நாய் சேகர் Return..!
பல வருடங்களாக வைகைப்புயல் வடிவேலு படங்கள் வருவதில்லை.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் பேசி அமைதியானவர், மீண்டும் ஆட்சி மாறியபின்னர் படங்களில் தலைகாட்டத்தொடங்கியுள்ளார். அவர் நாயகனாக நடித்த படம் தான் நாய் சேகர். அண்மையில் சதீஸ் நடித்து இதேபெயரில் ஒரு படம் வந்தது. அந்தக்குழப்பம் வரக்கூடாது என்பதற்காக பெயரில் சிறு மாற்றம். அது நாய் சேகர் Return..!
படத்தின் கதை ஒரு நாயால் அதிஷ்டம் பெற்ற ஒரு குடும்பம், நயவஞ்சகன்
ஒருவனால் நாயை இழந்து, ஏழ்மைக்கு வருகின்றது. நாயைப் பெற்றவன் அதிஷ்டம் பெற்று, பணக்காரனாக
வாழ, மீண்டும் அந்த அதிஷ்ட நாயைக் கைப்பற்றிப் பணக்காரன் ஆவதே கதை.
உழைப்பை நம்பி வாழும் மக்களிடையே நாயை நம்பி வாழ சொல்லும்
இந்தக்கதையில் வரும் அனைத்துக் காமெடிக்கதாபாத்திரங்களும் இடையிடையே சிரிப்பை வரவழைப்பது
உண்மை. இருந்தாலும் சீரியஸ் இல்லாமல் படம் செல்வது கதையுடன் ஒட்ட மனம் வரவில்லை.
விஜய் டிவி காமேடி நடிகர்கள், பிக்போஸ் சிவானி, ஆனந்தராஜ்,பழைய நடிகை சச்சு போன்றவர்கள்
நடித்துக்காட்சிகள் மாற உதவினார்கள். காட்சிகளின்
ஒளிப்பதிவு பார்க்க நன்றாக இருந்தது. சுராஜ் என்பவர், அவரது வழமையான பாணியிலே இயக்கியிருந்தார்.
படத்தை ஒருமுறை வடிவேலுவிற்காகப் பார்க்கலாம்.
ஆனால் பொறுமை வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
14-05-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக