உணவுத் திருவிழா

 


நாடு பொருளாதார இறுக்கச் சூழலில் இருக்கும்போது தான் மக்களுக்கு உணவின் முக்கியத்துவம் புரிகின்றது..!

காற்று, நீர், உணவு என்பது உயிர்களின் அடிப்படைத்தேவை. இயற்கையே இவற்றை இலவசமாக வழங்கியது. ஆனால் ஆசைகளாலும், ஆணவங்களாலும் அவை எல்லோருக்கும் இலவசமாக கிடைக்காமல் போய், இப்போது காசு கொடுத்தே வாங்கவேண்டியுள்ளது.

மனிதர்களுக்கு மாத்திரமே இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமே அறிவு என்னும் அன்பை அழிக்கும் பேராயுதமே.

இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆதிகாலத்தில் இருந்தே வருகின்றது. இதனடிப்படையில்  தான் பொருளாதாரமும், வணிகமும் வளர்ச்சி பெற்றன. அந்த வளர்ச்சியின் அடிப்படையிலே ஏற்றத்தாழ்வுகளும் தோன்றின. உலகமும் பிளவு பட்டது. உலகமே பெரும் சிக்கலாகவும், மனித வர்த்தக மையமாகவும் மாறியது. அம்மாற்றம் இன்று வரை மனிதன் என்ற உயிரை மட்டும் அதிகமாக ஆட்டிப்படைக்கின்றது.

இந்தச் சூழலில் எமது நிறுவன சில கற்கைநெறி மாணவர்கள் உணவுத்திருவிழா செய்ய அனுமதி கேட்டார்கள். நானும் அனுமதியைக் கொடுத்தேன். இரு நாட்களும் மிகச்சிறப்பாகச் செய்தார்கள். முதன் நாள் நான்  பங்குபற்றி, உணவுத்திருவிழாவை ஆரம்பித்து வைத்தேன். இரண்டாம் நாள் கச்சேரியில் நடைபெற்ற கூட்டம் காரணமாகக் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் சில உணவுகள் நான் சுவை பார்க்க கிடைத்தன. எல்லாம் மிக நன்றாகவும் சுவையாகவும் இருந்தன. இதனை செய்ய வழிநடாத்திய எமது நிறுவன துறைத்தலைவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் எனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்து, நானும் மகிழ்கின்றேன்.

“உணவே மருந்து..”

“ அன்பே உயர்வு..”

 

ஆ.கெ.கோகிலன்

04-05-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!