இதயம் இரண்டானதே (Decoupled)
இது ஒரு வெப் தொடர். நெட்பிளிக்ஸில் (Netflix) பல தொடராக வந்த ஒரு கதையின் தமிழ் பதிப்பே இதயம் இரண்டானது. R.மாதவன், சுர்வீன் சவ்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த வெப்தொடரின் கதையே இந்திய மேல்தட்டு மக்களின் வாழ்வியலையும், திருமண முறிவையும், அதற்காக இருவரும் போடும் திட்டங்களும், அதற்குள் வரும் பாலியல் ரீதியிலான தேவைகள் பற்றி அலாசுவதும் படத்தின் குறிக்கோளாகத் தெரிகின்றது. நெட்பிளிக்ஸ்ஸில் வருகின்றது என்றால் சிறிது மேற்கத்தைய நாகரீக மக்களைக் கவரும் நோக்கிலே எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. படம் முழுவதும் நகைச்சுவை இருக்கின்றது. காமமும் காதலும் ஆங்காங்கே அரசல் புரசலாகக் காட்சிப்படுத்தப்பட்டள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இன்னொரு பெண்ணும் ஆணும் கிடைக்கும் வகையிலே கதை நகர்கின்றது. இதில் கவலை என்ன வென்றால் இவர்களின் ஒரே மகள் படும் பாடு..! பல வழியும் ஆண்களும், சதைக்கு அலையும் பெண்களும் காட்சிகளில் வந்து போகின்றார்கள்.
வீட்டுப்பணியாள், பாத்றூம் பயன்படுத்தியதையும், அதனை மேல்நிலை வர்க்க உணர்வோடு திட்டும் பெண்ணையும், வீடியோ எடுத்துப்போடும் காட்சி உண்மையில் சிறப்பாக இருந்தது. வயது முதிர்ந்த தம்பதிகளுக்குள் இருக்கும் தாம்பத்தியமும், அதனால் வரக்கூடிய உடல் உபாதைகளும், அதனை தீர்க்க முனையும் மகளும், மற்றும் அவருக்கு துணைபோகும் கணவனும் (குறிப்பிட்ட நபரின் மருமகன்) படும் அவதியும் காட்சிப்படுத்திய விதம் சிரிப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியது.
திருமணம் எப்படி நடந்து இருவரும் இணைந்தார்களோ அதே போல் பிரிதிருமணமும்,
எதிர்முறையில் (Reverse) நடந்து இருவரும் மோதிரங்களைக் கழட்டி எறிந்த பின்னர் நட்புடன்
மகிழ்ச்சியாக இருவரும் இருப்பதும் புதுமையாக இருந்தது. குழப்பத்தில் இருந்த அவர்களது மகளுக்கும் ஒரு புரிவு
ஏற்பட்டது. அதேநேரம், மனைவியின் லண்டன் திட்டம் கணவனுக்குத் தெரியவர கதை முடிகின்றது.
ஹார்டிக் மேத்தா (Hardik Mehta) என்பவர் இயக்கி 2021இல் வெளிவந்த இந்த வெப்தொடரை ஒரு
முறை அனைவரும் பார்க்கலாம். இனி வரும் கால மணத்தொடர்புகளின் தலைவிதியே இப்படியாகத்
தான் இருக்குமோ எனப்பயமுறுத்தவும் செய்கின்றது இதன் கரு.
ஆ.கெ.கோகிலன்
23-03-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக