கடமையைச் செய்..!

 


நாம் வாழ்க்கையில் எவ்வளவோ முயற்சிகள் செய்திருப்போம். அதற்கான பலன்கள் உடனே கிடைக்காவிட்டால் சோர்ந்து போவோம். கடமையைக் கூட செய்ய மனமில்லாமல் தவிப்போம்.  எமக்கு என்று ஒரு கடமை, தரப்பட்ட சந்தர்பத்தில், எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டாலும், நாம் செய்ய வேண்டிய சேவையைச் செய்தே ஆகவேண்டும். 

ஆனால் உண்மையில் செய்கின்றோமா..? இதற்கான பதிலில் இருந்தே இந்தப்படத்தின் கதை பிறந்துள்ளது. எமது தகுதிக்கான வேலை கிடைக்காவிட்டாலும், எமக்கும் அந்த வேலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம். அல்லது எமது சேவை  அங்கு தேவைப்படலாம். இதற்காகவேனும் அந்தவேலை எமக்கு கிடைத்திருக்கலாம். சில விடயங்கள் எமக்குப்புரியாவிட்டாலும்,  இயற்கைக்கு அது புரிகின்றது. காலம் போகப் போகத் தான், அவை எமக்குப் புரியலாம். சில சமயம் புரியாமலே போகலாம்..!

இந்தப்படத்தில், ஒரு கட்டிடப்பொறியியலாளர் வேலையில்லாமல் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும்போது அந்தக்கட்டிடத்தின் தன்மையை அறிந்து அங்கு வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யமுன்னர், அதைவிரும்பாதவர்களால் தாக்குதலுக்கு உட்பட்டு, உடல் அசையமுடியாமல், கதைக்க முடியாமல்  இருக்கின்ற நிலையில்  எப்படியாவது அந்தக்கட்டிடத்திலுள்ள மக்களை காப்பாற்றத் துடிக்கின்றார்..!

அவர் எண்ணம் எப்படி நிறைவேறியது..? என்பதே மீதிக்கதை. நாயகன் S.J. சூரியா சிறப்பாக நடித்துள்ளார். அவரைவிட இந்தபாத்திரத்திற்குப் பொருத்தமான நபர் கிடையாது. யசிகா ஆனந்த் , வின்சென்ட் அசோகன், சார்ள்ஸ் விநோத், மொட்டை இராயேந்திரம், மற்றும் மோகன் வைத்தியா போன்ற பலர் நடித்திருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது. தொழில்நுட்பப்பிரிவினரும் தரமாகச் செய்துள்ளார்கள்.  இப்படத்திற்கான கதையை எழுதி, இயக்கியுள்ளார் வெங்கட் ராகவன். அத்துடன் சில காட்சிகளிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் ராகவன்

சில புதுமையான காட்சிகளை வைத்துள்ளார். குறிப்பாக நாயகன் வாயால் கதைக்க முடியாமல், உடல் பாதிக்கப்பட்ட நிலையில்  பகுதி உடல்மொழி மூலம், கதைப்பது ஆச்சரியமாக இருந்தது. ஹப்பர் அக்டிவேட் ஆகும்போது, அவர்போடும் சண்டைக்காட்சிகள்  சிறப்பு. அதுமாத்திரமன்றி, வித்தியாசமாக இருந்தன. நாயகிக்கும் சிறப்பாக நடிக்க வாய்ப்புக்குறைவு. இருந்தாலும், கொடுத்ததைச் சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் தமது கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.  நாமும் ரசனையுடன் பார்த்தால், படம் நன்றாகவே இருக்கும்.

 


ஆ.கெ.கோகிலன்

28-02-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!