முன்னாள் பணிப்பாளர்..!

 



இன்று நான் வேலைக்குப்போகும் போது சிறு குழப்பத்துடனே சென்றேன். எனது மனைவியின் மாமா இறந்து, இரண்டாவது ஆண்டுத்திவசம். அவரது மகன் என்னையும் வரும்படி அழைத்திருந்தார். இருந்தாலும் நாளை மறுநாள் எனது ஊர்பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லவேண்டிய காரணத்தால் அந்நாளில் லீவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றும் அரைநேரமாவது வேலைசெய்துவிட்டு வரலாம் என நினைத்து வேலைக்குச் சென்றேன்.

சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதில் முதன்மையானது எனது நிறுவன முன்னாள் பணிப்பாளர்   வந்திருந்தார். அவருக்கான சில கடமைகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன. அவரும் பலமுறை வரநினைத்தும் வரமுடியவில்லை. எமது நிறுவனச்சூழலும் அதற்கு இடம்கொடுக்கவில்லை. அண்மைக்கால அனுபவம் எம்மை எல்லாம் மாற்றியிருந்தது. சூழல் சாதகமாக வந்ததால் அந்தக்கடமையை நிறைவாகச் செய்ய முடிந்தது.

எமது நிறுவன 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவரை கௌரவிக்க நினைத்தோம்.  இன்று தான் அது நடந்தது.  அதுமாத்திரமன்றி, பிரிவுபச்சாரத்தையும் நடத்த முடியவில்லை. குறிப்பாக அவருக்கான நினைவுப் பரிசைக் கொடுக்க இயலவில்லை. ஆனால் அந்தக்கடமைகளையும் இன்று செய்தேன். அவருடன் சேர்ந்து சில புகைப்படங்களும் எடுத்தேன்.

அவரும் பல அறிவுரைகளை எனக்கு வழங்கினார். முன்பு நான், அவருடன் சில அலுவலகரீதியிலான முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் நான் அவரை மதித்தேன்.  அவர் அளித்த உணவு விருந்தில் கூடக்கலந்துகொண்டேன். நல்ல மனிதர். ஆனால் இறுக்கமாகவும், குழந்தைத்தனமாகவும் இருப்பதால் பல சங்கடங்களைச் சந்தித்தார். நாங்களும் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், காலம் தற்போது அவை எல்லாவற்றையும் ஆற்றிவிட்டது என்றே நம்புகின்றேன்.

 

ஆ.கெ.கோகிலன்

07-03-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!