கதிரை..!

 


 


உலகில் கதிரைக்கு என்ற தனி மரியாதை உண்டு. அதனைப் பிடிக்கவும் பறிக்கவும் பல போட்டிகள் நடப்பதுண்டு.

எனக்கும் ஒரு காலத்தில் அப்படிப்பட்ட ஒரு ஆசை இருந்தது உண்மை. ஆனால் காலப்போக்கில் அந்த ஆசை அற்றுவிட்டது. எது வந்தாலும் சரி என்ற மனநிலைக்கு வர இயற்கை பல அநியாயங்களை எனக்குச் செய்துவிட்டது என நம்புகின்றேன். அன்றில் இருந்து இயற்கைக்கு கீழ் பணியத்தலைப்பட்டேன்.  அது இன்றுவரை தொடர்கின்றது. அதன் ஆசியுடன் பல வளர்ச்சிகளை நான் கண்டது உண்டு. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த இயற்கை தான். அதை வேண்டும் என்றால் இறைவன் என்றோ அல்லது எமது வரியப்புல அம்மன் என்றோ அழைக்கலாம்.

அதே இயற்கை, ஒரு நரம்பு வருத்தம் மூலம் பிளாஸ்டிக் கதிரையில் இருந்து என்னை மரக்கதிரைக்கு மாற்றியுள்ளது.

இன்று நான், வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக நேரம் இருப்பது பின்னல் மரக்கதிரைகளிலே மட்டும் தான். ஒரு சொகுசுப் பிளாஸ்டிக் கதிரையில் அரை மணித்தியாலம் என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை.

இப்படியான கதிரைகள் பயன்பாட்டிற்கு வந்து 50 வருடங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் மரக்கதிரைகளின் பயன்பாடு பல நூறு ஆண்டுகள் தாண்டியது..!

இதில் இருந்தே நாம் நோக்கமுடியும் எது சிறந்தது என்று..? கூடிய காலப்பகுதிகள் கொடுத்துச் சோதிக்கப்பட்ட நல்ல பொருட்களே, இயற்கை எம்மைப் பயன்படுத்த அனுமதித்த பொருட்களாகும். அந்தவகையில் மரக்கதிரை, சொகுசுப் பிளாஸ்டிக் கதிரையைவிட மேலானது என்பது எனது நிலைப்பாடு.

 


ஆ.கெ.கோகிலன்

31-03-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!