெரிந...

ஆயுள்வேதம்..!

படம்
  மருத்துவம் என்பது ஆரோக்கியக் கேட்டிற்கு   தீர்வு வழங்கும் வழிமுறை. பல விதமான மருத்துவங்கள் உலகில் இருக்கின்றன..! இவற்றில் ஆங்கில மருத்துவம் என்பது இறுக்கமான பொறிமுறைகளூடாக உலகெங்கும் வியாபித்துள்ளது..! அதற்கான கல்வியும், ஆய்வு கூடங்களும் தொடர்ந்து விருத்திசெய்ய நிறையப் பணமுதலீட்டாளர்கள் உலகெங்கிலும் உதவுகின்றார்கள்..! அதனால், இந்த மருத்துவம் தற்போது,   மிகப்பெரிய அளவில் இலாபம் தரும் வியாபாரம் என்ற அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளது மிகப்பெரியவேதனை..! அதேபோல் மற்றைய மருத்துவங்களும் வியாபாரம் என்ற அளவில் வந்தாலும், அங்கே கோடிக்கணக்கான   பணப்புழக்கங்கள் பொதுவாக இல்லை என்றே நினைக்கின்றேன்..! இந்த மருத்துவ உலகில், கடந்த சில தினங்களாக எனது தாயார் உடலெங்கும் கடிப்பதாகவும், எல்லா இடங்களிலும் சொறிய வேண்டும் போல் இருப்பதாகவும் சொன்னார்..! ஏற்கனவே எக்ஸிமாவிற்கு மருத்துவம் செய்து கால் புண்கள் ஓரளவு காய்ந்துள்ள நிலையில் இவ்வாறு சொல்ல, நான் சொன்னேன் “உணவுகளைச் சரியாகவும், நேரத்திற்கும் சாப்பிடுங்கள் அத்துடன் எண்ணங்களை மாற்றுங்கள். குறிப்பாக வேறொன்றில் பிசியாக இருக்க முயற்சி செய்ய...

தேவரா 1..!

படம்
    ராஜமௌலியின் பாகுபலி வந்த பின்னர் பிரமாண்டமான திரைப்படங்கள் நிறைய வரத்தொடங்கிவிட்டன. முன்பு கமெரா ரிக்ஸ் என்று சொல்லிச்செய்த விடயங்கள் எல்லாம்   தற்போது கணினி வரைபியலூடாக மிகச்சுலபமாகச் செய்ய முடிகின்றது..! எந்த சிக்கலான காட்சிகளையும் இலகுவாக எடுக்க முடிகின்றது..!   செலவுகள் கூட என்றாலும், கற்பனைகளை   திரைகளில் நிஜமாக்க முடிகின்றது..! ஜூனியர் என்ரியாரின் படங்கள் என்றால் மாஸ் தான். லொஜிக் பார்த்தால், படத்தை ரசிக்க முடியாது. இந்தப்படத்தின் கதையே விசித்திரமாக இருக்கின்றது..! கடல் தீவுகளில் இருக்கும் சில மனிதர்கள், கடலில் வரும் பெரிய கப்பல்களில் இருந்து பொருட்கள் பலவற்றைத் திருடி இன்னொரு கும்பலுக்கு கூலிக்கு கொடுக்கின்றார்கள். அதனூடாகப் பணம் வருகின்றது. அவர்கள் நிம்மதியாக வாழ நினைக்க,   இவர்கள் கடத்தும் பொருட்கள், இவர்களது மக்களுக்கே ஆபத்தாக வர, இனிமேல் கடலில் இவ்வாறான தப்பான காரியங்கள் செய்யக்கூடாது என்று நாயகன் கட்டளையிட, இன்னொரு பகுதிக்கு அதில் உடன்பாடு இல்லாமல் கடத்தலில் இறங்க, நாயகன் தேவராவால் கடத்தில் ஈடுபட்ட அனைவரும் கொல்லப்பட்டு, தேவராவும் கொல்...

கூட்டுப் பிரயாணம்..!

