பத்துதல..!

 


 

சிலம்பரசன் நடித்த இந்தப்படத்தில்  ரத்தம் பல இடங்களில் தெறிக்கின்றது..! தலை துண்டாகி விழுகின்றது..! கைகள் வெட்டப்படுகின்றன..! தனியாளாக எல்லாரையும், சுட்டும், கத்தியால் வெட்டியும், குத்தியும் கொல்லும்  கதாநாயகி இல்லாத வயதான கதாநாயகனாக சிலம்பரசன் நன்றாக நடித்துள்ளார். வன்முறைகள் அதிகம் என்பதால் என்னால் பல காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

இங்கு நல்லது செய்வதற்கு ஒரு கெட்ட முகம் தேவைப்படுகின்றது என்று  சொல்லி, நல்லதுக்காகக் கெட்டதுகள் பல செய்கின்றார்.

ஹீரோ இடைவேளைக்கு கிட்டவாக வந்து இறுதிக்காட்சி வரை தொடருகின்றார்.

இதற்கு முதலே படத்தின் இன்னொரு ஹீரோவான கௌதம் கார்த்திக் படம் தொடங்கியதில் இருந்து, இடைவேளைவரை அதிக காட்சிகளிலும், பின்னர் குறைவான காட்சிகளிலும் வந்து, நிறைவாக நடிக்கின்றார்.  இவருக்கு ஜோடியாகப் பவானி சங்கர் வருகின்றார். சில காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கின்றார். அதேபோல் சிலம்பரசனின் சகோதரியாக நடித்தவரும் நவீன பாசமலர் சாவித்திரிபோல்  நடித்துள்ளார். அவரது மகளாக நடித்த சிறுமியும், இடையிடையே வந்துசென்ற, சண்டைகளால் நொந்தவர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தினார்.

நடிகர் ஆரியாவின் மனைவி சாயிஷாவும், ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு, ரசிகர்களையும் பரவசப்படுத்தினார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை பல இடங்களில் ரசிக்க வைக்கின்றது. ஒளிப்பதிவும் சிறப்பு.

இப்படியான கதைகளைப்  பலமுறை பார்த்தாலும், ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரூடியோ கிறின் ஞானவேல்ராஜா தயாரிக்க, அதனை ஒபெலி என் கிருஷ்ணா  என்பவர் இயக்கியுள்ளார்.



2023இல் வெளிவந்த இப்படம் சிலம்பரசனுக்கு வணிகரீதியில் ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்துதல என வெற்றிபெறுவது  நீண்டகாலத்திற்குப்பிறகு, அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இனியாவது குடும்பம், குட்டிகள் என்று செட்டிலாகி அவரும் நிம்மதியாக இருந்து, அவரது ரசிகர்களும் நிம்மதியாக இருக்கக் காலம் வழிவிட வேண்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

24-07-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!