2வது ஆண்டு திவசம்
பின்னர் எனது அலுவலகச் சூழலில் சிக்குண்டேன். மாலை, வேலைமுடித்து வரும்போது, அவருடைய வீட்டிற்குச் சென்றேன். உணவுகள் காத்திருந்தன..!
மகனும், அவரின் மனைவியும், அவரது சகோதரியும், சாப்பிடச்சொன்னார்கள். வேறுவழியின்றி உண்டேன். வயிறு உப்பிவிட்டது. கடந்த 12 நாட்களாக கோவில் சோறும், சைவச்சாப்பாடும் உண்டு வாயுத்தொல்லை கூடிவிட்டது..! இன்று மாலை, இதனையும் உண்ண வயிறு வீங்கிவிட்டது. அத்துடன் அவர்கள் குடும்பப்பிரச்சனைகள் பற்றிப்பேச, எனது பிரச்சனையை மறைத்துப்பொறுமையுடன் அவர்களைச் சமாளித்தேன். இருந்தாலும் சில உபாதைகளை அடக்க முடியாது. அவர்களுக்கு உதவுவது எனது கடமை தான். நான் நிச்சயம் அதனைச் செய்ய முயல்வேன்.
அவர்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு, வீடு வந்து மனைவியுடனும் சிறிது சூடாகக் கதைத்துவிட்டு, உடனே படுத்துவிட்டேன். இடையில் மனைவி பூங்காவனப் பிரசாதம் தரும்போது வாங்கி உண்டுவிட்டு மீண்டும் படுத்துவிட்டேன். இரவு 10 மணிக்கு கிட்டவாகத் தம்பியின் போன் அழைப்பால் எழும்பி, அவருடன் கதைத்த பின்னர் திரும்ப இயல்புக்கு வந்தேன்.
எமது ஊர்க்கோவில் திருவிழா முடிந்த இந்தச் சூழலில் அவரது ஆண்டுத்திவசம் வந்தால், பல அவருடைய வெளிநாட்டு உறவுகள் கலந்து சிறப்பித்தார்கள். மனம் போல வாழ்க்கை. நல்லதை
நினைத்தால் நல்லதே நடக்கும். அவ்வாறே அவருக்கும் நடந்தன. அவரது ஆத்மா மேலும் நிம்மதியடையட்டும். அவரது மகனின் வாழ்வும் மேம்படட்டும். நாமும் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம். இறைவனின் கிருபையே
வெற்றியை அளிக்கும்.
ஆ.கெ.கோகிலன்
07-03-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக