திருகோணமலை பஸ் சேவை..!
நான் இங்கு வந்து ஏறக்குறைய 6 மாதங்களுக்கு மேலாகின்றது. ஆரம்பத்தில் காரில் வந்தாலும், பின்னர் அரச பேருந்திலே பயணிக்கின்றேன். போகும்போதும் வரும்போதும் எமது நிறுவனத்தை தாண்டித்தான் செல்லவேண்டும். அதனால் பஸ்ஸில் பயணிப்பது இலகு என்றாலும், ஒவ்வொரு முறையும் திருகோணமலையில் இருந்து யாழ்வரும்போது சீட் கிடைப்பது கடினம். நின்று தான் வரவேண்டும். வவுனியா தாண்டுவதற்குள் எப்படியாவது சீட் கிடைத்துவிடும். யாழில் இருந்து வரும்போது புக்பண்ணி வருவதால் சீட் எப்படியும் கிடைக்கும். இருந்தாலும் இவ்வாறு யாழிற்கும், திருகோணமலைக்கும் செல்லும் பஸ்களின் தரம் மிகவும் குறைவாகவே இருக்கும். சீட்கவர்கள் கிழிந்து கேவலமாக இருக்கும். சீற் கம்பிகளும் சரியான முறையில் வெல்டிங் செய்யாதபடியால் உடைவது போலிருக்கும்..! நேற்று, யாழில் இருந்து வெளிக்கிடும்போதே கடும் சனம். மூச்சுவிட முடியவில்லை. போனகிழமை இரு நாட்கள் லீவு வந்ததால், மக்கள் தூர இடங்களுக்கு சென்றுவந்துள்ளார்கள். அதனால் வழமையை விட அதிக கூட்டம்..! இந்த நிலையில் புக்பண்ணி வந்தாலும் மக்களின் கஷ்டங்களைப் பார்த்தால் நாங்களும் தொடர்ந்த...