எதிர்நோக்கும் அனுபவங்கள்..!

 



சில விடயங்களை எங்களுக்கு மனமே உணர்த்தும்..! ஆனால் சூழல் அதனை ஏற்க விடாது. சில நேரங்களில் போராட்டங்கள் பல நடக்கும். இருந்தும் நடப்பது நடந்தே ஆகும். எம்மால் செய்யக்கூடியது அதனை ஏற்றுக் கடந்து செல்வது தான்.

எனக்கு திருமணம் பேசும் போதே பல குழப்பான சூழல்கள் எனது வாழ்க்கையில் நடந்தன. இன்று, நான் இந்த அளவிற்கு வந்ததற்கு காரணம் இயற்கை மற்றும் இறைவனின் கருணை..!

அதற்காக நான் முயற்சிகள் செய்யாமல் விடுவதில்லை. என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வதுண்டு. ஆனாலும் நடப்பது நடந்தே ஆகும். அதைத் தாங்கப் பழக வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர் சில விடயங்களை எண்ணினேன். நடந்தால், அதற்கான பதில் கருமங்களை ஆற்ற வேண்டும். நடக்காவிட்டால், நான் எனது வழமையான நடைமுறையிலே பயணிக்க முடியும். எண்ணியது நடக்கவில்லை..! அதனால் வழமைபோலவே இருக்கின்றேன்.

கொய்யா காய்க்கு கல் எறிய மாம்பழம் விழுந்தது..!

மாம்பழத்திற்கு கல் எறிய

கல் தலையில் விழுந்தது..!

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமையாது. அப்படி அமைக்க முற்படுவதும் துன்பமே..!

வருவது வரட்டும் ஏற்போம். நல்லதோ கெட்டதோ ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இன்று ஒரு விசேடமான நாள். நான் நினைக்காக நேரத்தில் இரண்டு விடயங்கள் நடந்துவிட்டன. தற்போது திருகோணமலை வந்து, சரி இங்கேயே இருந்து ஓய்வைப் பெறலாம் என்று நினைக்க, பரீட்சைப் பணிப்பாளருக்கான நேர்முகத்தேர்விற்கு சமூகம் அளிக்கும்படி கடிதம் வருகின்றது. அதேநேரம் மகளின் பரீட்சை முடிவு சொல்லமுடியாத வகையில் வந்து  மனதை நொருக்கியது.

வாழ்வில் எதையும் வலிந்து எடுக்கக்கூடாது என்ற இயற்கையின் பாடம் இப்போது புரிகின்றது.

அதனால் வரும் வலியை தாங்குவதற்கு சக்தியை இயற்கையும், இறைவனும் தராவிட்டால் வாழ்வதே சவாலாகிவிடும்..!

எனது பிள்ளையைப் பொறுத்தவரை அவளால் முடிந்த வகையில் முயற்சிகளைப்போட்டாள். நான் அவளை தனியார் வகுப்புகளுக்கு கொண்டுசென்று முழுவதும் விடுவது கிடையாது..!  எனக்கு நேரம் கிடைத்தால் மாத்திரம் அவ்வாறான விடயங்கள் நடக்கும். ஆனால் அவள் தன்னால் இயன்றவரை கஷ்டப்பட்டுப் படித்தாள். இஷ்டப்பட்டுப் படிக்கச் சொல்வேன். ஆனால் அப்படிப் படித்தாளோ தெரியாது. அவளின் நிலையைப் பார்க்கும் போது எனக்கு மனம் மிகவும் வேதனையாக இருக்கின்றது. நான் கூட பக்கத்தில் இருக்கமுடியாத நிலையில் இருப்பதைப் பார்க்க யாரைக்குறை கூறுவது என்றே தெரியவில்லை. இந்த நாட்களைக் கடந்து சென்று,  வேறுசில நல்ல நாட்களுக்காக காத்திருக்கவே மனம் விரும்புகின்றது. பார்போம் என்ன நடக்கின்றது என்று..?

இருந்தாலும் மகள் சொல்கின்றாள் தன்னாள் முடியும் என்று..!

 

ஆ.கெ.கோகிலன்

31-05-2024.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!