படம்
  திருகோணமலையில் இருந்து எனது வேலைகளை முடித்துக்கொண்டு மாலை 2.45 மணி பஸ்ஸில் வரும்போது வழமைபோல் கொஞ்ச நேரம் நின்று, பின்னர் சீற் கிடைத்ததும் இருந்துகொண்டு வந்தேன். வவுனியா வந்ததும், இருந்த   சீற்று உடலுக்கு வேதனையைத் தர வேறு சீற்றுக்கு மாறினேன். இறுதியாகத் தனி சீற்றே எனக்குக் கிடைத்தது..! நிம்மதியாக இருந்து கொண்டு, ஒரு கடலைப் பையையும் வாங்கி, உண்டுகொண்டிருக்க ஒரு அதட்டல் சத்தம் கேட்டது..! பார்த்தேன் முன்சீற்றிலுள்ள நடுத்தரவயதுடைய வெளிநாட்டில் இருந்து வந்தவரா அல்லது வேறு ஊரில் இருந்து வருகின்றாரா தெரியவில்லை, பஸ்ஸில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வெருட்டினார்..! பின்னர் தான் தெரிந்தது. அந்த பஸ்ஸில் ஏறக்குறைய அரைவாசிப்பேர் அவர்களது குடும்ப உறவுகளாக இருக்க வேண்டும்.   அவரை, அந்த பஸ்ஸிலுள்ள சில பெண்கள் அண்ணா என அழைத்து, தமது பிள்ளைகளைக் குழப்படி செய்யாமல் பார்க்கச் சொன்னார்கள். அவரையும், அவரது மனைவியையும், பஸ்ஸில் நான் ஏறிய பொழுதில் இருந்தே பார்த்தேன். தமது மகளை தங்கள் இருவர் மடியிலும் கிடத்திவைத்து, அந்தச் சிறுமி நிம்மதியாக நித்திரை கொள்ள, அங்கு அண்ணா என்று அழைக்கப்பட...

தகவல்களின் தரம்..!

படம்
  இன்று காலை உடல் சற்று சோர்வாக இருந்தபோதிலும், உடற்பயிற்சி செய்ய முனைந்தேன். அப்போது, ஒரு பாதுகாப்பு உத்தியோகஸ்தர் போனுடன் இருந்தார். என்னைக் கவனித்தாலும் போனில் ஏதோ பார்த்துக் கேட்டுக்கொண்டு இருந்தார். இந்தத் தொலைபேசிகள் வந்து, மனிதர்களை எங்கும் படிக்கவும் மற்றும் பார்க்கவும் வைக்கின்றன..! உண்மையில் இனி கல்வி என்பது அனைவருக்கு உரித்தாகிய ஒன்று தான்.   யாரும் விருப்பம் இருந்தால் எதையும் படிக்கலாம். பணம் இருந்தால், இன்னும் பணம் சம்பாதிக்கக்கூடிய கல்வியை இணைய உதவியுடன் தொலைபேசி வாயிலாகப் படிக்கலாம்..! அறிவை வளர்க்க வேண்டும் என்றால் தொலைபேசிகள் ஊடாக,   தொலைபேசிக்கும் மனிதனுக்கும் உயிர் இருக்கும் வரை, தொடர்ந்து படிக்கலாம்..! தொலைபேசிக்கு உயிர் என்பது அதற்கு வழங்கும் மின்கல மின்சாரம் தான்..! முந்தைய காலத்தில் படிப்பதற்கு வயது தடையாக இருந்தது..! மொழி தடையாக இருந்தது..!   வசதி வாய்ப்புகள், பொருளாதாரம் என்பன தடையாக இருந்தன..! தற்போது இவை எல்லாம்   பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளன..! பாடசாலைக்கல்வி, தொழில் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, ஆய்வுகள் மற்றும் ஆக்கங்களுக்கான...

கன்னித்திரை சிகிச்சை (hymenoplasty)..!

படம்
  முந்தைய காலங்களில் பெண்கள்   வேலைக்கு செல்லக்கூடாது, விளையாடக்கூடாது, வீட்டிற்குள் மட்டும் தான் இருக்க வேண்டும்..! வெளியில் சென்றால், ஏதாவது வெளியிலுள்ள பிற ஆடவர்கள், அவளை துஷ்பிரயோகம் செய்தால் அவர்களுக்கு வாழ்வே இல்லை..! அல்லது அந்தப்பெண், தான் விரும்பிய ஒரு ஆடவனுடன் தனது காதலைப் பகிர்ந்து கொண்டால், பின்னர் அந்த ஆடவனைத் தவிர வேறு யாரையும் மணம் முடிக்க இயலாது..!   இயற்கையே அதனைக் காட்டிக்கொடுத்துவிடும்..! அவளது கன்னித்தன்மையை மீளப்பெறவே முடியாது. இது தான் எனக்குத் தெரிய நீண்டகாலமாக இருக்கும் பழக்கம் அல்லது நடைமுறை..! ஆனால் நவீன மருத்துவத்தில் இதற்கு வசதி வந்துள்ளது..! பெண்களின் குறியில் ஏற்பட்டுள்ள விரிவை தையல் மூலம் மீண்டும் பழையவாறு இருக்கச் செய்ய முடியும். இதற்குப் பெயரே கன்னித்திரைச் சிகிச்சை..! இந்தச் சிகிச்சை பொதுவாக யாருக்கு தேவை என்றால், திருமணம் ஆகாமல் ஏற்படும் தவறான உறவுகளால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்க இந்த சிகிச்சை முறை உதவுகின்றது..! யாரோ ஒரு ஆண், ஒரு பெண்ணை ஏமாற்றி, தனது இச்சைக்கு உட்படுத்திவிட்டு, திருமணம் செய்யாமல் தவிர்த்துவிட்டால், அந்தப...

கொடூர ஞாயிறு..!

படம்
    இவ்வாறு ஒரு கிழமை நாளை, நான் குறிப்பிட விரும்புவதில்லை..!  ஆனால் ஏன் என்று தெரியவில்லை..? சில நாட்கள் எனக்கு அப்படியாக அமைகின்றன..! அந்த வகையில் கடந்த ஞாயிறும் அமைந்து என்னைப் பயமுறுத்திவிட்டது..! இந்த சூழல் உருவாவதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் இயற்கையைத் தவிர யாரையும் குறை கூறமுடியாது..! இப்படியாக எம்மைத்தாண்டிய சக்திகளின் உருவாக்கங்களைத் தடுக்க   நாம் இறைவனைத் தான் நாட வேண்டும். ஒரு வயலில் உழைப்பு, நேரம், பணம் என அனைத்தையும் மூலதனமாகப் போட்டுவிட்டு, அந்த வயலின் விவசாயி இறுதியாக இயற்கையை அல்லது இறைவனைத் தான் வேண்ட வேண்டியுள்ளது..! கடும் வெயில் வந்தாலும்   பயிர்வாடும்..! கடும் மழை வந்தாலும் பயிர் அழியும்..!   ஆக, எல்லாம் அளவாக இருக்கும் போது தான் சரியான அறுவடை அந்த விவசாயிக்குக் கிடைக்கும். அப்போது தான் விவசாயியும் மகிழ்வான். அவனை நம்பிய மக்களும் மகிழ்வார்கள். உணவே அனைத்திற்கும் ஆதாரம். அதை உற்பத்தி பண்ணுபவனே போற்றுதலுக்குரிய தொழிலாளியாவான்..! அவன் ஒரு விவசாயி என்றாலும் சரி, மீனவன் என்றாலும் சரி, வேடுவன் என்றாலும் சரி அனைவரும் தமது முயற்ச...

தமிழர் அரசியல்..!

படம்
  இனங்களிலே ஆதிக்குடி தமிழ் இனம் என்று சிலர் சொல்கின்றார்கள்..! அது எவ்வளவிற்கு உண்மை என்று என்னால் சொல்லமுடியாது. ஆனால் ஒரு விடயம் சொல்லமுடியும். அது தமிழர்கள் என்றால் ஒற்றுமையில்லாதவர்கள்..!   சாதி, சமயம், இடம், பொருளாதாரம் என பல வழிகளில் பிளவுபட்டு இருக்கின்றார்கள்..! எவ்வளவு திறமையிருந்தாலும், தமிழர்கள் பொதுவாகத் தமிழர்களை மதிப்பது குறைவு..! அதற்கு உண்மையான காரணம் ஒருவர் எவ்வளவு பெருமையான காரியங்களை ஆற்றினாலும் அவரது இடம், சாதி, மதம், பொருளாதாரம் என்பதை வைத்து, தமக்கு நெருங்கியவராயின் ஏற்பார்கள்..! இல்லை என்றால் புறம்சொல்லி ஒதுக்குவார்கள். இது உலகத் தமிழர்கள் எல்லோருக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு, ஊரில் கழிவறை சுத்தம் செய்தால் அவனை வீட்டிற்கு கிட்ட அண்டவே விடமாட்டார்கள். அவனை அழுக்கு படிந்தவனாக, கீழ் சாதியாக, பொருளாதாரத்தில் தாழ்ந்தவனாகக் கருதுவார்கள்.   அதே சமயம் பொருளாதாரத்தில் வளர்ந்து இருக்கும் கீழ் சமூகத்தினரும், அதே தொழிலை   பணத்திற்காகச்   செய்யும் உயர் சமூகத்தினரும் வெளிநாடுகளில் இருந்தாலும், இரு சமூகத்தினர்களுக்கும் இடையில் திருமணத் தொடர்பை ஏற...

அல்சர் (Ulcer)..!

