ஒடியல் கூழ்..!
அண்மையில் எமது பகுதியில் கடும் வெயில். அதனால் புளுக்கம்
வேறு. மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. வசதிபடைத்தவர்கள், ஏசி பயன்படுத்துவார்கள். இப்படியான சூழலில் இன்று
மேதினம். உழைப்பாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடி வெற்றிபெற்ற தினம். உழைப்பாளிகள்,
இன்றைய நாளில் ஓய்வாக இருப்பதும், தமது நலன்கள் தொடர்பில் சிந்திப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும்,
கூட்டங்கள் வைப்பதற்கும், போராட்டங்கள் நடத்துவதற்கும் உரிய நாளாகும்.
இந்நாளில் எனது மகளிற்கு ரீயூசன் வகுப்பு இருந்தது. பஸ் சேவை
குறைவாக இருந்ததால் அவரை நான் கூட்டிச்சென்று, ரியூசன் சென்ரரில் இறக்கிவிட்டு வரும்போது,
அம்மா வீட்டிற்கும் சென்றேன். அப்போது எனது நண்பரும், உறவினருமான ஒருவர் வீட்டிற்கு
அழைத்தார். அங்கே பலர் சேர்ந்து கூழ் காய்ச்சிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் நானும்
இணைந்தேன். பல சுவாரசியமான கதைகளுடன் பனம் சாறும், கூழும் கலந்து குடித்து மகிழ்ந்தோம்.
ஒரு கட்டத்தில், உடம்பு இட்டுமுட்டாக இருந்தது.
அந்த நண்பருக்கும், ஏனைய நண்பர்களுக்கும் சொல்லிவிட்டு வீடு வந்தேன். வயிறுமுட்ட கூழ்
குடித்ததால் பசிக்கவில்லை. சுடலைக்கு எனது
காரைக் கொண்டு சென்றதால் நண்பர் ஒருவர் காரை கழுவிவிடச்சொன்னார். அவரின் சொல்லிற்கு
மதிப்பளித்து, காரைக்கழுவி பின்னர் என்னையும் தோயலூடாகக்கழுவி, உறங்கலுக்குச் சென்றேன்.
உழைப்பாளர் தினத்தில் சிலர் வேலைசெய்ய வேண்டும் என்று அடம்பிடித்துச்
செயற்படுவது, தொழிலாளர் புரட்சியை அவமதிப்பது போலாகி விடுகின்றது. பணம் சம்பாதிப்பது
அவசியம் தான். அதைவிட அவசியம் தனது உடலையும், உள்ளத்தையும், உறவையும், ஊரையும் கவனத்தில்
கொள்வது. இந்த நாளிலாவது அது நடக்க வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
01-05-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக