முட்பாதை..!

 


 


என்ன நடக்கும் என்று யாராலும் ஊகிக்கமுடியாதபடியே வாழ்க்கை செல்கின்றது. ஒவ்வொரு நாளும் மலர்களும், முட்களும் காலில் மிதிபடுகின்றன. மலர்கள் மகிழ்ச்சியைத்தரும் வேளை முட்கள் வலியைத்தருகின்றன. எதிர்காலப்பாதையில் இவை கலந்து கொட்டிக்கிடக்கின்றன. சிலருக்கு சிலகாலம் மலர்களை மிதிக்கவே வாய்ப்பை, இயற்கை வழங்குகின்றது. சிலருக்கு முட்களை மிதிக்க வாழ்க்கை அமைகின்றது. மலரோ முள்ளோ நாளை எதுவும் நடக்கலாம் என்ற ஒரு உண்மையைப் புரிய வேண்டும். இல்லை என்றால், வாழ்வே வேதனை போலாகிவிடும். வாழ்க்கைப் பயணத்தை முடிக்கத் தோன்றும். தொடர்ந்து முட்களை மிதிக்க மனம் இடம்கொடாது. 

                                         

இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு குடும்பம், இந்தியாவிலுள்ள தெலுங்கானா பிரதேசத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். காரணம் இரண்டும் ஆண் பிள்ளைகள் அவர்களுக்கு இருந்தும் அவர்களால் சாதாரணமாக நடக்க முடியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்கள். வைத்தியர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. தொடர்கவலையைத் தாங்கமுடியாமல், கண்ணுக்கு எட்டியவரை முட்கள் மட்டுமே இருக்கும் பாதையில் பயணிக்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டார்கள். பாவம் அவர்கள்..!

முட்கள் முடிந்ததும் மலர் தூவப்பட்ட பாதை கண்ணுக்குப் புலப்படாமல் போய்விட்டது அவர்களுக்கு..!

 


ஆ.கெ.கோகிலன்

28-03-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!