மொழிகள் தோன்றிய விதம்.

 



இற்றைக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் விலங்காக இருந்த மனிதன் சத்தங்களூடாக  தொடர்பாடலில் இறங்கிய காலத்தில், சத்தம், அதற்கான ஒரு குறிவடிவம், அவற்றிற்கு என்று ஒரு அர்த்தம்  என்ற அடிப்படையில் ஒரு மொழியை உருவாக்கினான்.  இதனை அந்தக்கால மனிதர்கள் ஏற்றுக்கொண்டு பழகினார்கள். பேசினார்கள். தாம், மற்றைய விலங்குகளைவிட மேன்மையானவர் என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்கள். மொழி வந்ததால்,  அதன் அடிப்படையில் அறிவு வருகின்றது. சிலரால் அந்த மொழியைக் கற்பதிலோ, அல்லது அறிவைப் பெருக்குவதிலோ சிக்கல் ஏற்படுகின்றது. இதன் காரணமாக சிலர் அறியாமையுடன் இருக்க நேருகின்றது. அறிவுள்ள மக்கள் மற்றவர்களை கட்டுபடுத்த பல சூழ்ச்சிகளும் செய்கின்றார்கள். அதனூடாக ஆளும் வர்க்கங்களும், அடிமை வர்க்கங்களும், இடைப்பட்ட வர்க்கங்களும் உருவாகின்றன.

இவ்வாறாக ஆளும் வர்க்கங்களின் செயற்பாடுகளில் வெறுப்புற்ற,  அல்லது விரக்கியுற்ற மக்கள், வேறுவிதங்களில் ஒன்று சேர்கின்றார்கள். தமது கஷ்டங்களைப் பகிர்கின்றார்கள். இதனால் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக இவ்வாறானவர்கள் திரள்கின்றார்கள்.  அதனைத் தவிர்க்க வன்முறைகளை ஆளும் வர்க்கம் பிரயோகிக்க, தப்பி வேறு பகுதிகளுக்கு கூட்டமாக இடம்பெயர்கின்றார்கள். அங்கே, ஆளும் வர்க்கம் உருவாக்கிய பாசையை பேசினால், ஆபத்து என்ற நிலையில் ஆளும் வர்க்கமும், அவர்களோடு தொடர்புடைய மக்களும் புரியாத இன்னோர் மொழியை கண்டு அதனூடாக தமது தொடர்பாடலை  மேற்கொள்கின்றார்கள்.  இவ்வாறாக இரண்டாவது மொழி உருவாகின்றது. இந்த இரு மொழிகளுமே ஒரு சமயத்தில்  அந்தக்காலத்தில் இருந்துள்ளன.  பின்னர் இந்த இருபகுதியிலும் இவ்வாறான பிரச்சனைகள் எழ, மேலும் மொழிகள், 4, 8, 16  என்ற எண்ணிக்கையில் பரவி வந்துள்ளன. இன்று ஆயிரக்கணக்கான மொழிகள்  உலகில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. 

இந்த மொழிகளுக்குத் தகுந்த வாழ்வியல்களும், கலாசாரங்களும்,  மதங்களும் அந்தந்த  மக்கள் கூட்டத்தால் உருவாக்கப்படுகின்றன. ஆதியிலே இயற்கையை வணங்கிய மனிதன் பின்னர் பல வடிவங்களில் கடவுளைக் காண்கின்றான். இதுவும் அறிவின் ஒரு நிலையே.



இன்றைய காலத்தில் பல மொழிகள், பல மதங்கள், பல தொழில்கள், அதற்கான பல திறன்கள் எனவிருக்கின்றன. இவை எல்லாம் தேவைப்பட்டும், நவீன கணினித் தொழில்நுட்பங்களூடாக, இவற்றை நேரடியாகவே மூளைக்கு அனு்பும் (வழங்கும்) நிலைக்கு கிட்ட வந்துள்ளான் (Neural Link). விஞ்ஞானம் அந்த அளவிற்கு அவனைக் கொண்டு வந்துள்ளது.



இனிவரும் காலம் எப்படி என்பதும், எதிர் காலத்தில் இதனால் என்ன சிக்கல்கள் வரப்போகின்றது என்பதும், அவற்றில் இருந்து நன்மைகளை மட்டும் பெற்று, பிரச்சனையின்றி வாழ, இனிமேல் அது தொடர்பான  விழிப்புணர்வே நமக்கெல்லாம் எல்லாம் தேவை.



ஆ.கெ.கோகிலன்.

22-03-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!