உலக தண்ணீர் தினம்.

 



தண்ணீர் என்பது காற்றுக்கு நிகராக மனிதனுக்குத் தேவைப்படுவது..!  தண்ணீர் இல்லை என்றால் இந்த உலகில் ஒன்றுமே இருக்காது. மனிதனுக்கு காற்று, நீர், உணவு இவையே அடிப்படையானது. ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும் அவ்வாறே அமைகின்றது. ஆனால் மனிதன் மட்டும் தண்ணீரை விரயப்படுத்துவதும்,  அவனது வியாபார எண்ணத்தாலும், உயிர்கள் மேலுள்ள அக்கறை இன்மையாலும் தண்ணீரைப் பழிக்கின்றான். போதாததற்கு அதனைத் திருத்துகின்றேன் என்ற பெயரில் தேவையில்லாத இரசாயனங்களைக் கலக்கின்றான். புதுப் போத்தல் தண்ணீரை உருவாக்கி, விற்பனைப்பொருளாக்குகின்றான். இதனைப் பயன்படுத்துவதனால் வரும் உபத்திரங்களுக்காக திரும்ப மருத்துவரை நாடி, உடலில் குறைபாடாக இருக்கும் பொருட்களை, காசுக்கு  விற்கின்றான் (இயல்பாகத் தண்ணீரில் இருக்கும் சத்துக்கள்). இயற்கையையே விற்க வெளிக்கிட்ட மனிதனை யாராலும் காப்பாற்ற முடியாது. இருந்தாலும் நாமும் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியாது.
தண்ணீரே உயிருக்கான உணவு. ஜீவநீர்.  அதனை விரயமாக்காது பாதுகாப்போம். 



குறைந்த பட்சம் ஒவ்வொரு வருட மார்ச் மாதம் 22ம் திகதியாவது அதன் தேவைகளை உணர்ந்து, அது தொடர்பான உண்மையான விபரங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.


அனைத்து உயிர்களும் இருந்தால் தான் உலகு இருக்கும்.
உலகு இருந்தால் தான் நாமே இருப்போம்.
தண்ணீர் இல்லை என்றால் உலகே இருக்காது.
“நீர் இன்றி அமையாது உலகு..!”
உலகில் ஏற்படும் காலநிலைமாற்றங்களுடன் மனித ஆசைகளும், ஆய்வுகளும் தொடர்புபடுகின்றன. இயற்கையைப் பாதிக்காத, உயிர்களைப் பாதிக்காத எதனையும் நாம் வரவேற்கலாம். மாறாக பாதிப்பு இருக்கும் என்று தெரிந்தால், அதனைத் தடுத்து, உலகைப் பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும்.

ஆ.கெ.கோகிலன்
22-03-2023.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!