விபரீத ஆசை

 



மெலோனியா என்ற நாட்டில் வாழ்ந்த சாரங்கியன் என்பவன்  சிறந்த உடலழகைக்கொண்டவன். அறிவிலும் சிறந்தவன் என்று கருதப்படுகின்றான்.

அந்நாட்டில்,  மக்கள் இயற்கையை வெல்வதற்காக பல ஆய்வுகளைச் செய்கின்றார்கள். வரும் காலம் சிறப்பாகவும், அழகாகவும், அறிவாகவும் இருக்க பல திட்டங்களைத் தீட்டுகின்றார்கள். அதில் முடிவாக வருங்காலச்சந்ததிகளின் தோற்றம் இவ்வாறாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்ப செயற்பட முனைகின்றார்கள்.

அந்த முயற்சியில், சாரங்கியனும் வருங்கால சந்ததி உருவாக்கத்தின் ஒரு கர்த்தாவாக மாறுகின்றான். அந்நாட்டில் புதிதாக வந்த ஒரு சட்டம் அதற்கு உதவுகின்றது.  அது விந்தணுத்தானம் செய்யலாம் என்பதும், யாரும் அதனைப் பயன்படுத்தலாம் என்பதுமே அது.

நாட்டில் பலர் பயன்படுத்துகின்றார்கள்.

எல்லோரும் நினைத்த மாதிரி சில வருடங்களில் அந்நாட்டு இளம் சந்ததி அழகான அறிவான சந்ததியாக வந்து உலகுக்கே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கின்றார்கள். 

 

தொடர்ந்து வரும் காலத்தில் அந்நாட்டின் புகழ் பரவுகின்றது. உலகில் அழகானவர்கள் உள்ள நாடு என்ற பட்டியலில் முதலிடம் பெறுகின்றது.  அந்நாட்டின் மேல் பல அயல்நாடுகளுக்கு ஆசைவருகின்றது. அது பேராசையாக மாற, போர்கள் பல வருகின்றன. அந்த அழகான நாட்டு இளம் சந்ததிகள் போராட வலுவின்றித் தோற்று அழிகின்றார்கள். அந்நாட்டின் ஆட்சியாளர்கள் அப்போது தான் தாம் செய்த தவறை உணர்கின்றார்கள். விந்து தானத்தைச் சட்டமாக்கியது எவ்வளவு பெரிய தவறு என்பதும், பல சாரங்கியன்களையும், சாரங்கிகளையும் உருவாக்கினார்களே தவிர, எல்லாத் தன்மைகளையும் கொண்டுள்ள மக்களைத் தொலைத்ததன் பயன் தான் இது என்பதையும் உணர்ந்து, இயற்கையை மீறக்கூடாது என்று நிச்சயப்படுத்திக்கொண்டார்கள்.

 

ஆ.கெ.கோகிலன்

29-04-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!