பொன்னியின் செல்வன் பகுதி 2
ஏற்கனவே எனது அம்மா மற்றும் மனைவி குடும்பத்தாருடன் இரு முறை பொன்னியின் செல்வன் பகுதி 1 இனைப்பார்த்தேன். இன்று பகுதி 2 இனை மனைவி குடும்பத்தாருடன் பார்த்தேன். அதற்காக சில நாட்கள் முன்பே bookmyshow இல் Tickets இனை முன்பதிவு செய்து, பெற்றுக்கொண்டேன். படம் அரங்கு நிறைந்த காட்சியுடன் நகர்ந்தது..! வழமையான மணிரத்தினத்தின் தாக்கங்கள் பல இடங்களில் தெரிந்தன. பல காட்சிகள் கல்கியின் நாவலில் இருப்பதைவிட மாற்றப்பட்டு இருந்தன. படமே நாவலின் தழுவல் என்றும், வரலாறு அல்ல எனவும் சொல்லப்பட்டதால், குழப்பமில்லாமல் படத்தைப் பார்க்க முடிந்தது. படம் தொடங்கி, முடியும் வரை போரடிக்காமல் இருந்தது. எனது பிள்ளைகள், மனைவி, அவரின் சிறிய தாயார் என எல்லோரும் படம் சிறப்பாக இருந்ததாகக் கூறினார்கள். நாவலில் பல காட்சிகளும், கதாபாத்திரங்களும் மாற்றப்பட்டது பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஆனால் நாவல் பற்றியும், கதாபாத்திரங்கள் பற்றியும் எனக்குத் தெரிந்ததால், கவலை இருந்தது. என்ன செய்வது, இதாவது படத்தில் வந்ததே என்று சந்தோசப்பட்டேன். இதனை 5 பாகங்களாகத் திரைப்படமாக எடுக்க யாராவது முன்வந்தால் நன்றாக இருக்கும். அப்படியான படங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. இரண்டு பாகங்களுடன் முடிக்க வேண்டும் என்று ஏன் வரையறை வைக்கவேண்டும். கல்கி மூன்றுவருடமாகத் தொடராக எழுதும்போது Twist and Turn வைத்தே எழுதியிருந்தார். இந்நாவலை 5 பாகமாக எடுத்தால், 5 பாகத்திலும் Twist and Turn வைத்து எழுதி, இனி யாராவது மணிரத்தினத்தை விட அழகாகப் பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதற்கு, வாய்ப்பை இப்படத்தின் மூலம் மற்றவர்களுக்கு அவர் விட்டுக்கொடுத்துள்ளார். இனி மணிரத்தினத்தைக் குறை சொல்வதைவிட, இன்னும் சிறப்பாக அந்தப்படத்தைப் பல பாகங்களாக எடுப்பதற்குத் தகுதியான இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்வரவேண்டும்.
இந்தப்படத்தைப் பொறுத்தவரை, அனைவரின் பங்களிப்பும் ரசிக்கவும்,
பாராட்டவும் கூடியதாக இருக்கின்றன. ஆனால் படம் மட்டும் மணிரத்தினத்தின் பொன்னியின்
செல்வன் என்றே சொல்லத்தோன்றுகின்றது..! வேண்டும் என்றால் ஜெயமோகனையும் குமாரவேலுவையும் அவருடன் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆ.கெ.கோகிலன்
04-05-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக