பொறுப்புக்கூறல்
கொரோனா காலத்தில் கனடாவிலுள்ள அம்மாவின் மூத்த தமையனான பெரியமாமா
எனக்குப் போன் பண்ணி, எனக்கு கிட்டவாகவுள்ள தனது வீட்டைப் பார்க்கும் படியும், அங்கே
அவரது உறவினர் விற்ற வீட்டுடன் கூடிய காணியில்
மதில் கட்டுகின்றார்கள் என்றும், அவர்கள் அதனைச் சரியாகச் செய்கின்றார்களா என்பது பற்றி
அறியவும் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் பதிலாக, எனது கால் வருத்தத்தைப் பற்றியும்,
எனது வேலைச்சுமை பற்றியும் சொல்லி என்னால் முடியாது என்று முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டேன்.
இருந்தாலும் பின்னர் அவர் சொன்ன வேலையைச் செய்தேன். ஆனால்
அவருக்கு அது தெரியாது. அவருக்கு குறித்த வேலையை என்னால் செய்ய முடியும் என்று முதலில் சொல்ல மனம்வரவில்லை.
அப்படிச் சொன்னால் நிச்சயம் அந்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்
அந்தச்சூழலில் அதனைச் செய்ய எனக்கு தயக்கமும் மனச்சோர்வும்
இருந்தது உண்மை. அத்துடன் அவரது பிள்ளைகளும் என்னுடன் இந்தவிடயங்கள் பற்றிக்கதைப்பதில்லை. மேலும் அவரது மூத்த பிள்ளைக்கே அந்த வீட்டுடன் கூடிய
காணியை வழங்கியிருந்தார். அவரது மனைவியின் பல உறவுகள் அந்த இடத்தைச் சூழ்ந்து இருக்கின்றார்கள்.
நான் தேவையில்லாமல் அவரது உறவுகளுடன் பிரச்சனைகளுக்குப் போக
வேண்டிவந்துவிடும். அதனாலே தான் முடியாது என்று முதலில் சொல்லிவிட்டு, பின்னர், வாய்விட்டுக்
கேட்டுள்ளார் என்பதற்காகப் போய் பார்த்து, அயலிலுள்ள உறவுகளுடன் கதைத்து, தவறுகள் நடக்காத முறையில் அவர்களைக் கையாண்டுவிட்டு
வந்தேன். பின்னர் மாமாவிற்கும் அதனை தெரிவிக்க முனைந்தேன். ஆனால் அவருக்கு அதுபற்றி
ஒன்றும் தெரியவில்லை என்பதை தற்போது அறிந்தேன்.
அவரின் வார்த்தையை முதலில் மறுத்தாலும்
பின்னர் மனம்மாறி, மதித்துச் சென்றேன்.
இறைவன் கிருபையால், அங்கே எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல்
ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு வீடுவந்தேன்.
உறவுகளின் பிரச்சனைகளுக்குள் போவதால், தேவையில்லாமல் மேலும்
பல பிரச்சனைகள் வந்துவிடலாம். இயன்றவரை, இவ்வாறான உதவிகளை தவிர்ப்பது மூன்று பகுதியினருக்கும்
நல்லது.
ஆ.கெ.கோகிலன்
20-05-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக