விநோத மாணவி..!

 


எமது நிறுவனத்தில் படித்த பழைய மாணவி ஒருவர் என்னைச் சந்தித்தார். அவர் மொழியியல் துறையில் ஆர்வமுள்ளவர். மும்மொழிப்புலமை பெற்றவர். அவரது சிங்கள மொழிப்புலமையை நானே ஆச்சரியத்துடன் பார்ப்பேன். 

நான் விரிவுரையாளராக இருக்கும்போதே அறிமுகமானவர். சில சங்கடமான சூழல்களைத் தாண்டி தன்னைச் செதுக்கிக்கொண்டிருப்பவர்.

2ம் ஆண்டுத்திவசத்திற்கு,  அரைநாள் லீவு எடுத்து, மதியம் செல்ல நினைக்க, அவரும் மதியமே வந்தார். எனது நம்பிக்கைக்குரிய அலுவலக  முகாமைத்துவ உதவியாளரும் அரைநாள் லீவு கோர, எனது லீவைத் தியாகம் செய்து, அவருக்கு வழங்கி முழுநாளும் அலுவலகத்தில் இருக்க முடிவெடுத்தேன்.

உளவியல், கல்வி மற்றும் பொதுவான விடயங்களை அந்தப்பழைய மாணவியுடன் கதைக்க, முன்னாள் பணிப்பாளரும் வந்தார். அதனால் அவரை முதலில் கௌரவிக்க முடிவுசெய்தேன். அத்துடன் இப்பெண்ணை பிறகும் சந்திக்கலாம் எனநினைத்து, அவரை அனுப்பினேன். அவரும் என்னிடம் சில ஆலோசனைகளை எதிர்பார்த்து வந்திருந்தார். ஆனால் சூழல் தடங்கலாகிவிட்டது.

முன்னாள் பணிப்பாளரை அனுப்பிய பின்னர், அந்தப்பெண் மீண்டும் வந்தார். அவருடன் நிறைய வாழ்வியல் தொடர்பான விடயங்களைப்பகிர்ந்தேன். அவரையும் அவரது புதிய வாழ்க்கைப்பயணத்தைசிறப்பாக வழிநடத்த எனக்குத்தெரிந்த அறிவுரைகளை வழங்கி அனுப்பினேன். அவரும் சில எனக்குத் தெரியாத விடயங்களைப் பகிர்ந்தார். இந்தப்பழைய இம்மாணவி, சிறுவயதில் எனது தங்கை இருந்த தோற்றத்தில் இருப்பதால், அவர்மேல் சற்று கரிசனை  அதிகம்.

சிலருடன் தான் சில விடயங்களைக் கதைக்க முடியும். எனது மனைவியைவிட எனது பிள்ளைகளுடன்  பல விடயங்களைப் நான் பகிர்வதுண்டு. அவ்வாறான சில விடயங்களை போன பிறப்பு உறவுகள் போன்றோருடனும் பகிர்வது மனதிற்கு நிறைவையும் நிம்மதியையும் அளிக்கின்றது.

 

ஆ.கெ.கோகிலன்

07-03-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!