ரத்தினம்..!
நடிகர் விஷாலின் படங்கள் என்றால் சண்டைகளுக்குப் பஞ்சம் இருக்காது.
அதேபோல் இயக்குனர் ஹரியின் படங்களும் விறுவிறுப்புக்கு பாங்கம் இருக்காது. அவர்களின்
வழமையான சூத்திரத்தின் அடிப்படையிலேயே இந்தப்படமும் அமைந்துள்ளது.
இதன் காரணமாக, இவர்கள் இருவர்களின் படங்களிலும் எனக்கு ஆர்வம்
குறைவு. இருந்தாலும் நீண்டகாலத்திற்குப் பிறகு ஏதாவது புதுமையாகச் செய்திருப்பார்களா
என்று பார்த்தால், எல்லாப்படங்களின் சேர்மானமாகவே இந்தப்படமும் இருப்பது ரசிக்க முடியவில்லை.
ஒரே ஒரு ஆறுதல்..! இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயினை காதலிக்க முடியாத வகையில் கதையைக்கொண்டுபோயுள்ளார்
இயக்குனர்..! ஆகவே காதல் பாட்டுக்கள் இல்லை. சோகப் பாட்டுக்களே அங்காங்கே இருந்தன.
படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ரத்தம், சதை, கை,
கால், தலை, உயிர்கள் என அறுத்து வீசுகின்றார்கள்.
இறைச்சிக்கடையில் வேலைசெய்தவர்கள் கூட இப்படி அறுக்க மாட்டார்கள்.
படத்தின் தொடக்கத்திலேயே கொள்ளையடிப்பதற்காக ஒரு பஸ்ஸையே மலையில் இருந்து விழுத்துகின்றார்கள்..!
பின்னர், விழுந்த பஸ்ஸில் ஒன்றிரண்டி பேர், தப்பி உயிர்பிழைக்க, அவர்களின் காதுகளையும்,
கைகளையும் அறுத்துக்கொள்ளையடிக்கின்றார்கள்.
ஹரியின் வழமையான படங்கள் போல் இவர்கள் எல்லாம் யார் என்று படம் முழுக்கத் தேடினால், ஒரு குடும்பத்திற்குள்
இருக்கும் அக்கா, தம்பி…! இந்த உறவுகளுக்கிடையே இவ்வளவு கொடூர எண்ணங்களும் கொலைவெறிகளும்
ஏற்படுகின்றன..!
படம் பார்க்கும் போது, நிறுத்த மனமில்லாமல் கதை வேகமாகப்
போகின்றது. புதுமைகள் இல்லாவிட்டாலும் பார்க்க போரடிக்கவில்லை. ஆனால் ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்துள்ளார்களா
என்றால் இல்லை என்ற பதிலைத் தாராளமாகச் சொல்லாம்.
காசு கொடுத்துப் பார்க்கும் நபர்களுக்கு ஏதாவது புதுப்பிரச்சனைகளைச்
சொல்லி, அதற்கான தீர்வு என்று கதையைக்கொண்டுபோனால் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கலாம். குறிப்பாக
வழமையான இந்த சூத்திரத்தைவிட்டு வேறு பாணியில் சென்றால் கூட நன்றாக இருந்திருக்கும்.
இந்தப்படத்தைப் பார்க்க, ஹீரோவைத் தவிர வேறு யாருக்கும் பலம் இல்லை என்ற எண்ணம் தோன்றும்.
படத்தை முழுமையாகத் தாங்குவது விஷால் தான். வழமைபோல் சிறப்பாகச் செய்துள்ளார். ஏனையவர்களின்
நடிப்பும் தரமாக இருந்தன. குறிப்பாக நாயகி பிரியா பவாணி ஒரு தாயாகவே மாறிவிட்டார்..! தொழில்நுட்பங்களும்
பரவாயில்லை. “போழுது போனால் போதும்..” எனநினைக்கும் மக்களுக்குப் படம் பிடிக்கலாம்.
எனக்கு ஏதாவது ஒரு விசேட அனுபவம் அந்தப்படத்தின் ஊடாகக் கிடைக்கின்றதா எனப்பார்ப்பேன்.
அப்படிப்பட்ட படங்களே எனக்குப் பிடிக்கும்.
ஹரியின் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கும், விஷாலின் விசிறிகளுக்கும்
இந்தப்படம் நிச்சயம் பிடிக்கலாம்.
ஆ.கெ.கோகிலன்
20-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக