சிந்தி இனம்
சிந்தி என்ற இனத்தின் தொடக்கமே பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணமாகும். இங்கு வசித்த இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே பின்நாட்களில், குறிப்பாக 1947இற்குப் பிறகு, பாகிஸ்தான் தனி முஸ்லீம் நாடாக மாறியபின்னர், அங்கு வாழ முடியாமல் தற்போதைய இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்தி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். பல சிந்தி மக்கள் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தியாவின் தலைநகரான புது டில்லி போன்ற பல பகுதிகளில் வசிக்கின்றனர்.
இந்தியாவின் பெரும்பாலான சிந்திகள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள் (90%), சிந்தியில் சீக்கியர்களும் ஒரு முக்கிய சிறுபான்மையினராக (5-10%) இருக்கின்றார்கள்.
இந்த இனத்தைச்
சேர்ந்த பலர் இலங்கையிலும் வசிக்கின்றார்கள்.
அவர்களில் அதிகமானோர் வியாபாரமே செய்கின்றார்கள். அதிகமானோர் கொழும்பிலும், அந்நகரை அண்டியுள்ள பிரதேசங்களிலும் வாழ்கின்றார்கள்.
இந்தி சினிமாவில் பிரபலமான ரன்வீர் சிங் மற்றும் கியாரா அட்வானி
(Kiara Advani) போன்றவர்கள் சிந்தியின மக்களே. குறிப்பாக ரன்வீர் சிந்தி இன சீக்கியர்.
அதேபோல், தமிழில் மிகவும் பிரபலமான நடிகரான அஜித்தின் தாயாரும் சிந்தி இனத்தைச் சேர்ந்தவரே. நடிகை தமன்னாவும் சிந்தி இனத்தவரே.
ஆ.கெ.கோகிலன்
29-03-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக