பல்லைக்காட்டுவதும், பல்லைக்கடிப்பதும்..!
இரண்டு விதமான கொள்கைகளுடன் இப்பூமியிலுள்ள மக்கள் செயல்படுகின்றார்கள். அதில் ஒரு விதமான மக்கள் நல்லதையே செய்யவும், நல்ல
எண்ணத்துடனே மற்றவர்களைப் பார்க்கவும் பழகவும்
விரும்புவது மட்டும் அல்லாமல் மற்றவர்களும் தம்மிடம் அவ்வாறு தான் நடப்பார்கள்
என்ற எண்ணத்துடன், தமக்குப் பல்லைக்காட்டும் மக்களைக் கருதுகின்றார்கள். சுருக்கமாகச்
சொன்னால் நல்லவர்களுக்கே மக்கள் மதிப்பையும், மரியாதையும் உண்மையாகக் கொடுப்பார்கள்
என்பதை வெளிப்படுத்தவே முகமலர்ச்சியுடன் சிரிப்பை வழங்குவார்கள். அதனையே நான் நல்லவர்களுக்கு மக்கள் பல்லைக்காட்டுவார்கள் என்றேன்.
இன்னோர் வகையினர், உண்மையாக, நேர்மையாக, நிம்மதியாக நடக்கவேண்டும்
என்ற கொள்கையில் பயணிக்காமல், தாம் நினைத்தமாதிரியான வாழ்க்கையை வாழ எதனையும் செய்ய
தயாராகவே இருக்கக்கூடிய மனநிலைக்குத் தம்மைத் தயார்படுத்தி, அதற்கேற்ப கெட்டவனாகவோ
அல்லது ரவுடியாகவோ அல்லது சுயநலவாதியாகவோ அல்லது ஏமாற்றுப்பேர்வழியாகவோ அல்லது பணத்தாசை,
பெண்ணாசை, பதவியாசை, மண்ணாசை போன்ற பல ஆசைகளால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்து, தாமும்அவதிப்பட்டு, மற்றவர்களையும் அவதிப்படுத்தத் தயங்காதவர்களை, மக்கள் கோபத்துடன் கூடிய முழித்த பார்வையும், மூடிய வாயுடனுமே நேருக்கு
நேர் நோக்குவர். சுருக்கமாகச் சொன்னால், பல்லைக்கடித்து
முகத்தை இறுக்கும் நிலைக்கு மக்களைக் கொண்டுவருபவர்களே என்னைப்பொறுத்தவரை கெட்டவர்கள்..!
ஆ.கெ.கோகிலன்
28-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக