பிரம்மாஸ்திரம் (Brahmastra)

 


அமிதாப் பச்சன், சாருக்கான், நாகர்ஜூனா மற்றும் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), ஆலியாபாட்  போன்ற இந்தியத் திரைவானின் உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள  இந்தப்படத்தின் கதை எல்லா ஆயுதங்களையும் விட சக்தி வாய்ந்த ஆயுதம் அன்பு அல்லது காதல் என்பது தான்.  அதனை வைத்து இந்தப் பிரபஞ்சத்தையே அசைக்க முடியும் என நிரூபிக்க முயற்சித்துள்ளார்கள் படக்குழுவினர்.


கிராபிக் காட்சிகள் மூலம் சக்திகளின் வெளிப்பாடுகளைக் காட்டினாலும், சில வேளைகளில் நம்ப முடியாமலும், நிஜத்துடன் ஒட்டவும் மறுக்கின்றன.


அஸ்திரங்கள் எனச் சொல்லிப் பல அஸ்திரங்கள் வருகின்றன. அஸ்திரங்களின் அஸ்திரம் பிரம்மாஸ்திரம் என்பதும், அதனை அடைவதும் நோக்கமாகக் கொண்ட ஒரு கொலைகார கும்பலிடம் இருந்து அந்த மகா அஸ்திரம் சிக்கி  பிரபஞ்ச அழிவுக்குப் போவதைத் தடுப்பதே ஹீரோ, ஹீரோயின்  வேலையாக இருக்கின்றது. கதையில் நிறையப் பூச்சுற்றல்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்குப் பிடிக்கலாம். முதியோருக்கும் பிடிக்கலாம். இளைஞர்களுக்கு படத்திலுள்ள காதல் காட்சிகளே அதிகம் பிடிக்கும் என நான் நம்புகின்றேன். இந்தப்படம் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது திருமணத்திலும் முடிந்து தற்போது, குழந்தையும் உள்ளது அவர்களுக்கு..!

நிஜக்காதலர்களாக மாறியதால் சில காட்சிகளில் நிஜமான உணர்வுகளை வெளிப்படுத்த முடிந்துள்ளது.

பிரம்மாஸ்திரத்தின் 3 பாகங்கள் 3 பேரிடம் இருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து, அஸ்திரத்தைக் கைப்பற்றுவதே இதே அளவிலான சக்திவாய்ந்த வில்லன் குழுவின் வேலை. இவற்றில் இந்தத் துண்டுகளைப் பாதுகாப்பதற்காக சாருக்கானும், நாகர்ஜூனாவும், அமிதாப்பும்  உதவியுள்ளார்கள்.

படம் ஓரளவிற்கு வெற்றிபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் படத்தின் தயாரிப்புச் செலவுடன் ஒப்பிடும் போது அந்தவெற்றி போதாது என்றே தோன்றுகின்றது.


அயான் முகர்ஜி (Ayan Mukerji) என்ற இயக்குனர் படத்தை காட்டிய விதம் கனவு போலவே கலர்புல்லாக இருந்தது. இருந்தாலும் இன்னும்  கிராபிக்ஸில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. நிறங்களுக்குள் உணர்வுகள் மறைந்துவிடுகின்றன.  அதுவும் வெளிச்சம் வரும்போது, எல்லார் முகத்திலும் ஒளிவிழும் போது சில உணர்வுகள் புரியவில்லை.  இந்தக்காரணத்தால் இந்தப்படத்தை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. அதிக ஒளி கண்ணை மங்கச்செய்து, உறங்க வைத்துவிடும். ஒருவாறு கஷ்டப்பட்டு படத்தை இன்றோடு பார்த்து முடித்துவிட்டேன்.

நல்ல படம் என்று சொல்ல முடியவில்லை. ஒருமுறை வேண்டும் என்றால் பார்க்கலாம்.

 


ஆ.கெ.கோகிலன்.

26-03-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!