இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோத்தபாய ராஜபக்ச..!

படம்
 

கதிரை..!

படம்
    உலகில் கதிரைக்கு என்ற தனி மரியாதை உண்டு. அதனைப் பிடிக்கவும் பறிக்கவும் பல போட்டிகள் நடப்பதுண்டு. எனக்கும் ஒரு காலத்தில் அப்படிப்பட்ட ஒரு ஆசை இருந்தது உண்மை. ஆனால் காலப்போக்கில் அந்த ஆசை அற்றுவிட்டது. எது வந்தாலும் சரி என்ற மனநிலைக்கு வர இயற்கை பல அநியாயங்களை எனக்குச் செய்துவிட்டது என நம்புகின்றேன். அன்றில் இருந்து இயற்கைக்கு கீழ் பணியத்தலைப்பட்டேன்.   அது இன்றுவரை தொடர்கின்றது. அதன் ஆசியுடன் பல வளர்ச்சிகளை நான் கண்டது உண்டு. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த இயற்கை தான். அதை வேண்டும் என்றால் இறைவன் என்றோ அல்லது எமது வரியப்புல அம்மன் என்றோ அழைக்கலாம். அதே இயற்கை, ஒரு நரம்பு வருத்தம் மூலம் பிளாஸ்டிக் கதிரையில் இருந்து என்னை மரக்கதிரைக்கு மாற்றியுள்ளது. இன்று நான், வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக நேரம் இருப்பது பின்னல் மரக்கதிரைகளிலே மட்டும் தான். ஒரு சொகுசுப் பிளாஸ்டிக் கதிரையில் அரை மணித்தியாலம் என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. இப்படியான கதிரைகள் பயன்பாட்டிற்கு வந்து 50 வருடங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் மரக்கதிரைகளின் பயன்பாடு பல நூறு ஆண்டுகள் தாண்டியது..! இதில் இர

நீல பொருளாதாரக் கொள்கை (Blue Economic concept)

படம்
    எமது நாடு தற்போது பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடியைச் சந்தித்துவருகின்றது. இந்நிலை இலங்கைக்கு மட்டும் ஏற்பட்ட ஒரு நிலை கிடையாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உலகிலுள்ள பல நாடுகள் இந்தச்சிக்கலில் மாட்டியுள்ளது வெட்டவெளிச்சம். இருந்தாலும் அந்தந்த நாடுகளின் பொருளாதார நிலை, வேறு பல காரணிகளால் ஓரளவிற்கு தாக்குப்பிடிக்கின்றது. ஆனால் இலங்கையால் அவ்வாறான ஒரு நிலையை அடையமுடியாமைக்குப் பல காரணங்கள் உண்டு. இனப்பிரச்சனை தொடர்பான சரியான நிலைப்பாட்டை இன்னும் எடுக்க முடியவில்லை. நாட்டைச் சரியான முறையில் வழிநடத்த முடியவில்லை. உண்மையில் உள்நாட்டு யுத்தம், மூளைசாலிகள் வெளியேற்றம், கொரோனா, உக்ரேன்-ரஷ்யா போரும், அவற்றோடு தொடர்புடைய புவியரசியல், இனவழிப்பு எனப்பல காரணங்களை,  நாடு இந்த நிலையை அடைந்ததற்கு கூறலாம். இனி எல்லோரும், கடந்த விடயங்களையும், நடந்ததையும் கதைப்பதைவிட நாட்டுக்கு என்ன நல்லது செய்யலாம் எனச்சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு துறைகளும் தனித்தனியே போதிய கவனமெடுத்து முன்னேற்றப்படவேண்டும். அந்தவகையில் கடல் வளமும் கருத்தில் எடுக்கப்படவேண்டும். எமது நாடு கடலுக்கு நடுவே இருப்பது ப