படம்
  அண்மைக்காலமாக எனது உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கின்றன..! இருந்தபோதிலும் எனது உடற்பயிற்சியும், ஓரளவிற்கு நேரம் கட்டிய உணவு முறையும் இந்நாள் வரை காப்பாற்றிவந்தது..! கடந்த மாதமும் உணவு சரியாக உடலில் சேமிக்காததால் பல இன்னல்களை அனுபவித்தேன்..! அந்நேரம் யாழ்ப்பாணத்தில் இருந்த படியால் வீட்டுச்சாப்பாட்டில் சில மாற்றங்களைச் செய்து அதிலிருந்து ஓரளவிற்கு தப்பித்னேன்..! அது மாத்திரமன்றி, எனது மருத்துவ நண்பரும் சில அறிவுரைகளை வழங்கியதுடன், “கூல்ஜெல்” என்ற பாணியையும் குடிக்கச் சொன்னார். அவர் சொன்னது போல் செய்தேன். இரண்டு மூன்று நாட்களில் உடல் வழமைக்கு வந்தது.  “எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்..!   உடலில் வரும் எந்த நோய்கும் உணவே மருந்தாகும்..!” என்று யாரோ ஒரு சித்தர் சொன்ன வாக்கை நம்புபவன் நான்..! குடற்புண் என்பதால் தயிரை நன்றாக எடுக்கும் படியும், கொதுமை மா உணவுகளை இயன்றவரை தவிர்க்கவும் குறிப்பாக கடை உணவுகளை முற்றாகத் தவிர்க்கவும் சொன்னார்கள். இதனை நடைமுறைப்படுத்துவது, தற்போதைய எனது வேலைச்சூழலில் சற்றுக்கடினமாக இருந்ததால், அப்படிய...

இடம் சார் செயல்..!

படம்
மனிதர்கள் எவ்வளவு அறிவு இருந்தாலும் அவர்கள் இயல்பாய் விலங்குகளே..! அந்த அறிவால் விலங்குக் குணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, சூழல்களைப் பொறுத்து அந்தக்குணங்கள் இடையிடையே எட்டிப்பார்க்கும்..! சில சமயங்களில் கோபமாகவோ அல்லது அழுகைாயகவே அல்லது வெறுப்பாகவோ அவை வெளிவரும்.  இவ்வாறான நிலை  வயதுகள் போனாலும் வரலாம்.  பல மனிதர்கள் வயதுகள் போகப் போக கற்ற அறிவுகள் மங்கி, மீண்டும் இயல்புக்குணமான விலங்குக்குணங்களே வெளிவருகின்றன..! நானும் அவ்வாறே தான்..!  எவ்வளவு எழுதினாலும், புரிந்தாலும், அன்பாக அடக்கிக்கொண்டு இருந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி பீறிட்டுக்கொண்டு அந்தக் குணங்கள் வருகின்றன..!  ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர், எனது தாயாரின் வளவிற்குச் சென்றேன். அங்கே நிறையத் தென்னை மரங்கள், பனை மரங்கள், கொய்யா மரங்கள், மாமரங்கள், நாவல் மரங்கள் எனப் பலவகையான மரங்கள் இருக்கின்றன. அங்கு சென்றால் ஒரு காட்டில் இருந்த உணர்வு ஏற்படும். பறவைகளைப் பார்க்கலாம். பாம்பு, முயல், கீரி போன்ற விலங்குகளைப் பார்க்கலாம்.  இவற்றோடு களவுக்காக வரும் மனித விலங்குகளையும் பார்க்கலா...

அம்மாவின் கோரிக்கை..!

படம்
    பொதுவாக எனது தாயார், அவருடன் தொடர்புடைய சந்தோசமான காரியங்களை செய்ய அனுமதிப்பது வழக்கம். அதுமாத்திரமன்றி, அவரும் தன்னால் இயன்ற ஒத்துழைப்பைத் தருவார்..! ஆனால் அண்மைக்காலமாக அவரது உடலில் ஏற்படும் உபாதைகள் அவரை மிகவும் மாற்றியுள்ளது..! உணவை மிகவும் குறைத்துள்ளார்..! மிகச் சிறிய தோற்றமுடைய வயதானவராக மாறிவிட்டார்..! முன்பு அம்மாவை  நான் “இடும்பி” என்று தான் சொல்வேன். அந்த அளவிற்கு மிகவும் உறுதியாக இருப்பார்..! நாம் செய்யும் குழப்படிகளுக்கு வெளுத்து வாங்கி விடுவார். இப்பவும் நினைவு இருக்கின்றது. 5ம் வகுப்பு படிப்பதற்கு முன்னுள்ள காலத்தில், எமது வீடுகளுக்குப் பின்னாலுள்ள வயல்களில் அல்லது தோட்டங்களில் விளையாட மற்றைய நண்பர்களுடன் சென்றுவிடுவேன். இதனைத் தாயாருக்குத் தெரியாமலே செய்வேன். ஆனால், தோட்டங்களுக்குள் மோப்பம் பிடித்துக்கொண்டு தேடிவந்துவிடுவார்..! வரும்போதே கையில் கம்பு இருக்கும். வீட்டிலும் பல முறை அகப்பைக்காம்பால் அடிவாங்கிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு..! அதற்கு ஒரே ஒரு காரணம், அப்பா சற்று மதுபாவிப்பதால் எம்மைக் கண்டிப்பதில்லை..! அதனால், தானே தந்தையின் பொறுப்பைச் ச...