காலிஸ்தான் (Khalistan)

 


காலிஸ்தான்  (Khalistan) என்ற பெயர் அண்மைக்காலமாக உலகெங்கும் அடிபடுகின்றது.

குறிப்பாக இந்தியாவிலும், லண்டனிலும் அது தனது தேசியத்தை வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றது.



உண்மையில் காலிஸ்தான் என்பது என்ன?

 சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களையே இவ்வாறு கருதப்படுகின்றது. அவர்களின் ஒரு பகுதியினரின் தாயகமாக இந்தியப் பஞ்சாப்பையும், இன்னொரு பகுதியினரின் தாயகமான பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப்பையும் சேர்த்து, காலிஸ்தான் என்ற பிரதேசமாகக் கருதுகின்றார்கள். 



இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதே காலிஸ்தான் இயக்கம் (Khalistan movement) என்பதாகும். இது, சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஓர் அரசியல் இயக்கமாகும்

சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் (Jarnail Singh Bhindranwale) அமைக்கப்பட்டது காலிஸ்தான் இயக்கம்.



பஞ்சாப் மாகாணம் சீக்கியர்களின் பாரம்பரிய நிலப்பகுதியாகும். இந்திய நிலப்பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வருவருதற்கு முன் சுமார் 50 ஆண்டுகள் இப்பகுதிகளை சீக்கிய பரம்பரையினர் ஆண்டனர்இந்திய பாகிஸ்தானிய பிரிவினைக்குப் பின் பெருமளவில் சீக்கியர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப்ஹரியானா

இமாச்சலப்பிரதேசத்திற்கு குடியேறினர்பிரிந்தவர்கள் ஒன்று சேர நடக்கும் போராட்டமே காலிஸ்தான் போராட்டம் என்பதன் அடிப்படை நோக்கமாகும். இது, இந்த இரு நாடுகளுக்கும் அசௌகரியத்தைக் கொடுத்துக்கொண்டு வருவதை தவிர்ப்பது கடினம்.

 


ஆ.கெ.கோகிலன்

28-03-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!