நேர முகாமை..!

 



இன்று காலை 7.00 மணிக்கு நண்பரின் வீட்டில் நிற்கக்கூடியதாக எனது கடமைகளைச் செய்து, அவர் வீட்டிற்கு வரும்போது சொன்னார் ”கொஞ்ச நேரம் மெனக்கடவேண்டியிருக்கும் பராவாயில்லை தானே என்று..! ” நானும் வேறுவழியின்றி, பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, எத்தனை மணிக்கு கீரிமலைக்குப் போகக் கூடியதாக இருக்கும் எனக்கேட்க  ”7.30 அல்லது 8.00இற்குள் போகலாம்..” என்றார். ஆனால் 8.00 மணி தாண்டும்போது தான் புரிந்தது தற்போது போகும் எண்ணமில்லை.  நண்பரின் தமையனும் எனது நண்பரே. அவரும் சொன்னார் ”சடங்குகள் செய்வதற்கு, சோறு, பொங்கல், வெண்பொங்கல், ரொட்டி போன்றன இன்னும் செய்யவில்லை. செய்துகொண்டு தான் போகலாம்..”  நான் நினைத்தேன் இன்று 10.00 மணிக்குக் கூடப் போகமுடியாது போலும் என்று..! மனைவி சரியாக காலை 11.00 மணிக்கு சாமத்திய வீட்டுக்குப் போகக்கூடிய வகையில்  வரச்சொன்னார். வேறுவழியில்லாமல் நண்பருக்கும், அவரது அண்ணருக்கும் போகும்போது மட்டும் உங்களுடன் கீரிமலைக்கு வருவேன். ஆனால் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்ததும் இடையில் வெளிக்கிட்டு போய்விடுவேன்.  கீரிமலையில் இருந்து வரும்போது, நீங்கள் அமர்த்திய குளிர்சாதன வசதியுள்ள குளு குளு வண்டியில் வாருங்கள் என முன்னரே சொல்லி, எனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தினேன்.

ஆனால் ஆச்சரியம், எல்லா அலுவல்களும் மிகவிரைவாக முடிந்து காலை 9.00 மணிக்குள் கீரிமலைக்குச் சென்றுவிட்டோம். 10.30இற்குள் சடங்குகள் நிறைவடைந்து, ஜயருக்கும் தட்சணை கொடுத்துவிட்டு, உடனடியாகக் கேணியில் குளித்து, அவர்களிடம் சொன்னது போல் அனுமதிபெற்றுக்கொண்டு 11.00 மணிக்கு வீடுவந்துவிட்டேன். பின்னர் நல்ல தண்ணீரில் மீண்டும் குளித்து, 11.30இற்கு வெளிக்கிட்டு, 11.45இற்கு கிட்ட ராஜா  ஹோலிலுள்ள சரஸ்வதி மண்டபத்திற்கு வந்துவிட்டேன். அங்கே சடங்குகள் மெதுவாக நடந்துகொண்டிருந்தன. 1.00 மணியளவில் சாப்பிட்டு, 1.15 மணியளவில், எங்களுடன் மேலும் நால்வரைக்கூட்டிக்கொண்டு வந்து, அவர்களுடைய  வீடுகளுக்குக் கிட்ட இறக்கிவிட்டு, எமது வீடு வர  ஏறக்குறைய மாலை 1.30 ஆகிவிட்டது. நினைத்த அனைத்துக்கடமைகளையும் ஒருவாறு செய்து முடித்ததில் பெரிய திருப்தி. என்ன செய்வது சமூகத்துடன் சேர்ந்து ஓட வேண்டும். இல்லையாயின், எமக்கு உதவ, எம்முடன் சேர்ந்து ஓட ஒருவரும் கிடையாது போய்விடும். ஊருக்காகவும் ஓட வேண்டும். நமக்காகவும் ஓடவேண்டும். ஆகமொத்தம் நேரத்தோடு நாமெல்லாம் ஓடித்தான் ஆகவேண்டும். இல்லை என்றால் நேரம் எம்மை விட்டு ஓடிவிடும்..!

 

ஆ.கெ.கோகிலன்

21-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!