இரண்டாவது ஆண்டுத்திவசம்..!

 


 


மனைவியின் தந்தையார் இறந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்று அவரது 2வது நினைவு தினம்.   நெருங்கிய உறவுகளோடு, திவசத்தை முடித்துவிட்டோம்.

போன கிழமை முழுக்க வருத்தம் பீடித்திருக்க,  லீவு எடுக்க முடியாமல் தவித்து,   இந்தக்கிழமை திங்களே திவசத்திற்காக லீவு எடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. 3வருட வேலைப்பளு ஒன்றாக அழுத்துவதால், நேரம் போவதும் தெரிவதில்லை. எப்போதும் ஒரு  பரபரப்பு மனதிற்குள் இருந்துகொண்டே இருக்கின்றது..!

மேலும் இன்று எமது நிறுவனத்தில் இரண்டாம் செமஸ்டருக்கான பரீட்சைகள் தொடங்குகின்றன. அது தொடர்பான முரண்பாடுகள் வீடுவரை வந்து, நேரத்தை விழுங்குவதுடன், மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது புரிகின்றது. பணமும், பணம் சார் நடவடிக்கைகளாலும் நன்மையைக் காட்டிலும் துன்பத்தை அறுவடை செய்வதற்கான வாய்ப்பே இந்தக்காலத்தில் அதிகம் கிடைக்கின்றது.

சிலர் தெரிந்தும் தவறுகள் விடலாம். தெரியாமலும் தவறுகள் விடலாம். தவறுகள் செய்தவருக்கு, தவறுகள் செய்வதே தக்க பாடம் எனச்சிலர் நினைக்கின்றார்கள். இன்னும் சிலர் அந்தத்தவறுகளை இனிமேல் செய்யாத மாதிரி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்கின்றார்கள்.  முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்று சொல்வதைப்போல்,  பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்றும் விரும்புகின்றார்கள். இரண்டு பக்கங்களிலும் சரிபிழைகள் இருப்பதால், அவதானமாக நகர்வுகளைச் செய்யவேண்டும் என்பது மட்டும் புரிகின்றது.

இதேபோல் தலைமையகமும் விரைவாகச் சுத்துகின்றது. திடீர் திடீரென Online Zoom meeting என்று தீர்மானங்களுக்காக ஒன்றுசேரவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்..! பொருளாதாரச் சூழலால் மாணவர்களும், இடம், நாடு கடந்து பறக்கின்றார்கள்.  இவ்வாறான செயற்பாடுகளால், கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட தாக்கங்கள்  கொஞ்சம் குறைந்து, நாடும் ஆரோக்கியமாகின்றது என்பது மட்டும் மெதுவாகப் புரிகின்றது. நாடு நல்லாக இருந்தால் தான், நாம் நன்றாக இருக்க முடியும். ஓடினால், தொடர்ந்து ஓட வேண்டியது தான்..! உலக அரசியல் அதைநோக்கியே, மக்களை நகர்த்துகின்றது..!

 

ஆ.கெ.கோகிலன்

24-07-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!