மைடியர் பூதம்

 


 


நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் போன்ற பல துறைகளில் மின்னிய பிரபுதேவா ஒரு பூதமாக நடித்து, சிறுவர்களை கவர எடுக்கப்பட்ட இந்தப்படத்தைப் பெரியவர்களும் கூடப்பார்க்கலாம்.

பிள்ளையில்லாமல் வாடிய  பூதராஜாவுக்கு நீண்டகாலத்திற்குப் பிறகு தவம் கிடந்து, ஒரு ஆண்பிள்ளை கிடைக்கின்றது. அவனோடு ராஜா மகிழ்ச்சியாக இருக்க, அந்த மகிழ்ச்சி புற்றுக்குள் தவம்செய்துகொண்டிருந்த, முனிவருக்கு பாதிப்பை ஏற்படுத்த, அவர்போட்ட சாபத்தால், சிறு சிலையாகப் பூமியில் புதையுண்டார் அந்த பூத ராஜா..!  பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு,

பூமியில் ஒரு திக்குவாய் மாணவன் யாருடனும் சரியாகப்பேசமுடியாமல் திணறிக் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகின்றான். தந்தை இல்லாமல் தனித்தாயாக அந்தச் சிறுவனை வளர்க்கின்றார். இந்த நிலையில் பூதத்தின்  சிலையைக்கண்டு, அதில் இருந்து பூதராஜாவை விடுவித்து, அதன் உதவியுடன் தனது பாடசாலையிலும், சக மாணவர்கள் இடத்திலும் மதிப்பைப் பெற்று மகிழ்வுடன் வாழும் நிலையில்,

முனிவரின் சாபத்தின் படி வெளிவந்த பூதம் குறிப்பிட்ட நாளில், அந்த சிலைக்குள் இருந்த மந்திரத்தை விடுவித்தவர் சொன்னால் தான், தனது மகனைச் சந்திக்க முடியும் என்ற நிலையில், பல சிக்கல்கள் தாண்டி, திக்குவாய்ச் சிறுவன் மந்திரம் சொல்ல, அனைவரும் மகிழ படம் முடிகின்றது. இப்படியான கதைகளை நீண்டகாலமாகக் கேட்டும், பார்த்தும் வருகின்றோம். அந்தவகையில் 2022இல் வெளிவந்த இப்படம்  என்னைப் பிரமிக்க வைக்கவில்லை என்றாலும் Zee தமிழ் Junior Super Starஇன்  Title Winner சிறுவன் அஸ்வந் அசோக்குமார், மற்றும் Zee தமிழ் ச ரி க ம பாவில் ஒரு நடுவராக வந்த ரம்மியா நம்பீசன் போன்றவர்களும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இ.இமானின் இசை, ஏனைய தொழில்நுட்பங்கள் அனைத்தும் பராவாயில்லை. என்.ராகவன் எழுதி இயக்கியுள்ளார். இயக்கமும் பராவாயில்லை. சிறுவர் பார்க்கலாம்.

பெரியோரும், இப்படியான கதைகளை விரும்பினால், பார்க்கலாம்.

 


ஆ.கெ.கோகிலன்

15-07-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!