டார்லிங்..!

 


இந்தப்படத்தை நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஏதோ தள்ளிப்போய்விட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர், 2015இல் வெளிவந்த திரில்லர் படம். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக அறிமுகமான படம்.

ஒரு பங்களாவில் தற்கொலை செய்யச் சென்ற குழு, கொள்கைமாறி, காதலில் விழ, அதற்குள் இன்னொரு காதல் ஜோடி, அந்த பங்களாவிற்குள் கொல்லப்பட்டு இறந்து, அதற்குப்பழிவாங்க, ஆவியான பெண் காதலி, தற்போதைய பெண் காதலியின் உடலுக்குள் புகுந்து செய்யும் சேட்டைகளும், அதனால் உண்டாகும் காமெடிகளும், கடைசியில், புதிய ஜோடியை வைத்து பழைய ஜோடியை அழித்த கயவர்களை கண்டறிந்து, அவர்களை பொலிசிடம் கொடுக்காமல் தாமே தண்டனை கொடுப்பதாகப் படம் முடிகின்றது.

அந்த நேரத்தில் இது ஒரு பெரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமாரும் இசையமைப்பாளர் தாண்டி ஒரு ஹீரோவாக கொலிவூட்டில் வலம் வருகின்றார்.

இந்தப்படத்தில் நடித்த அனைவரும் தமது சிறப்பான நடிப்பால் மக்களைக் கவர்கின்றார்கள். படத்தில் வரும் இன்னொரு ஹீரோ கலையரசன், படத்தின் முதலிலும், கடைசியிலும்  வந்து படத்தை முடித்து வைக்கின்றார்.  நிக்கி கல்ரானி  நாயகியாகவும், பேயாவும் இரண்டு மாறுபட்ட நடிப்பை வழங்கித்தனித்துத் தெரிகின்றார்..! புதுமைகள்  இல்லை என்றாலும் படத்தைப் பார்க்கலாம்.

ஏனைய தொழில்நுட்பங்களும் தரமாக இருக்கின்றது. இசையும், பாடல்களும் நன்றாக இருக்கின்றன.

சாம் அன்ரன் என்ற இயக்குனர் படத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். படம் பார்க்கும்போது தான் தெரிந்தது பல காட்சிகளை எங்கெங்கோ பார்த்த மாதிரி இருந்தது..! பின்னர் தான் புரிந்தது, பல வருடங்களுக்கு முன்னர் படம் வந்ததால், அடிக்கடி தொலைக்காட்சிகளில் போட்டு, காட்சிகளையே பழக்கப்படுத்தி விட்டார்கள். ஸ்டியோ ஸ்கிறீனின் தயாரிப்பு,  போட்ட பணத்தை திருப்பி எடுக்க, அதாவது இலாபம் அடைவதற்குத் தேவையான அனைத்தும் படத்தில் வைக்கப்பட்டுள்ளது..! இயக்குனரும் அதற்கு இணைந்து செயற்பட்டுள்ளார்.

இளைஞர்களுக்கும், திரில்லர் பட ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடிக்கும்.

 


ஆ.கெ.கோகிலன்

18-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!