நேர முகாமை..!
இன்று காலை 7.00 மணிக்கு நண்பரின் வீட்டில் நிற்கக்கூடியதாக எனது கடமைகளைச் செய்து, அவர் வீட்டிற்கு வரும்போது சொன்னார் ”கொஞ்ச நேரம் மெனக்கடவேண்டியிருக்கும் பராவாயில்லை தானே என்று..! ” நானும் வேறுவழியின்றி, பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, எத்தனை மணிக்கு கீரிமலைக்குப் போகக் கூடியதாக இருக்கும் எனக்கேட்க ”7.30 அல்லது 8.00இற்குள் போகலாம்..” என்றார். ஆனால் 8.00 மணி தாண்டும்போது தான் புரிந்தது தற்போது போகும் எண்ணமில்லை. நண்பரின் தமையனும் எனது நண்பரே. அவரும் சொன்னார் ”சடங்குகள் செய்வதற்கு, சோறு, பொங்கல், வெண்பொங்கல், ரொட்டி போன்றன இன்னும் செய்யவில்லை. செய்துகொண்டு தான் போகலாம்..” நான் நினைத்தேன் இன்று 10.00 மணிக்குக் கூடப் போகமுடியாது போலும் என்று..! மனைவி சரியாக காலை 11.00 மணிக்கு சாமத்திய வீட்டுக்குப் போகக்கூடிய வகையில் வரச்சொன்னார். வேறுவழியில்லாமல் நண்பருக்கும், அவரது அண்ணருக்கும் போகும்போது மட்டும் உங்களுடன் கீரிமலைக்கு வருவேன். ஆனால் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்ததும் இடையில் வெளிக்கிட்டு போய்விடுவேன். கீரிமலையில் இருந்து வரும்போது, நீங்கள் அமர்த்திய...