சிந்தி இனம்

படம்
  சிந்தி என்ற இனத்தின் தொடக்கமே பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணமாகும். இங்கு வசித்த இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே பின்நாட்களில், குறிப்பாக 1947இற்குப் பிறகு, பாகிஸ்தான் தனி முஸ்லீம் நாடாக மாறியபின்னர், அங்கு வாழ முடியாமல் தற்போதைய இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்துள்ளார்கள். இம்மக்களின் பாரம்பரியங்கள் முஸ்லீம் மக்களை ஒத்து இருந்தாலும் மதரீதியாக வேறுபடுகின்றனர். இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்தி மக்கள் அதிகம் வாழ்கின்றனர் . பல சிந்தி மக்கள் ராஜஸ்தான் , குஜராத் , மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தியாவின் தலைநகரான புது டில்லி போன்ற பல பகுதிகளில் வசிக்கின்றனர் .  இந்தியாவின் பெரும்பாலான சிந்திகள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள் (90%), சிந்தியில் சீக்கியர்களும் ஒரு முக்கிய சிறுபான்மையினராக   (5-10%) இருக்கின்றார்கள். இந்த இனத்தைச் சேர்ந்த பலர் இலங்கையிலும் வசிக்கின்றார்கள்.   அவர்களில் அதிகமானோர் வியாபாரமே செய்கின்றார்கள்.   அதிகமானோர் கொழும்பிலும், அந்நகரை அண்டியுள்ள   பிரதேசங்களிலும் வாழ்கின்றார்கள். இந்தி சினிமாவில் பிரபலமான ரன்வீர் சிங் மற்றும்

காலிஸ்தான் (Khalistan)

படம்
  காலிஸ்தான்   ( Khalistan ) என்ற பெயர் அண்மைக்காலமாக உலகெங்கும் அடிபடுகின்றது. குறிப்பாக இந்தியாவிலும், லண்டனிலும் அது தனது தேசியத்தை வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றது. உண்மையில் காலிஸ்தான் என்பது என்ன?   சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களையே இவ்வாறு கருதப்படுகின்றது. அவர்களின் ஒரு பகுதியினரின் தாயகமாக இந்தியப் பஞ்சாப்பையும், இன்னொரு பகுதியினரின் தாயகமான பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப்பையும் சேர்த்து, காலிஸ்தான் என்ற பிரதேசமாகக் கருதுகின்றார்கள்.  இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதே காலிஸ்தான் இயக்கம்   (Khalistan movement) என்பதாகும்.  இது,   சீக்கிய மதம்   சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஓர் அரசியல் இயக்கமாகும் .  சீக்கிய   மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில்   இந்தியாவின் பஞ்சாப்   மற்றும்   பாகிஸ்தானின் பஞ்சாப்   என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக  ஜ ர்னையில் சிங் பிந்தரன்வாலாவால்   (Jarnail Singh Bhindranwale)   அமைக்கப்பட்டது காலிஸ்தான்

முட்பாதை..!

படம்
    என்ன நடக்கும் என்று யாராலும் ஊகிக்கமுடியாதபடியே வாழ்க்கை செல்கின்றது. ஒவ்வொரு நாளும் மலர்களும், முட்களும் காலில் மிதிபடுகின்றன. மலர்கள் மகிழ்ச்சியைத்தரும் வேளை முட்கள் வலியைத்தருகின்றன. எதிர்காலப்பாதையில் இவை கலந்து கொட்டிக்கிடக்கின்றன. சிலருக்கு சிலகாலம் மலர்களை மிதிக்கவே வாய்ப்பை, இயற்கை வழங்குகின்றது. சிலருக்கு முட்களை மிதிக்க வாழ்க்கை அமைகின்றது. மலரோ முள்ளோ நாளை எதுவும் நடக்கலாம் என்ற ஒரு உண்மையைப் புரிய வேண்டும். இல்லை என்றால், வாழ்வே வேதனை போலாகிவிடும். வாழ்க்கைப் பயணத்தை முடிக்கத் தோன்றும். தொடர்ந்து முட்களை மிதிக்க மனம் இடம்கொடாது.                                            இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு குடும்பம்,  இந்தியாவிலுள்ள தெலுங்கானா பிரதேசத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். காரணம் இரண்டும் ஆண் பிள்ளைகள் அவர்களுக்கு இருந்தும் அவர்களால் சாதாரணமாக நடக்க முடியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்கள். வைத்தியர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. தொடர்கவலையைத் தாங்கமுடியாமல், கண்ணுக்கு எட்டியவரை முட்கள் மட்டுமே இருக்கும் பாதையில் பயணிக்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொல

பிரம்மாஸ்திரம் (Brahmastra)

படம்
  அமிதாப் பச்சன்,  சாருக்கான்,   நாகர்ஜூனா மற்றும் ரன்பீர் கபூர் ( Ranbir Kapoor ) , ஆலியாபாட்   போன்ற இந்தியத் திரைவானின் உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள   இந்தப்படத்தின் கதை எல்லா ஆயுதங்களையும் விட சக்தி வாய்ந்த ஆயுதம் அன்பு அல்லது காதல் என்பது தான்.   அதனை வைத்து இந்தப் பிரபஞ்சத்தையே அசைக்க முடியும் என நிரூபிக்க முயற்சித்துள்ளார்கள் படக்குழுவினர். கிராபிக் காட்சிகள் மூலம் சக்திகளின் வெளிப்பாடுகளைக் காட்டினாலும், சில வேளைகளில் நம்ப முடியாமலும், நிஜத்துடன் ஒட்டவும் மறுக்கின்றன. அஸ்திரங்கள் எனச் சொல்லிப் பல அஸ்திரங்கள் வருகின்றன. அஸ்திரங்களின் அஸ்திரம் பிரம்மாஸ்திரம் என்பதும், அதனை அடைவதும் நோக்கமாகக் கொண்ட ஒரு கொலைகார கும்பலிடம் இருந்து அந்த மகா அஸ்திரம் சிக்கி   பிரபஞ்ச அழிவுக்குப் போவதைத் தடுப்பதே ஹீரோ, ஹீரோயின்   வேலையாக இருக்கின்றது. கதையில் நிறையப் பூச்சுற்றல்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்குப் பிடிக்கலாம். முதியோருக்கும் பிடிக்கலாம். இளைஞர்களுக்கு படத்திலுள்ள காதல் காட்சிகளே அதிகம் பிடிக்கும் என நான் நம்புகின்றேன். இந்தப்படம் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது திரும

பிருத்விராஜ் (Samrat Prithviraj)

படம்
  இந்தி நடிகர் அக்சய் குமார் மாவிரன் பிருத்விராஜாக நடித்த இந்தப்படத்தின் கதை, ஒரு மாவீரன், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுப் பாடத்தைக் கண்முன்னே கொண்டுவருகின்றது.  சண்டைக்காட்சிகள், ஏனைய காட்சியமைப்புக்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பரவாயில்லை. பெரியப்பாவாக நடித்த சஞ்யய் தத்தின் நடிப்பு அமர்க்களமாக இருந்தது. அவரது மரணத்தோடு ஏதோ தோல்விப் பயம் படம் பார்க்கும்  எமக்கும் மனதில் பற்றிக்கொண்டது. படத்திலும் அதுவே நடந்தது.  ஆண், பெண் சமத்துவத்தைப் பேச வெளிக்கிட்ட இந்தப்படத்தில், இறுதியில் கணவனும், அவனது படைகளும் சூழ்ச்சியால் தோல்வியுற்றதை அறிந்த மனைவியும், ஏனைய படைவீரர்களின் மனைவிகளும் நெருப்பில் குதித்து உயிரை மாய்த்தது வேதனையாகவும், பெண்களின் தன்னம்பிக்கையை உடைப்பதாகவும் இருந்தது. இந்தக்கதை 700 வருடகாலத்திற்கு முன்னர் உண்மையில் நடந்திருந்தாலும், இன்று பார்க்கும் போது சில விடயங்களை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. அந்தப்பெண்கள்  உயிரைவிட்டதற்குப் பதிலாகப் போராடச்சென்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று மனம் ஏங்கியது. இந்தப்படத்தை துயரமான முடிவில் நிறுத்தாமல் இன்னும் ஏத

டி ப்ளாக் (D-Block)

படம்
  பெயரே வித்தியாசமாக இருக்கும் படத்தில் ஏதாவது வித்தியாசமாக இருக்கின்றதா எனப்பார்த்தால். ஆம் வித்தியாசமாக இருக்கின்றது. அது வில்லன் தனிய நின்று எல்லோருடனும் சண்டைபோட்டு வெல்கின்றார் என்பது தான்.  வழமையாக ஹீரோ செய்யும் வேலையை, கூட்டமாக அடித்தாலும் எதிர்க்கும் ஆற்றல் இந்தப்படத்தில் வில்லனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது..!  வழமையாக அருள்நிதி படம் என்றால் நம்பிப் பார்க்கலாம் என்ற உத்தரவாதத்தை இந்தப்படமும் தருகின்றது.  அதற்கு அருள்நிதியைப் பாராட்டலாம். ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஏதாவது வித்தியாசமாகக் கொடுக்க நினைப்பது சினிமாவில் நீடிக்க உதவும். இந்தக்காலத்தில் பெரிய ஹீரோக்களே வித்தியாசத்தை நோக்கி நகர்கையில் இவர்கள் அவ்வாறு செய்வதில் ஆச்சரியம் ஒன்றும்  இல்லை.  வந்த வழமையான கதைகளைத் தெரிவார்களேயானால் விரைவாக  திரையுலகைவிட்டுக் காணாமல்போக வாய்ப்புண்டு. இது அனைத்துக் கதாநாயகர்களுக்கும் பொருந்தும். எம்ஜியார், ரஜினி மாதிரி காலத்தை ஓட்ட இந்தக்காலத்து மக்கள் அவ்வளவு இழிச்சவாயன்கள் அல்ல. இந்தப்படத்தின் கதையின் களம் சைக்கோ திரில்லர்.  டி ப்ளாக்கிலுள்ள பெண்கள் விநோதமாக, சிறுத்தை அடித்

இதயம் இரண்டானதே (Decoupled)

படம்
  இது ஒரு வெப் தொடர்.   நெட்பிளிக்ஸில் (Netflix)   பல தொடராக வந்த ஒரு கதையின் தமிழ் பதிப்பே இதயம் இரண்டானது.   R. மாதவன், சுர்வீன் சவ்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த வெப்தொடரின் கதையே இந்திய மேல்தட்டு மக்களின் வாழ்வியலையும்,   திருமண முறிவையும், அதற்காக இருவரும் போடும் திட்டங்களும், அதற்குள் வரும் பாலியல் ரீதியிலான தேவைகள் பற்றி அலாசுவதும் படத்தின்   குறிக்கோளாகத் தெரிகின்றது.    நெட்பிளிக்ஸ்ஸில் வருகின்றது என்றால் சிறிது மேற்கத்தைய நாகரீக மக்களைக் கவரும் நோக்கிலே எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. படம் முழுவதும் நகைச்சுவை   இருக்கின்றது. காமமும் காதலும் ஆங்காங்கே அரசல் புரசலாகக் காட்சிப்படுத்தப்பட்டள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இன்னொரு பெண்ணும் ஆணும் கிடைக்கும் வகையிலே கதை நகர்கின்றது. இதில் கவலை என்ன வென்றால் இவர்களின் ஒரே மகள் படும் பாடு..!   பல வழியும் ஆண்களும், சதைக்கு அலையும் பெண்களும் காட்சிகளில் வந்து போகின்றார்கள். வீட்டுப்பணியாள், பாத்றூம் பயன்படுத்தியதையும், அதனை மேல்நிலை வர்க்க உணர்வோடு திட்டும் பெண்ணையும், வீடியோ எடுத்துப்போடும் காட்சி உண்மையில் சிறப்பாக இருந்தது.

மொழிகள் தோன்றிய விதம்.

படம்
  இற்றைக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் விலங்காக இருந்த மனிதன் சத்தங்களூடாக  தொடர்பாடலில் இறங்கிய காலத்தில், சத்தம், அதற்கான ஒரு குறிவடிவம், அவற்றிற்கு என்று ஒரு அர்த்தம்  என்ற அடிப்படையில் ஒரு மொழியை உருவாக்கினான்.  இதனை அந்தக்கால மனிதர்கள் ஏற்றுக்கொண்டு பழகினார்கள். பேசினார்கள். தாம், மற்றைய விலங்குகளைவிட மேன்மையானவர் என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்கள். மொழி வந்ததால்,  அதன் அடிப்படையில் அறிவு வருகின்றது. சிலரால் அந்த மொழியைக் கற்பதிலோ, அல்லது அறிவைப் பெருக்குவதிலோ சிக்கல் ஏற்படுகின்றது. இதன் காரணமாக சிலர் அறியாமையுடன் இருக்க நேருகின்றது. அறிவுள்ள மக்கள் மற்றவர்களை கட்டுபடுத்த பல சூழ்ச்சிகளும் செய்கின்றார்கள். அதனூடாக ஆளும் வர்க்கங்களும், அடிமை வர்க்கங்களும், இடைப்பட்ட வர்க்கங்களும் உருவாகின்றன. இவ்வாறாக ஆளும் வர்க்கங்களின் செயற்பாடுகளில் வெறுப்புற்ற,  அல்லது விரக்கியுற்ற மக்கள், வேறுவிதங்களில் ஒன்று சேர்கின்றார்கள். தமது கஷ்டங்களைப் பகிர்கின்றார்கள். இதனால் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக இவ்வாறானவர்கள் திரள்கின்றார்கள்.  அதனைத் தவிர்க்க வன்முறைகளை ஆளும் வர்க்கம் பிரயோகிக்க, தப்பி

உலக தண்ணீர் தினம்.

படம்
  தண்ணீர் என்பது காற்றுக்கு நிகராக மனிதனுக்குத் தேவைப்படுவது..!  தண்ணீர் இல்லை என்றால் இந்த உலகில் ஒன்றுமே இருக்காது. மனிதனுக்கு காற்று, நீர், உணவு இவையே அடிப்படையானது. ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும் அவ்வாறே அமைகின்றது. ஆனால் மனிதன் மட்டும் தண்ணீரை விரயப்படுத்துவதும்,  அவனது வியாபார எண்ணத்தாலும், உயிர்கள் மேலுள்ள அக்கறை இன்மையாலும் தண்ணீரைப் பழிக்கின்றான். போதாததற்கு அதனைத் திருத்துகின்றேன் என்ற பெயரில் தேவையில்லாத இரசாயனங்களைக் கலக்கின்றான். புதுப் போத்தல் தண்ணீரை உருவாக்கி, விற்பனைப்பொருளாக்குகின்றான். இதனைப் பயன்படுத்துவதனால் வரும் உபத்திரங்களுக்காக திரும்ப மருத்துவரை நாடி, உடலில் குறைபாடாக இருக்கும் பொருட்களை, காசுக்கு  விற்கின்றான் (இயல்பாகத் தண்ணீரில் இருக்கும் சத்துக்கள்). இயற்கையையே விற்க வெளிக்கிட்ட மனிதனை யாராலும் காப்பாற்ற முடியாது. இருந்தாலும் நாமும் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியாது. தண்ணீரே உயிருக்கான உணவு. ஜீவநீர்.  அதனை விரயமாக்காது பாதுகாப்போம்.  குறைந்த பட்சம் ஒவ்வொரு வருட மார்ச் மாதம் 22ம் திகதியாவது அதன் தேவைகளை உணர்ந்து, அது தொடர்பான உண்மையான விபரங்களை மற

சிட்டுக்குருவிகள்..!

படம்
  இந்தவருடம் மார்ச் மாதம் 20ம் திகதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. வளர்ந்து வரும் நாகரீக மோகங்களால் மனிதன் இயற்கையாக இருக்கும் எவ்வளவோ அற்புதமான விடயங்களை ரசிக்கத் தவறுகின்றான். ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் பறவைகளை ரசிக்கத் தெரிந்தவனுக்கு, இறைவனால், இயற்கையால் உருவாக்கப்பட்ட உயிருள்ள பறவைகளை ரசிக்க முடியவில்லை. அதன் சேட்டைகளைத் தொல்லைகளாகப் பார்க்கின்றான்..! அதன் எச்சங்களை, தமக்கும் வரும் கஷ்டங்களாக நினைக்கின்றான்.  ஆனால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் ஏதோவோர் விதத்தில் இணைந்து செயற்படுவதாலே சமநிலை பேணப்படுகின்றது. அந்தச் சமநிலையே எம்மை இதுநாள் வரை உயிருடன் வைத்துள்ளது.  நாமும் இயற்கையின் சமநிலைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் காரியங்களைத் தவிர்க்க வேண்டும். முடியாவிட்டாலும், குறைக்கவாவது வேண்டும்.  தொலைபேசிகளின் பாவனையும், அதற்குத் தேவையான மின்காந்த அலைகளும் பறவைகளுக்கு கேடாகவே அமைகின்றன. இதனை மையமாக வைத்து சங்கர் இயக்கிய எந்திரன் 2 என்ற திரைப்படமே வந்து சென்றது. இருந்தாலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எமது தேவைகள

தடைதாண்டும் பரீட்சை

படம்
  2020களின் ஆரம்பத்தில் தடைதாண்டும் பரீட்சை ஒன்றை வைப்பதற்கு எமது தலைமை நிறுவனம் தீர்மானித்தது. அதற்காக சில செயலமர்வுகளை நடாத்த முனைந்தது. அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட நரம்புப் பிரச்சனையால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர் சில மாதங்களில் கொரோனாத் தாக்கம் இலங்கையில் அதிகரிக்க, அதைத்தொடர்ந்த சூழலை நானும் ஏற்றுக்கொண்டேன். அதனை இறைவன் எனக்கு ஏற்படுத்தித்தந்த இடைவெளியாகவே பார்க்கின்றேன். இந்தநிலையில் மீண்டும் அந்தப்பரீட்சையை நடாத்த மேலிடம் முடிவு செய்து, அதற்கான செயலமர்வுகளையும் மீண்டும் நடாத்தியது. என்னால் இந்தமுறையும் போக முடியவில்லை. காரணம், அவர்கள் முழுக்க சிங்கள மொழிமூலவே அதனைச் செய்வார்கள். அங்குபோவதைவிட இங்கு இருந்து படிப்போம் எனநினைத்து, சுருக்கமான தாபனபக்கோவையினையும், நிதி ஒழுங்குவிதிகளையும் தயாரிக்க வெளிக்கிட்டேன். அதற்குள் பரீட்சையை அறிவித்துவிட்டார்கள். நான் நினைத்ததை முடிக்க முன்னர் பரீட்சைவந்துவிட்டது. இருப்பதை வைத்துக்கொண்டு, அங்கு சென்றவர்களின் சில குறிப்புக்களையும் வாங்கிக்கொண்டு, இயன்றவரை முயற்சித்து அந்தப் பரீட்சைகளை நிறைவாக எழுதிவிட்டு, இன்று காலையே வீடுவந்தேன்.