இரண்டாவது ஆண்டுத்திவசம்..!
மனைவியின் தந்தையார் இறந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்று அவரது 2வது நினைவு தினம். நெருங்கிய உறவுகளோடு, திவசத்தை முடித்துவிட்டோம். போன கிழமை முழுக்க வருத்தம் பீடித்திருக்க, லீவு எடுக்க முடியாமல் தவித்து, இந்தக்கிழமை திங்களே திவசத்திற்காக லீவு எடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. 3வருட வேலைப்பளு ஒன்றாக அழுத்துவதால், நேரம் போவதும் தெரிவதில்லை. எப்போதும் ஒரு பரபரப்பு மனதிற்குள் இருந்துகொண்டே இருக்கின்றது..! மேலும் இன்று எமது நிறுவனத்தில் இரண்டாம் செமஸ்டருக்கான பரீட்சைகள் தொடங்குகின்றன. அது தொடர்பான முரண்பாடுகள் வீடுவரை வந்து, நேரத்தை விழுங்குவதுடன், மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது புரிகின்றது. பணமும், பணம் சார் நடவடிக்கைகளாலும் நன்மையைக் காட்டிலும் துன்பத்தை அறுவடை செய்வதற்கான வாய்ப்பே இந்தக்காலத்தில் அதிகம் கிடைக்கின்றது. சிலர் தெரிந்தும் தவறுகள் விடலாம். தெரியாமலும் தவறுகள் விடலாம். தவறுகள் செய்தவருக்கு, தவறுகள் செய்வதே தக்க பாடம் எனச்சிலர் நினைக்கின்றார்கள். இன்னும் சிலர் அந்தத்தவறுகளை இனிமேல் செய்யாத மாதிரி நட...